சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம், குறிச்சி கிராமத்தில் சிபிஐஎம்எல் கட்சியின் சார்பாக 25.9.2023 அன்று, வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அன்று மாலை சம்பந் தப்பட்ட அதிகாரிகள், தாசில்தார், வருவாய்த் துறை அதிகாரி, கிராம நிர்வாக அலுவலர், காவல்துறையினர் பேச்சு வார்த்தை செய்தனர். 'ஒரு மாதத்திற்குள் பட்டா வழங்குகிறோம்" என்று உறுதி அளித்ததன் காரணமாக காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்திற்கு சிபிஐஎம்எல் கட்சி ஊராட்சி செயலாளர் குபேந்திரன் தலைமை தாங்கினார். ராஜவீதி பகுதி கிளைச் செயலாளர் மணிகண்டன், நாடார் சாலை பகுதி கிளைச் செயலாளர் சித்ரா முருகன் கோயில் ஸ்ரீமகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர் மோகனசுந்தரம் சிபிஐஎம்எல் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் வி.ஐயந்துரை, குள்ளம்பட்டி கிளைச் செயலாளர் குமார் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். ஒரு மாதத்திற்கு பின் மீண்டும் மூன்று கிளைகளையும் கூட்டி அடுத்த கட்ட போராட்டங்கள் பற்றி திட்டமிடுவது என முடிவு செய்யப்பட்டது.