தமிழ்நாட்டில் அதுவும் தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. பல பட்டியலின மக்கள் படுகொடுலை செய்யப்படுகிறார்கள். தென்காசி மாவட்டம் புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, நாங்குநேரி, தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை, மதுரை மாவட்டம் பெருங்குடி என தொடர்கிறது. நெல்லை மாநகரம், மணிமூர்த்தீஸ் வரத்தில் இரண்டு பட்டியலின இளைஞர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டு அவர்கள் மீது சிறு நீர் கழித்து அவமானப்படுத்தினார்கள் சாதியாதிக்க வெறியர்கள். அதேபோல் கோபிச் செட்டிப்பாளையத்தில் இரண்டு 5 பட்டியலின இளைஞர்கள் அடித்து துன்புறுத்தப் பட்டு சீறுநீர் கழித்து அவமானப்படுத்தப் பட்டுள்ளார்கள். தொடர்ந்து தலித் மக்கள் தாக்கப்படுவதும் அவர்கள் குடியிருப்புகள் அடித்து நொறுக்கப் படுவதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. குடி தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த வேங்கைவயல் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. 

பட்டியலின மக்கள் மீதான இந்த சாதியாதிக்க வன்கொடுமைகளைக் கண்டித்தும் தமிழ்நாடு அரசு இவற்றைத் தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த வன் கொடுமைகளைத் தடுக்கத் தவறிய, வன்கொடுமைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து உரிய தண்டனை வழங்கக் கோரியும் குறிப்பாக வேங்கை வயல் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சயின் சார்பாக 2023 நவம்பர் 30 அன்று மாநிலந் தழுவிய எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்பட்டன.

30.11.2023 அன்று வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் சரோஜா தலைமை தாங்கினார். இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வீ.சங்கர், மாநில நிலைக்குழு உறுப்பினர் சொ.இரணியப்பன் கண்டன உரையாற்றினார்கள். 

நெல்லையில் காலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் மா.சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி, மாநில நிலைக்குழு உறுப்பினர் ஜி.ரமேஷ் மற்றும் தென்காசி மாவட்டச் செயலாளர் புதியவன் ஆகியோர் உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் கணேசன், ஏஐசிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் கலந்து கொண்டனர். 

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டச் செயலாளர் வளத்தான் தலைமை தாங்கினார். திரளானவர்கள் கலந்து கொண்ட இகக(மாலெ) மத்தியக்குழு உறுப்பினர் பாலசுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ரேவதி, ரெங்கசாமி, ஊராட்சித் தலைவர் ராஜாங்கம், மணிமேகலை உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். 

சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் ஆபிரகாம் தலைமை தாங்கினார். இகக (மாலெ) மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாநிலக்குழு உறுப்பினர் அதியமான் உரையாற்றினார். 

சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் சந்திரமோகன் கண்டன உரையாற்றினார். திருவள்ளூர் ஊத்துக்கோட்டையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சூர்யா மற்றும் சுந்தர் தலைமை தாங்கினார்கள். மாவட்டச் செயலாளர் அன்பு கண்டனயுரையாற்றினார்.

கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் வெங்கடாச்சலம் உரையாற்றினார். 

தர்மபுரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் அ.சந்திர மோகன், ஏஐசிசிடியு தலைவர் முருகன், ஆதி தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் ராஜ்குமார் கண்டன உரையாற்றினர். 

திருச்சி மணப்பாறையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் இளைய ராஜா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் தேசிகன், மாநிலக்குழு உறுப்பினர் ராஜ்குமார் உரையாற்றினர்.