1. பாஜக ஆர்எஸ்எஸ் காவிப்பாசிசத்தை தனது மதவெறுப்பு அரசியல் நிகழ்ச்சிநிரலை மூர்க்கத் தனமாக திணித்திட, ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவரத் துடிக்கிறது; இந்திய சமூகத்தின் பன்மொழி பண்பாட்டுத் தன்மையை, கூட்டாட்சித் முறையை ஒழித்துக் கட்டி, சர்வாதிகாரத்தை நிலைநாட்டி வருகிறது. பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக அரசியலமைப்பு சட்டத்தை சீர்குலைத்து வருகிறது. மாநில உரிமைகளை பறித்து வருகிறது. ஒற்றை ஆட்சிமுறைக்கு எதிராக, கூட்டாட்சி முறைக்காகவும்! மாநில உரிமைகளை மீட்கவும் போராடுவோம் என்ற அழைப்பை ஏற்று, ஜுலை 24 தஞ்சை பாசிச எதிர்ப்பு மாநாட்டை தொடர்ந்து, இந்த பொது மாநாட்டிலும் பங்குபெற்றிருக்கும் இகக,இகக(மா), விசிக. மநேமக, மக்கள்அதிகாரம் கட்சிகளின் தலைவர்களுக்கு மாநாடு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கிறது. இந்தபாசிச எதிர்ப்பு அரசியல் ஒற்றுமையை வலுப்படுத்த, இடது, ஜனநாயக, முற்போக்கு, அம்பேத்கரிய, பெரியாரிய சக்திகளைக் கொண்ட விரிவான போராட்ட மேடையை உருவாக்கவும் மாநாடு உறுதி ஏற்கிறது.
2. ஆளுநர் வழியாக தமிழ்நாட்டில் இணையான அரசியல் அதிகாரம் செலுத்த முயற்சிப்பது பாஜக அரசின் வழிமுறையாக மாறியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல், தனது கடமைகளை உதறித் தள்ளிவிட்டு ஆர்எஸ்எஸ் கருத்தியலை பரப்புரை செய்பவராகவும் உள்ளார். தமிழ் சங்கமம் என்ற பேரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை புறக்கணித்து செயல்பட்டது அப்பட்ட மான ஜனநாயக விரோதச் செயலாகும். மாநில அரசு மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் அதன் கொள்கைகளுக்கு விரோதமாகவும் செயல்பட்டுவரும் தமிழ்நாடு ஆளுநர் பதவி விலக வேண்டும்! என மாநாடு வலியுறுத்துகிறது.
3. பாஜக ஆட்சியை வலுவாக ஆதரிக்கிற கார்ப்ப ரேட் பெருமுதலாளித்துவம், பொதுத் துறைகள், பொது நிதி, இயற்கை வளங்களை சூறையாட, தொழிலாளர் களை தனது விருப்பப்படி பணியில் அமர்த்தவும் துரத்தவும் ஒற்றை ஆட்சி முறையை விரும்புகிறது. பாஜக ஆட்சி, இந்திய தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் நான்கு சட்டத் தொகுப்பை புகுத்துகிறது. பாஜக ஒன்றிய அரசை பல்வேறு அம்சங்களில் எதிர்க்கும் திமுக அரசாங்கம் இந்த நான்கு சட்டத் தொகுப்பை நிராகரிக்க வேண்டும் அதற்கு எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என மாநாடு திமுக அரசை வலியுறுத் துகிறது.
4. "ஒரு தேசம், ஒரு ஆட்சி, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு," என்பது பாஜகவின் சித்தாந்தம். இதற்கேற்ப, வழக்கொழிந்துவரும் சம்ஸ்கிருதத்துக்கு உயிர் கொடுக்க, இந்தியைத் திணிக்க, முயற்சிக்கிறது மோடி-பாஜக ஆட்சி. ஆட்சி மொழி எனும் பெயரில் இந்தியைத் திணிக்கிறது. காசி தமிழ் சங்கமம் என்ற பெயரால், தமிழ் மொழியையும் தமிழ் ஆளுமை களையும் இந்து மயமாக்கி வருகிறது. இந்தி திணிப்புக்கு எதிராக, மொழி சமத்துவத்திற்காக போராடுவோம் ! என மாநாடு அழைப்பு விடுக்கிறது.
5. பாஜக அரசின் காவிப் பாசிசத்துக்கு எதிராக, ஒற்றையாட்சி முறைக்கு எதிராக, கூட்டாட்சி முறைக் காக, கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராக, தமிழ் நாட்டின் இடது, முற்போக்கு விழுமியங்களை பாதுகாத்திட, மக்கள் போராட்ட மாற்றணியை கட்டமைக்க பாசிச எதிர்ப்பு சக்திகள் ஒன்றிணைய முன்வர வேண்டும் என மாநாடு அழைப்பு விடுக்கிறது.
6. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கை பரிந்துரைகளை முழுமை யாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். குற்ற மிழைத்த ஆட்சியர் உள்ளிட்ட உயர் பொறுப்பிலுள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும், ஸ்டெர்லைட் ஆலை முதலாளி மீது குற்ற நடவடிக்கை எடுத்து தண்டிப்பதுடன் ஆலையை நிரந்தரமாக மூடவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாநாடு வலியுறுத்துகிறது.
7. கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி தொடர்பான நிகழ்ச்சியில் போராட்டம் செய்தவர்களை "கலவரக் காரர்கள்" என்று கூறி நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். முதன்மைக் குற்றவாளிகளான பள்ளி நிர்வாகிகளின் பிணையை ரத்து செய்ய வேண்டும். பள்ளியை மீண்டும் திறக்கக் கூடாது. மிக முக்கியமாக மாணவி கொலைக்கு காரணமான உண்மைக் குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டுமெனவும் திமுக ஆட்சியை மாநாடு வலியுறுத்துகிறது. மாணவி கொலைக்கு நீதி கேட்டு ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய முற்றுகை போராட்டத்தின் மீது அடக்கு முறையை ஏவிய காவல்துறையை மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
8.தமிழ்நாடு அரசாங்கம் உருவாக்கும் மாற்று கல்விக் கொள்கை, கல்வியை கார்ப்பரேட்டுகளிட மிருந்தும் கல்வி மாபியாக்களிடமிருந்தும் விடுவிக்க வேண்டியதை அடிப்படையாகக் கொண்டு, கல்வி தனியார்மயத்திற்கு வணிகமயத்திற்கு எதிரானதாக, தேசிய புதிய கல்விக் கொள்கைக்கெதிரானதாக உருவாக்கப்பட வேண்டும் என மாநாடு வலியுறுத் துகிறது.
9. பாஜக மோடி ஆட்சி, தொடர்ந்து தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைத்து வருகிறது. அதன் உச்சமாக, திட்டத்தை ஆய்வு செய்ய ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. அதன் உறுப்பினர் ஒருவர் தமிழ்நாடு, கேரளாவில் திட்டத்தை நிறுத்த வேண்டுமென கூறியுள்ளார். மோடி ஆட்சியின் வறியவர் விரோத நடவடிக்கையை மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. கிராமப்புர வேலையில்லா திண்டாட் டத்தை பெருமளவில் குறைக்கும் வகையில், பெரும் எண்ணிக்கையில் வேலை வாய்ப்பு வழங்கிடவும் ரூ.600 நாள்கூலி, 200 நாள் வேலை வாய்ப்பை வழங்கிடவும் ; பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விவசாயத்துக்கும் திட்டத்தை விரிவுபடுத்துமாறும் ஒன்றிய மோடி அரசை, திமுக ஆட்சி வற்புறுத்திட வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.
10. தமிழ்நாடு அரசாங்கம், தொழில் கொள்கைக்கு என ஒரு கமிட்டி உருவாக்கியது போல, தொழிலாளர் கொள்கைக்கு என தொழிலாளர் பிரதிநிதிகளான தொழிற் சங்க பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு கமிட்டி உருவாக் கப்பட வேண்டுமென மாநாடு கோருகிறது.
11. பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) என்ற பெயரால், பலவந்தமாக குடிசை வாழ் மக்களை அகற்றும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், ஏற்கெனவே குடிசைப் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட மக்களை அதே இடத்தில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் எனவும், இந்த மாநாடு கோரிக்கை விடுக்கிறது. பொலிவுறு நகரம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப் பட்ட டேவிதார் அறிக்கையை உடனடியாக வெளியிடு மாறு மாநாடு வலியுறுத்துகிறது.
12. வீடு, வீட்டுமனை கோரிக்கை மீது, தமிழ் நாடு முழுவதும், பல ஆண்டுகளாக இலட்சக்கணக் கான நகர்ப்புற, கிராமப்புற தொழிலாளர்கள் அணிதிரண்டு வருகிறார்கள்; தமிழ்நாடு அரசாங்கம் இக் கோரிக்கையை அமலாக்க ஒரு விரிவான திட்டத்தை அறிவிக்க வேண்டும். கோவில், மடத்து நிலங்களில் குடியிருக்கும் ஏழை, நடுத்தர மக்களுக்கு அந்த இடங்களையே சொந்தமாக்கிட வேண்டுமென மாநாடு வற்புறுத்துகிறது.
13. தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறைகள், அரசு சார் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளில், முழுமையாக தமிழ்நாட்டு இளைஞர்கள் புறக்கணிக்கப் படுகின்றனர். எனவே, தமிழ்நாட்டு பணிகளில் தமிழ் நாட்டு விண்ணப்பதாரர்களுக்கு 90% வழங்க வேண்டு மென மாநாடு கோரிக்கை விடுக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)