கட்சி துவக்க நாள் உறுதிமொழி

ஏப்ரல் 22, 2023 இகக(மாலெ) தோற்று -விக்கப்பட்டதன் 54வது ஆண்டு. இந்த தருணத்தில், தோழர் சாருமஜும்தாருக்கும் கட்சியை தோற்றுவித்த மற்ற தலைவர்களுக்கும் கட்சியை வலுப்படுத்தவும் புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும் கடந்த 54 ஆண்டு களாக தங்களது அனைத்தையும் தியாகம் செய்தவர்களுக்கும் புரட்சிகர அஞ்சலியை செலுத்துகிறோம். ஏப்ரல் 22, உலகின் முதல் சோசலிச புரட்சியின் முதன்மை சிற்பியும் மார்க்ஸ் எங்கல்சுக்குப் பிறகு மார்க்சிய தத்துவம், நடைமுறையின் ஆகச் சிறந்த பிரதிநிதியுமான தோழர் லெனினது பிறந்த நாளுமாகும்.

இகக(மாலெ)யின் 11வது காங்கிரஸ்: சவால் மிக்க பாதையில் ஒரு உத்வேகமூட்டும் பயணம்!

கம்யூனிஸ்ட் கட்சி பாரம்பரியத்தில், கட்சிக் காங்கிரஸ், குறிப்பிட்ட அந்த சூழலில்  மேற்கொள்ளவிருக்கும் வழியை வகுத்தளிக்கும் மிக உயர்ந்த அமைப்பாகும். இந்தியாவில் தற்போதுள்ள சூழலானது, சுதந்திரத்துக்குப் பிந்தைய நாட்களில் கம்யூனிஸ்ட் இயக்கம் சந்தித்தவற்றிலேயே மிகவும் சவால் மிக்க சூழலாகும். இத்தகைய பின்புலத்தில், இகக(மாலெ)வின் 11வது காங்கிரஸ், கட்சியின் உள்ளார்ந்த வலுவையும் விரிவடைந்து வரும் அமைப்பையும் பாசிச மோடி ஆட்சிக்கு எதிராகவும் சங்கப் படைக்கு எதிராகவும் மக்கள் எதிர்ப்பை தீவிரப்படுத்துவதற்கான வளர்ந்து வரும் முன்முயற்சி, தலையீட்டை இயங்காற்றல் மிக்க வகையில் நிகழ்த்திக் காட்டியதெனலாம்.

மக்கள் இயக்கங்களை வலுப்படுத்திடும் நோக்கில் நம் இரு நாட்டு மக்களின் உறவுகளை மேம்படுத்திடுவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)ன் 11ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க சிபிஎன் (யுஎம்எல்) கட்சியை அழைத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மாநாடு பெரும் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.

இந்த நேரத்தில் நக்சல் பாரி இயக்க தலைவர்களான தோழர் சாருமஜும்தார், தோழர் சுப்ரதா தத், தோழர் வினோத் மிஸ்ரா ஆகியோரை நான் நினைவு கூர்கிறேன். பல பத்தாண்டுகளாக விவசாயிகள், தொழிலாளர்கள், அறிவாளிப் பிரிவினரை அமைப்பாக்க நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வரும் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்வதேசம் குறித்த விவாதத்தைத் தொகுத்து அளிக்கப்பட்ட பொதுச் செயலாளரின் பதிலுரை:

நாம் எதிர்கொள்ளும் மூன்று பெரிய கேள்விகள் இன்று இருக்கின்றன. அவை: உக்ரைன் யுத்தம், ரஷ்யா பற்றிய நமது அணுகு முறை, சீனா பற்றிய நமது அணுகுமுறை.

‘அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம்; ஜனநாயகம் காப்போம்; இந்தியாவைக் காப்போம்' கருத்தரங்கத்தில் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பேசியது

இந்த நிகழ்வினானால் மகிழ்ச்சியடை கிறோம். எங்களின் கட்சி அகில இந்திய மாநாட்டின் போது எதிர் கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நாங்கள் விரும்பினோம்.

கடுமையான வேலை நெருக்கடிக்கு மத்தியில் நித்தீஷ் ஜி வந்திருக்கிறார். தோழர் திருமாவளவனும் இங்கிருக்கிறார். ஜார்கண்ட் முதல்வர் கேமந்ன்த் சோரன் வர முடியவில்லை.

நாங்கள் சொல்ல விரும்புவது மிகவும் தெளிவான ஒன்று அரசியல் சட்டமும் ஜனநாயக மும் அபாயத்தில் இருக்கின்றன என்றால், பின் என்னதான் மிச்சமாக இருக்கும்?

