இளம் வயதிலேயே புரட்சிகர கருத்துகளில் ஈர்ப்பும் ஈடுபாடும் கொண்ட விசிக முதன்மைச் செயலாளர் தோழர் உஞ்சை அரசன் திடீர் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. மார்க்சிய- லெனினிய சிந்தனையாலும் செயல்பாடுகளாலும் நன்கு அறியப்பட்ட தோழர் உஞ்சை அரசன், மார்க்சிய-லெனினிய இயக்கத்தின் ஊக்கமிக்க செயல்வீரராகவும் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் களப்போராளியாகவும் செயல்பட்டவர். மார்க்ஸ் - அம்பேத்கர்-பெரியார் சிந்தனை வழியில் தலித் விடுதலை, சமூகநீதி, சாதி ஒழிப்பு, சனாதன எதிர்ப்பு அரசியலில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர். அரசியல் களத்தில் மட்டுமின்றி கலை இலக்கியத் தளத்திலும் தனது முற்போக்கு கருத்துகளை அழுத்தமாக முன்னெடுத்தவர். பாசிச-ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு எதிரான போர்க்களத்தில் ஒரு சக போராளியை இழந்திருப்பது சொல்லொணா வருத்த மளிக்கிறது. அவரது பிரிவால் துயரமடைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. 31.10.2023 அன்று சென்னையில் தோழர் உஞ்சை அரசனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி கலந்து கொண்டு தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.