பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் என்பது சரியான திசையில் முன்னெடுக் கப்பட்டுள்ள வரவேற்கத்தக்க ஒன்றாகும் என இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் கூறினார். இந்த பிப்ரவரி மாதம் பாட்னாவில் நடைபெற்ற இகக(மாலெ)யின் 11வது கட்சிக் காங்கிரஸ் எதிர்க்கட்சிகளின் பரந்த ஒற்றுமைக்கான யோசனைக்கு விதைபோட்டது. அதன் அதிர்வையும் விரிவாக்கத்தையும் இந்தக் கூட்டத்தில் காணமுடிகிறது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மற்றும் நிகழ்ச்சிநிரலுக்காக தொடர்ந்து கொண்டிருக்கும் முயற்சிகளில் எதிர்க்கட்சிகளின் இக் கூட்டம் ஒரு அடுத்த கட்ட நகர்வாகும். இக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிற அனைத்து கட்சிகளும் இந்த நாடு எதிர்கொண்டிருக்கும் அச்சுறுத்தலின் தீவிரத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம். பாரதிய சனதா கட்சி, பாரதிய ஏதேச்சதிகார கட்சியாக உருமாறியிருக்கின்றது. அது அரசிலமைப்பு நிறுவனங்களையும் அனைவருடைய வாழ்வையும் கட்டுப்படுத்துகிறது. ஜனநாயகம் அரசியலமைப்பு-கூட்டாட்சி எல்லாம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. இந்த முக்கியமான தருணத்தில் நடக்கும் இக் கூட்டம் மிகவும் பொருத்தப் பாடுடையதாகும்.

மேலும் அவர், மோடியின் ஏதேச்சதிகாரத்தை ஒரு சிறந்த மக்கள் இயக்கத்தால் மட்டுமே தோற் கடிக்க முடியும் என்றார். வரக்கூடிய தேர்தல்களை ஒரு பரந்த வெகு மக்கள் இயக்கமாக நாம் மாற்ற வேண்டியதிருக்கிறது. மோடியே வெளியேறு பிரச்சார மானது ஒரு வெகுமக்கள் இயக்கத்தின் வடிவத்தைப் பெற வேண்டியதிருக்கும்.

இகக(மாலெ) பீகார் மாநிலச் செயலாளர் குணால், சமூக மற்றும் சட்ட சீர்திருத்தங்களுடைய நிகழ்ச்சிநிரல் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டு, வாக்குகளுக்கான தேர்தல் கணக்கீடுகளில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்றார். வாக்குக ளுக்காக பாஜக இந்தப் பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்துள்ளது.

இந்தியா பன்முகப்பட்ட கலாச்சாரங்களை, வாழ்கை முறைகளைக் கொண்டது. பொது குடிமைச் சட்டம் என்ற பெயரில் பன்முகத்தன்மையைக் காலி செய்து ஒற்றைத் தன்மைத் திணிக்கும் முயற்சியானது முன்னேற்றத்திற்கு எதிரானதாகும். இது மாதிரியான நடவடிக்கையானது தனிச் சட்டங்கள் மூலம் முற்போக்கான, பெண்களுக்கு ஆதரவான வாய்ப்புகளை முன்னெடுப்பதற்கு முட்டுக்கட்டையாக மாறும். ஒட்டுமொத்த நாட்டையும் பாஜக வன்முறையிலும் மதவெறியிலும் தள்ளிக் கொண்டிருக்கிறது. மணிப்பூர் பற்றி எரிகிறது. அதேபோல் உத்ரகாண்ட்டும். இப்போது ஒரே குடியுரிமைச் சட்டத்தின் பேரால், நாட்டை கொதிநிலையிலேயே வைத்து தேர்தல் கலவரம் நடத்துகிறது பாஜக. இதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.