2022 ஆகஸ்ட் 25 முதல் 27, வரை இகக (மாலெ) யின் மத்தியக் கமிட்டிக் கூட்டம் விஜயவாடாவில் உள்ள எம்.பி. விஞ்ஞான கேந்திரத்தில் நடை பெற்றது. கூட்டம் தியாகிகளான தோழர்களுக்கும் மறைந்த தோழர்களுக்கும் அஞ்சலி செலுத்தி துவங்கியது. நிலபிரபுத்துவ சக்திகளால் மே 10, 2022 அன்று படுகொலை செய்யப்பட்ட தோழர் கள் போஜ்புரி கம்டா பிரசாத், பய்ஜ்நாத் பிரசாத், அவருடைய மகன் அஜித்குமார், டினாஜியின் அரும் சென் குப்தா, கட்சியின் முன்னாள் மத்தியக் கமிட்டி உறுப்பினரும், 80களில் கட்சியின் பிரதிநிதிக் குழுவாக சீனா சென்று வந்தவருமான ராகேஷ் திவாகர், ஆசிரியரும் கலாச்சார செயல்பாட் டாளருமான ராஜேஷ், முன்னாள் தமிழ்நாடு மாநிலக் கமிட்டி உறுப்பி னரும் திருச்சி மாவட்ட கட்சி தலைமை குழு உறுப்பினருமாக இருந்து வந்த மகேந்திரன், தமிழ்நாட்டின் தோழர் மாணிக்கம், புதுச்சேரி தோழர் தட்சிணாமூர்த்தி, திரிபுராவின் அனந்த சுந்தரி ஜமடியா, ஹரன்பாலா நாத், கார்பி ஆங்கிலாங்கின் சிங்கில்லிஸ், மோகன் பே, ராஜென் ராங்பி, டெல்லியின் பாலி சரண் ராம், சிலிக்குரி உள்ளூர் கமிட்டி செயலாளர் மொஹம்மத் ஹக், 70களின் முற்கால நக்சல் தலைவரான லெபாசந்த் டுடு, கிழக்கு சம்பரானின் ஜமுன் பஸ்வான், கைமுரின் பாலிராம்பிரசாத், நவாடாவின் தேவானந்த் பிரசாத், போஜ்பூரின் ராம் நிகல் குஞ்சன், ஆல்வாரின் நதியா தேவி, ஜார்கண்ட் ராம்கரின் பொக்ரான் பேடியா, ராம்ஜி சிங், உத்தரப் பிரதேசத்தின் பாபு ராம் குஷ்வாகா, சன்குர் கோன்ட், கேந்திரபராவின் மாவட்டக் கமிட்டி உறுப்பினரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அன்சல்கிரி, ஒடிஷா கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபகர்களில் ஒருவரும் முன்னாள் மாநிலச் செயலாளரும் புவனேஸ்வரத்திலிருந்து மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்த சிவாஜி பட்ட நாயக், 1970 காலகட்டத்தில் இருந்து கம்யூனிச இயக்க மூத்த தலைவராய் இருந்த ஸ்ரீதர் மிஸ்ரா, பாரதிய கிஷான் யூனியனின் சவுத்ரி மகேந்திர சிங்கின் சகாவாக இருந்த குலாம் முகம்மதுஜௌலா, பீகாரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, 2020ல் இகக(மாலெ)யில் இணைந்த ராம்தேவ் வர்மா, கட்சியின் முன்னாள் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினரும் அசாமின்ஜன் ஜன்ஸ்கிரிட் மன்ஞ் மாநிலத் தலைவராக இருந்தவருமான ஹரேந்திரநாத் போர்தாகுர், அஸ்ஸாமின் டாக்டர் அப்துல் அஜித் அஹமது, வரலாற்று ஆய்வாளர் தேவபிரதா பானர்ஜி, ஏப்ரல் 10,2022ல் திரிகுட்டில் (திமோஹர்) நடந்த ரோப் வே விபத்தில் உயிரிழந்தவர்கள், மே 15, 2022 டெல்லி தீ விபத்தில் இறந்த முண்டகா ஆலைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இரண்டாம் நாள் அமர்வு தோழர் பிபி பாண்டேயின் முதலாம் ஆண்டு நினைவு தினமாக இருந்ததால் அன்று இரண்டு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது.
