இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை, 2022 ஜூலை 24 அன்று நடத்திய காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தமிழ்நாட்டிலும் காவிப் பாசிச கூக்குரல் கள் அதிகரித்து வரும் வேளையில், இதக (மாலெ) அழைப்பை ஏற்று தங்களின் அரிய நேரத்தை ஒதுக்கி இந்த காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்டு மாநாட்டை வெற்றிபெறச் செய்த சிபிஐ, சிபிஎம் கட்சிகள், விசிக, பச்சை தமிழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைவர்களுக்கு நன்றி யையும் மாநிலம் முழுவதிலுமிருந்து பெருந்திர ளாய் கலந்து கொண்டுள்ள செயல்வீரர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகளையும் மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

பொய், பயங்கரவாத அச்சுறுத்தல், மக்களைப் பிளவுபடுத்துதல், ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக உண்மை, நல்லிணக்கம், துணிவை உயர்த்திப் பிடித்து மதவாத, கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்கொள்வோம்!

இன்று நாடு ஒரு நெருக்கடியான கட்டத்தில் இருக்கும் போது தஞ்சாவூரில் நாம் கூடியிருக்கி றோம். மதவாத பாசிசம் என்பது ஒரு சிந்தனைப் போக்காக ஒரு சித்தாந்தமாக மாத்திரம் இப்போது இல்லை, அது இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் எதார்த்தமாக இன்றைக்கு நிலவுகிறது. மதவாத பாசிசம் ஆட்சி அதிகாரத்தை பிடித்திருப்பதன் மூலம் அது இந்தியாவை சீர்குலைக்கப் பார்க்கிறது. இந்திய வகை பாசிசம், அதனுடைய தன்மைகள், வளர்ச்சி, அதை எப்படி எதிர் கொள் வது? எதிர்த்து எப்படி போராடுவது? என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

சாரு மஜும்தாரும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்மிக்க மரபும்

கொல்கத்தாவின் லால்பஜார் போலீஸ் லாக் அப்பில் தோழர் சாரு மஜூம்தார் இறந்து 50 ஆண்டுகளாகி விட்டன. நக்சல்பாரியைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பரவிய புரட்சி அலைக்கு அவரது மரணம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அந்த சமயத்தில் இந்திய அரசு எதிர்பார்த்து பெரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்க வேண்டும். ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி ஆட்சிக்கு எதிரான ஒவ்வொரு எதிர்ப்புக் குரலையும் ஒடுக்கும்போதும், 'நகர்ப்புற நக்சல்' என்று சொல்ல வேண்டியதாகி விட்டது.

நல்லிணக்கத்தையும் அமைதியையும் பேணிப் பாதுகாப்போம்!

வெறுப்புப் பேச்சிலிருந்து அரசு வன்முறையாக மாறியுள்ள இந்த பாதையைத் தடுத்து நிறுத்துவோம்! ஆத்திரமூட்டல்களை மறுதலிப்போம்! நல்லிணக்கத்தையும் அமைதியையும் பேணிப் பாதுகாப்போம்!

திராவிட மாதிரி 'சமூகநீதி', 'சமத்துவ அரசு'டன் கைகுலுக்கிய "ஆன்மீக அரசு"!

பெரியாரைக் கொண்டாடும் 'சமூகநீதி அரசு', அம்பேத்கரை போற்றும் 'சமத்துவ அரசு', ஆதீனங்கள், பிற்போக்கு சக்திகளின் அழுத்தத்துக்கு பணிந்து "ஆன்மீக அரசாகி"ப் போனது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது!

இலங்கையின் கோடை எழுச்சியும் இந்தியாவுக்கான பாடமும்

ராஜபக்சேவின் ஆட்சிக்கும் அதனுடைய மோசமான ஆட்சிமுறைக்கும் எதிராக 2022 மார்ச்சில் இருந்து இலங்கை மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அரசின் தவறான பொருளாதார நிர்வாகத்தின் காரணமாக  உணவு மற்றும் எண்ணை விலைகள் கடுமையாக உயர்ந்தன.

யார் குற்றவாளி?

பள்ளிக்கூடத்தில் (பெண்) ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருக்க கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்கள், ஆடிப்பாடிக் கொண்டிருக் கிறார்கள்.” “பேருந்தில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த மாணவிகள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக அடித்துப் புரள்கிறார்கள்” “பள்ளி மாணவன் ஒருவன்