தோழர்களே! சகோதர சகோதரிகளே! பொதுச் செயலாளர் அவர்கள் உரையாற்றி பல்வேறு வரலாற்று செய்திகளையும் இன்றைக்கு இருக்கக் கூடிய நிலைமைகளையும் எடுத்துரைத் திருக்கிறார்கள். பல்வேறு கருத்துக்களைக் கொண்டவர்களாக நாம் இருந்தாலும் இன்றைக்கு ஒன்றியத்தை ஆண்டு கொண்டிருக்கக் கூடிய சனாதன பாசிச மோடி அரசை வீட்டுக்கனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளுடன் இணைந்திருக் கிறோம். அமித்ஷா சிஏஏ எப்படியும் அமல்படுத் தப்படும் என்று கூறுகிறார். மன்மோகன் சிங் ஆட்சியில் இருக்கும்போது நாட்டில் பல இடங்களில் குண்டு வெடிப்புகள் நடந்தன. முஸ்லீம் இளைஞர்கள் கொத்துக் கொத்தாக கைது செய்யப்பட்டார்கள். ஊடகங்கள் அப்படியே பரப்பின. ஆனால், குண்டு வெடிப்புகளைச் செய்தவர்கள் முஸ்லீம்கள் அல்ல, அபிநவ் பாரத் என்கிற சனாதன அமைப்பினைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக பிரக்யா சிங் என்கிற பெண் சாமியார் என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் காவல் துறை தீவிரவாத தடுப்புப் படைத் தலைவர் ஹேமந் கர்கரே. பிரக்யா சிங் இப்போது ஒன்றிய அரசின் பதவியில் இருக்கிறார். புதிய இந்தியா என்ற பெயரில் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேசிய கல்வி என்கிறார்கள். மராட்டியத்தில் மராட்டிய மொழி அழிந்து கொண்டிருக்கிறது இந்தித் திணிப்பால். நம் முன்னோர்களால் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பிற்கு எதிராக நடத்திய போராட்டங்களால் அவர்களால் இங்கு இந்தியைத் திணிக்க முடியவில்லை. கல்வி வேலை வாய்ப்பில் ஒப்பீட்டளவில் தமிழ் நாட்டில் முன்னேற்றம் உள்ளது. தந்தை பெரியார் மிகப் பெரிய போராட்டமும் நடத்திய மிகப் அம்பேத்காரின், இடதுசாரிகளின் போராடமும் இதற்கு காரணம். மாநில உரிமைகள் மட்டு மல்ல, எல்லா மாநிலங்களும் அழிக்கப்பட்டு ஒரு சர்வாதிகார, பாசிச ஆட்சியைக் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக் கிறார்கள். நீதிமன்றங்களே இன்றைக்குக் கேள்விக் குறியாகிக் கொண்டிருக்கின்றன. அனிதா தற்கொலை செய்து கொண்டு சாகக்கூடிய நிலைக்குத் தள்ளப் பட்டதற்கு நீதிமன்றமும் ஒரு காரணம். இப்படிப் பட்ட சூழலில் சனாதனப் பாசிசத்தை வெளி யேற்றுவதற்கு போராட்டம் மட்டும்தான், புரட்சி மட்டும்தான் ஒரே வழி. நன்றி வணக்கம்.