சில முக்கிய தீர்மானங்கள்
1. ராஜஸ்தானின் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் படித்து வந்த இந்திரா மேக்வால் என்ற ஒன்பது வயது தலித் சிறுவன் சாதியக் கட்டுப்பாடுகளை மீறி தலித்துகள் பயன்படுத்தக் கூடாது என்று வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்ததற்காக ஆசிரியரால் கொடூரமான முறையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தையும் குஜராத்தில் 2002 கலவரத்தின் போது பில்கிஸ் பானுவை பாலியல் வன்புணர்வு செய்து அவரது குடும்பத்தினரை கொலை செய்தவர்களுக்கு குஜராத் அரசாங்கம் தண்டனை குறைப்பு வழங்கி உள்ளதற்கும் மத்திய கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்தது. இந்திரா மேக்வால் படுகொலைக்கு காரண மானவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என மத்திய கமிட்டி கோரியது. ரோகித் வெமுலா, இந்திரா மேக்வால் என அதிர்ச்சியூட்டும் நிறுவன படுகொலைகள் சுட்டிக் காட்டும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நிலவும் தலித்துகளுக்கு எதிரான பாகுபாட்டுக்கு முற்றாக முடிவு கட்ட வேண்டும் என மத்திய கமிட்டி கோரியது. பில்கிஸ் பானோ வழக்கில் பாலியல் வன்புணர்வு, கொலைக் குற்றம் புரிந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறைப்பை ரத்து செய்ய வேண்டும் என மத்திய கமிட்டி வேண்டுகோள் விடுத்தது. குல்பர்க் சொசைட்டி வழக்கில் இசான் ஜெப்ரி மற்றும் இதர பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜாகீர் ஜெப்ரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, டீஸ்டா செதல்வத்தின் கைது நடைபெற்றது. அதற்கு நெருக்கமாக உடனே பில்கிஸ் வழக்கில் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்குகளில் தண்டனை பெற்று வந்தவர்களுக்கு வெகுமதி தரப்பட்டுள்ளது. குஜராத் படுகொலையை நடத்திய அனைவருக்கும் விடுதலை, தண்டனை குறைப்பு, பிணையில் விடுவிப்பது என்பதும் நீதிக்காக போராடிய காவல் துறை, உளவுத்துறை அதிகாரிகளான சஞ்சீவ் பட், ஆர்.பி.ஸ்ரீகுமார், மனித உரிமைச் செயற் பாட்டாளர் டீஸ்டா செதால்வாத் போன்றவர்களை கைது செய்வதும் கொடுமைப்படுத்துவதும் குஜராத் படுகொலைக்கான நீதியை திட்டமிட்ட வகையில் பின்னோக்கி தள்ளுவதையும் படுகொலை செய்வதையுமே சுட்டிக் காட்டுகிறது. அப்பட்டமான சாதிய ஒடுக்குமுறைக்கும் நீதியை படுகொலை செய்வதற்கும் எதிராக நாடு தழுவிய வலுவான எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைக்க மத்திய கமிட்டி அறைகூவல் விடுகிறது.
