கோவை பள்ளிக்கூடத்தில் ஆர்எஸ்எஸ் சாகா நடத்த எதிர்ப்பு தெரிவித்த தோழர்கள் மீது போடப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி
கோவையில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆர்எஸ்எஸ் சாகா நடத்தப்பட்டதைத் தடுத்து நிறுத்தக் கோரி திரண்ட இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுவும் குறிப்பாக, இகக(மாலெ) கோவை மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் ஜூலியஸ் இருவர் மீதும் கோவை பீளமேடு காவல் நிலைத்தில் திட்டமிட்டு சங்கிகளுக்கு ஆதரவாக குற்ற எண் 1265/2021 இதச பிரிவுகள் 353 மற்றும் 506(2)ன் கீழ் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கினை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம்Crl.M.P. 1866/2022 Crl.OP (SR) /1864/2022 வழக்கில், பீளமேடு காவல் நிலையத்தில் போடப்பட்ட அந்தப் பொய் வழக்கின் முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பெரியார், அண்ணா பெயர் சொல்லி ஆட்சி நடத்தும் தமிழகத்தில் காக்கி உடையில் சங்கிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சங்கிகள் ஆதரவு, கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு திமுக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரும் நீதிமன்றத்தை நாடிச் செல்வது என்பது இயலாத காரியம். சங்கிகள் ஆதரவு காக்கிகளின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தகுந்த அடி கொடுத்துள்ளது.