தோழர் ஆர் சுகுந்தனுக்கு செவ்வஞ்சலி

தோழர் ஆர்.சுகுந்தன் எனும் கீர்த்தி வல்லபன் (வயது 75), தோழர் சாருமஜூம்தார் அவர்களின் அழைப்பை ஏற்று நக்சல்பாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். தனது குடும்ப உறவுகளை துறந்து.. மக்கள் நலனே..! கட்சியின் நலன்..! என்று நாற்பது ஆண்டுகாலம் பணியாற்றியவர். 1970களின் பிற்பகுதியில் தோழர் சுகுந்தன் சென்னை சிம்சன் தொழிற்சங்க இயக்கத்தின் போராட்ட முன்னணியாக செயலாற்றிய காலத்தில் சிபிஐஎம்எல் (லிபரேசன்) கட்சியில் முழுநேர ஊழியராக தனது புரட்சிப் பணியைத் துவக்கியவர்.

தோழர் என்.கே.நடராஜன் அவர்களுக்கு புகழஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மறைந்த மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் அவர்களுக்கு புகழஞ்சலிக் கூட்டம் கோவையில் 22.12.2022 அன்று மாலை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத் தோழர்கள் கொண்டு வந்திருந்த தோழர் என்.கே. நினைவுச் சுடரை, இகை(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கரிடமும் என்.கே.யின் குடும்பத்தினரிடமும் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து தோழர் என்.கே.நடராஜன் அவர்களின் திருவுருவப் படத்தை தோழர் திபங்கர் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மறைந்தார்! சிபிஐ-எம்எல் கட்சியின் ஆழ்ந்த இரங்கல்!

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மறைந்தார்! சிபிஐ-எம்எல் கட்சியின் ஆழ்ந்த இரங்கல்!

தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான பா.செயப்பிரகாசம் (வயது 80) அவர்கள், நேற்று திடீரென்று விளாத்திகுளத்தில் அவரது இல்லத்தில் மறைந்த செய்தி கண்டு அதிர்ச்சியுற்றோம்.

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் தலையீடு காரணமாக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டது ஆகஸ்ட் 14 என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வரலாற்றுப் பிழையை தேவகோட்டை நகராட்சி நிர்வாகத்துக்கு புரட்சிகர இளைஞர் கழகம் சுட்டிக் காட்டி சரி செய்யுமாறு வலியுறுத்தி இருந்தது. அதைத்தொடர்ந்து அந்தப்பெரும் பிழையை நகராட்சி நிர்வாகம் திருத்தி இருக்கிறது. புரட்சிகர இளைஞர் கழகத்தின் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

தோழர் தட்சிணாமூர்த்திக்கு செவ்வஞ்சலி !

 

புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை இகக(மாலெ) கிளை நீண்ட கால உறுப்பினர் தோழர் தட்சிணாமூர்த்தி கடந்த 02.08.2022 அன்று மரணமடைந்தார். கட்சியின் போராட்டங்களில் குடும்பத்துடன் பங்கெடுக்கும் தோழர் அவர். 2007ல் இதகவில் இருந்து இகக(மாலெ) யில் இணைந்தவர்களில் பலர் திரும்பிச் சென்றுவிட இறுதி மூச்சுவரை கட்சியுடன் நின்றவர். தோழருக்கு செவ்வணக்கம்.