2. பீகாரின் மிகச் சமீபத்திய அரசியல் வளர்ச்சிப் போக்குகள் பற்றி மத்திய கமிட்டி விவாதித்தது. பாஜக அல்லாத புதிய அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு என்றும் புதிய அரசாங்கம் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை உருவாக்குவதோடு அதன் அமலாக் கத்தை கண்காணிக்க ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும் என்றும் அந்த மாநிலக் கமிட்டி சரியாகவே முடிவு செய்துள்ளது. புதிய அரசாங்கமானது 'பாஜக மாதிரி' அரசாட்சியை நிராகரித்து, மதவாத வெறுப்பையும் சமூக ஒடுக்குமுறையையும் உறுதியாக கட்டுப்படுத்த வேண்டும். சிவில் சமூகம் மற்றும் மக்கள் இயக்கங்கள் தொடர்பாக சாதகமான அணு முறையை கையாள வேண்டும். இந்த புதிய சூழலில் ஒட்டுமொத்த கட்சியும், ஒருபுறம் பாசிச எதிர்ப்பு இயக்கத்தை தீவிரப் படுத்துகிற அதே வேளை, இன்னொரு புறம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவு செய்யவும், மக்கள் நலன், அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றில் மேலான செயல்பாட்டை கொண்டு வரவும் கூடுதல் அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
3. கடும் விலைவாசி உயர்வு, பெரும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை பெரும்பாலான பிரிவு மக்களை மோசமான நெருக்கடிக்கு தள்ளி உள்ளது. சங் பாஜக நிறுவனம் மக்களின் கோபத்தை, அரச ஒடுக்கு முறையை தீவிரப் படுத்துவதன் மூலமும் மதவாத துருவ சேர்க்கையை உசுப்பி விடுவதன் மூலமும் சமாளிக்க முயற்சிக்கிறது. எதிர்க்கட்சி அரசாங் கங்களை நிலைகுலைய செய்வதும் கவிழ்ப்பதும், அதுபோல் எதிர்க்கட்சிகளை துன்புறுத்த அமலாக் கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை இன்ன பிற மத்திய முகமைகள், நிறுவனங்களை கருவியாக பயன்படுத்துவதும் நடக்கிறது. மகாராஷ்டிரா அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு, பீகாரை இழந்த பிறகு இப்போது மோடி-ஷா அரசாட்சி எப்படியாவது எப்பாடுபட்டாவது ஜார்க்கண்ட் அரசாங் கத்தை கைப்பற்றுவது என்பதில் குறியாக இருக்கிறது. இந்தப் பின்புலத்தில் பாஜகவின் பாசிச ஒடுக்கு முறைக்கு எதிராக நாம் கிளர்ச்சி நடவடிக்கைகளை முன் முயற்சிகளை எடுத்தாக வேண்டிய அவசியத்தில் உள்ளோம். அதே சமயம் பாஜக அல்லாத ஆட்சியில் உள்ள மாநிலங்களில் மக்களின் பற்றி எரியும் பிரச்ச னைகள் மீது போதுமான கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்திலும் இருக்கிறோம். நமது அறுதியிடலும் மக்களுடைய போராட் டங்களை, எதிர்ப்பியக்கங்களை தீவிரப்படுத்து வதும் எதிர்க்கட்சி ஒற்றுமையை தெளிவாக உறுதிபட செய்வதற்கும், 2024ல் மோடி ஆட்சியை தோல்வியடைய செய்ய வேண்டி யதன் அவசர அவசிய கூருணர்வை மக்களி டையே உருவாக்குவதற்குமான திறவுகோல் ஆகும். பீகாரில் பாஜகவுக்கு எதிரான நமது சக்தி வாய்ந்த அனைத்தும் தழுவிய எதிர்ப்பும், பற்றி எரியும் பிரச்சனை மீது வளர்ந்து வரும் எதிர்ப்பு இயக்கங்களும் பீகாரில் அரசியல் அணிச் சேர்க்கை ஏற்படுத்தவும் அதைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்திலிருந்து பாஜகவை அகற்றவும் உதவியிருக்கிறது.
மற்ற போராடும் சக்திகள் மாற்றுக் குரல்கள் கூடவே நமது தோழர்களும் தீவிரப் படுத்தப் பட்ட ஒடுக்கு முறையை,துன்புறுத்தலை, பழிவாங்கலை எதிர்கொள்கிறார்கள். உத்தரப் பிரதேச மாநிலக் குழு உறுப்பினரும் சிதாபூர் ஜில்லா பரிஷத் உறுப்பினருமான தோழர் அர்ஜுன் லால், அவருடைய ஜில்லா பரிஷத் தொகுதியில் தலித்துகளுக்கு நீதி கேட்டு போராடிய காரணத்திற்காகவே காவல் நிலைய சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அதேபோல கொப்பல் மாவட்டச் செயலாளரும் கர்நாடகா மாநிலக் கமிட்டி உறுப்பினருமான தோழர் சன்னா அனுமந்தா போலியான வழக்கில் இணைக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டி நடந்த கிளச்சியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, புதிதாக பீகார் மாநிலக் கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் தாரிக் அன்வர் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளார். கட்சித் தலைவர்கள் மீதான அடக்கு முறையை கண்டனம் செய்த மத்தியக் கமிட்டி நிபந்தனையின்றி அனைவரையும் விடுதலை செய்யுமாறும் போலியாக புனையப் பட்ட வழக்குகளை திரும்பப் பெறுமாறும் கோருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)