கருத்தரங்கில் மக்களவை உறுப்பினர், விசிக தலைவர், தோழர் தொல்.திருமாவளவன், ஆற்றிய உரையின் சுருக்கம்

சிபிஐஎம்எல் கட்சியின் இந்த மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன். இந்த மாநாட் டில் எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது விடுதலை சிறுத்தைகள் கட்சி புரட்சிகர சிந்தனையாளர் மார்க்ஸையும் பின்பற்றுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடதுசாரி கட்சி என்று பறைசாற்றிக் கொள்கிறது. நான் அம்பேத்கர், பெரியார் கருத்துக்களை உள்வாங்கியது போலவே மார்க்ஸ் கருத்துக்களையும் உள்வாங்கி இருக்கிறேன். 10 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தலில் பங்கு பெறாமல் சமூக மாற்றத்திற்கான இயக்கமாக மட்டுமே இருந்து வந்தோம். இன்று எங்களுக்கு 4 எம்எல்ஏக்கள் 2 எம்பிக்கள் உள்ளனர்.

அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம்; ஜனநாயகம் காப்போம்; இந்தியாவைக் காப்போம்; கருத்தரங்கம்

இகக(மாலெ) 11வது அகில இந்திய மாநாட்டின 3ம் நாளான 18.2.2023 அன்று அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம்; ஜனநாயகம் காப்போம்; இந்தியாவைக் காப்போம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் லாலன் குமார், இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சர்வதேச கம்யூனிச விவாதங்களில் சிபிஐ(எம்எல்) கட்சியால் நிறைய பங்களிப்பு செலுத்த முடியும்

சிபிஐ(எம்எல்) கட்சியின் 11ஆவது கட்சிக் காங்கிரசுக்கு எங்களுடைய ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களை மாநாட் டிற்கு அழைத்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கொல்கத்தா தோழர்களின் உபசரிப்புக்கு எங்களுடைய சிறப்பு நன்றியை தெரிவிக்கிறோம்.

1990களின் ஆரம்ப காலத்திலிருந்து எங்க ளுக்கு உங்கள் கட்சியுடனான உறவு இருந்து வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு தோழர் திபங்கர், ஆஸ்திரேலியா வருகை புரிந்ததை நினைவு கூர்கிறேன்.

மக்கள் இயக்கங்களால் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது

கேரளாவில் உள்ள எனது நண்பர்கள் பாஜகவை ‘பெரிய பூஜ்ஜியம்' என்று குறிப்பிட்டு எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார்கள். அதிலிருந்து எனது உரையை துவக்குகிறேன். வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களில் கையாளப்பட்ட பிரசித்தி பெற்ற வாசகம் "நான்கு பேர் நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். இருவர் (மோடி-அமித்ஷா) நாட்டை விற்கிறார்கள், இருவர் (அதானி-அம்பானி) அதை வாங்குகிறார்கள்" என்பதாகும். ஐரோப்பாவின் பல்வேறு காலகட்டங்களில் இருந்த பாசிசத் தோடு இந்தியாவில் தற்போதுள்ள பாசிசத்தை நாம் ஒப்பிட முடியும். ஆனால், இரண்டு வகை பாசிசத்திற்கும் உள்ள ஒரே வித்தியாசம். இங்கு சாதி என்ற வடிவம் இருப்பதுதான்.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒற்றுமை காலத்தின் தேவையாக உள்ளது

தோழர்களே! கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும் நிலவுடமைக்கெதிராக, நிலப்பிரபுத்துவத்திற்கெதிராக, ஆணாதிக்கத்துக்கெதிராக மிகப்பெரிய போராட்டங் களை நடத்தியுள்ளன. இந்தப் போராட்டங்களில் தங்கள் இன்னுயிரை இழந்த தியாகிகளுக்கு என்னுடைய செவ்வணக்கத்தைத் தெரிவித்துக் கொள் கிறேன். உலக வரலாற்றில் முக்கியமான தருணத்தில் உங்கள் மாநாடு நடைபெறுவதால் அது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மனித குலத்தின் கருவான கொள்கைகள் சவாலுக்கு உட்படுத்தப்படுவதை நாம் எதிர்கொண்டு வருகிறோம். முடிவே இல்லாத முதலாளித்துவ பேராசை, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் பாசிசம் ஆகியவற்றை நாம் எதிர்கொள்கிறோம். சமூகநீதி சீர்குலைக்கப்படுகிறது.