ஜூன் 28, 2022 திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
மனித உரிமைப் போராளி பத்திரிகையாளர் டீஸ்டா செதல்வத் மற்றும் டிஜிபி ஸ்ரீகுமார் இருவரும் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் அவர்களையும் முன்னாள் காவல் அதிகாரி சந்சய் பட்டையும் விடுதலை செய்யக்கோரியும் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறக்கோரியும் அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள் ஜி.ரமேஷ், ப.செந்தில்குமார், கு.பழனி, அப்துல் நிஜாம், ஆரிப், பாதுஷா, ரிஸ்வானா , மாரி லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.