இந்த நிகழ்வினானால் மகிழ்ச்சியடை கிறோம். எங்களின் கட்சி அகில இந்திய மாநாட்டின் போது எதிர் கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நாங்கள் விரும்பினோம்.

கடுமையான வேலை நெருக்கடிக்கு மத்தியில் நித்தீஷ் ஜி வந்திருக்கிறார். தோழர் திருமாவளவனும் இங்கிருக்கிறார். ஜார்கண்ட் முதல்வர் கேமந்ன்த் சோரன் வர முடியவில்லை.

நாங்கள் சொல்ல விரும்புவது மிகவும் தெளிவான ஒன்று அரசியல் சட்டமும் ஜனநாயக மும் அபாயத்தில் இருக்கின்றன என்றால், பின் என்னதான் மிச்சமாக இருக்கும்?

இவற்றைக் காக்க நாம் தீர்மானகரமான போரில் இறங்கியாக வேண்டும். அதற்கு மாபெ ரும் ஒற்றுமை தேவையானதாக இருக்கிறது. நாம் 70ன் அவரச நிலையை திரும்பிப் பார்ப்போம். இன்றைக்கு இருக்கும் அறிவிக்கப்படாத அவசர நிலையைப் பார்க்கும்போது அது பரவாயில்லை என்று தோன்றுகிறது. இன்றைய அவசர நிலை நிரந்தரமான ஒன்று என்று தோன்றுகிறது. இருந்த போதும் 70களின் அவரசநிலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அன்றைய அவசர நிலை எதிர்ப்புப் போராட்டத்தின் முன்னணிப் போராளியாக பீகார் இருந்தது. நிதீஷ் ஜியும், லாலு ஜியும் அந்த எதிர்ப்புப் போரின் விளைபொருட்கள் ஆகும்.

அந்த சமயத்தில் தோழர் ஜாகரும் பிறரும் போஜ்பூரில் தியாகியானார்கள். 1977ல் அந்த அவசரநிலை முடிவுக்கு வந்தது. தற்போதைய நிலை என்ன?

அவசரநிலையை தலைமைதாங்கி நடத்துபவர்கள், மனு வேதம்தான் தங்களின் அரசியல் சட்டம் என்று வெளிப்படையாகச் சொல் கிறார்கள். காவிதான் எங்களின் கொடி என்கின் றனர். இதனை அவர்கள் 1947லேயே சொல்லி விட்டார்கள். 

இப்போது அவர்கள் அரசியல் சட்டத்தின் வழியில்தான் வேலை செய்கிறார்கள். (அவர்கள் தடை செய்யப்பட்ட பிறகு அவர்களுக்கு வேறு வழியில்லை). ஆனால், அவர்கள் அரசியல் சட்டத்தை படுமோசமான வகையில் கிண்டல் செய்கிறார்கள்.

இந்தியாவின் இறையாண்மை, சோசலிசம், மதச்சார்பின்மை, ஜனநாயக குடியரசு என்ற அரசியல் சட்டத்தின் மைய நாடியான லட்சியங் களை அவர்கள் கண்டுகொள்வதாக இல்லை. அவர்கள் குடியுரிமை விதிகளை மீறுகிறார்கள். நம்மை மறுபடியும் அடிமைகள் ஆக்குகிறார்கள்.

நமது எதிரிகள் தெரு அதிகாரத்தையும் அரச அதிகாரத்தையும் ஒன்றாக்கிச் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு எதிராக நாம் அவற்றைத் திருப்ப வேண்டும். நாம் அவ்விரண்டையும் இணைக்க வேண்டும்.

பாரத ஒற்றுமை யாத்திரை நல்ல முறையில் தற்போது நிறைவடைந்துள்ளது. பூர்ணியாவில் மாபெரும் எதிர்க்கட்சிகள் பேரணி நடைபெற உள்ளது. குடிமக்கள் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய தலைவர்கள் சிறையில் இருக்கும்போது, விவசாயச் சட்டங்களுக்கு எதிரான இயக்கம் துடிப்புடன் எழுந்தது. நமது தோழர்கள் தொழிலாளர்களுக்கான பல்வேறு இயக்கங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜோஸிமத்தைக் காப்பாற்ற, அதுபோன்ற பிறவற்றைக் காப்பாற்றப் போராடி வருகிறார்கள். இதுபோன்ற சமயத்தில் எதிர்க்கட்சிகளின் ஐக்கியம் இந்த நிகழ்வுப் போக்கை முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறோம்.

எங்கள் அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியாக நடக்கும் அமர்வு எங்களின் கட்சி வேலைகளையும் பரந்துபட்ட எதிர்க்கட்சி நீரோட்டத்தையும் இணைப்பதாக இருக்கிறது.

நான் ஒவ்வொருவருக்கும் குறிப்பாக நித்தீஷ் ஜிக்கு நன்றி சொல்கிறேன். தேர்தல் ஐக்கியத் தையும் ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்களை யும் ஒன்றிணைத்திடுவோம். அது பாஜகவை 2024ல் தாக்கி வீசும்.