காலங்கள் மாறும்! சர்வாதிகாரம் முடிவுக்கு வந்தே தீரும்!

மோடி அரசாங்கம் கலங்கிப் போயிருப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என்று வழங்கிய தீர்ப்பினால் மோடி அரசாங்கம் கிடுகிடுத்துப் போயுள்ளது. நன்கொடை வழங்கியவர்கள், பெற்றவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. தலைமை நீதிபதிக்கு தொல்லை கொடுக்கவும், நீதித்துறையை மிரட்டவும் பாஜகவோடு நெருங்கிய தொடர்பில் உள்ள வழக்கறிஞர்கள் ஒன்றுபட்டு செயல்படுகின்றனர். சந்தேகத்திற்கிடமான இந்த வழக்கறிஞர் குழுவினரால் கையெழுத்திடப்பட்ட கடிதத்தை மோடி அங்கீகரித்துள்ளார்.

2024 மே நாள் அறைகூவல்!

2024 மே நாள் அறைகூவல்!

இந்தியாவில் நடைபெற்று வரும் 7 கட்ட நாடாளுமன்ற தேர்தலினூடே இந்திய தொழிலாளி வர்க்கம் 2024 மே நாளை அனுசரிக்கிறது. சர்வதேச அரங்கில் ஏகாதிபத்திய போர்கள் தொடர்கின்றன. இஸ்ரேல் காசாவில் குழந்தைகள், மருத்துவ உதவிக் குழுக்கள் மீது கூட குண்டு வீசி தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது ஈரானும் யுத்த களத்தில் இறங்கியிருக்கிறது. ரஷ்ய உக்ரைன் போரும் முடிவில்லாமல் தொடர்கிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியத் தொழிலாளர்கள் ரஷ்ய ராணுவத்தால் ஈடுபடுத்தப்படுகின்றர்.யுத்த களத்தில் இருக்கும் இஸ்ரேலுக்கு இந்திய அரசே கட்டுமானத் தொழிலாளர்களை ஒப்பந்தம் போட்டு அனுப்பி வைக்கிறது.