ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டுக்கான சங்கிப் பெருந்தலைவரின் உரையுடன், ஆர்எஸ்எஸ் அந்த அமைப்பு தொடங்கப்பட்ட நாளாக விஜயதசமியை அனுசரிக்கிறது. மோடி அரசாங்கம் அமைந்த 2014-லிருந்து இந்தியாவில் ஆர்எஸ்எஸ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவத்தையும் அதிகாரத் தையும் நிச்சயமாகவே பெற்றுள்ளது. மேலும் மோகன் பகவத்தின் விஜயதசமி உரையானது படிப்படியாக வெளிப்படுகிற சங்- பாஜக திட்டங்களின் மீது வெளிச்சத்தை பாய்ச்சுகிற முக்கிய உரைப் பகுதியாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த மக்க ளவைத் தேர்தலுக்கு முன்பு கடைசியாக வருகிற இந்த விஜயதசமியில் சங்கி பெருந்தலைவரின் இந்த ஆண்டுக் கான உரை முழுக்க முழுக்க மோடி அரசாங்கத்தின் உரத்த பரப்புரையை ஊதிப் பெரிதாக்கும் சங்கிகளின் தேர்தலுக்கான அழைப்பாக ஆனது. 

எழுந்து வரும் உலக சக்தியாக, சங்-பாஜக பேச்சு வழக்கில் சொன்னால், இன்றைய பல்வகை நெருக் கடிகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கான தலைமை யேற்க உலகமே எதிர்நோக்குகின்ற விஸ்வகுருவாக இந்தியாவை பகவத் சித்தரிக்கிறார். ஜி20 டெல்லி உச்சிமாநாடு முதல் 100க்கும் மேற்பட்ட பதக்கங் களை இந்தியா பெற்ற சமீபத்திய ஆசிய விளையாட்டு போட்டி வரை அனைத்தும் இந்தப் போக்கிலான சுட்டியாக காட்சிப்படுத்தப்பட்டது. இந்தியாவை சீர்குலைக்கவும் சிதைக்கவும் அந்நிய சதி செயல் படுகிறது எனவும் அவர் கூறுகிறார். அத்தகைய அந்நிய சதியின் பற்றி யெரியும் உதாரணமாக மணிப்பூர் அவருக்குத் தெரிகிறது. இருப்பினும் மக்களை பெரும் துன்பத்திற்குள்ளாக்கிய, அவர்களுடைய வாழ்வைத் தகர்த்த மணிப்பூர் நெருப்பை அணைக்கும் பொறுப் பில் மோடி அரசாங்கத்தின் மாபெரும் தோல்வியை, ஒட்டு மொத்த துறப்பைக் குறித்து அவர் மவுனம் காக்கிறார். 

ஜி20 டெல்லி உச்சிமாநாடு முடிந்த உடனேயே கனடாவின் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது. கனடாவுடன் விசாவுக்கான சேவைகளை நிறுத்தி இந்தியா எதிர்வினையாற்றிய போது மேற்கத்திய உலகம் முழுவதும் கனடாவின் பக்கம் நின்றது. மேலும் விசாரணையில் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என இந்தியாவைக் கேட்டுக் கொண்டது. காஸா மீதான இஸ்ரேலின் தற்போதைய இனப்படுகொலைப் போரில் அமெரிக்க இஸ்ரேலிய அச்சின் பக்கமாக நின்று, மனித நேயத்தின் அடிப் படையில் உடனடி போர் நிறுத்தத்திற்கான ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க மறுத்ததன் மூலம், அரபு உலகம் மற்றும் உலகளாவிய பொதுக்கருத்திலிருந்து மோடி அரசாங்கம் இந்தியாவைத் தனிமைப்படுத்தியுள் ளது. ஆக, தற்போது இந்தியக் கடற்படையின் முன்னாள் படைவீரர்கள் எண்மர் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கத்தார் நாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளார்கள். நரேந்திர மோடியின் உலக ளாவிய அந்தஸ்து எனப்படுவதைச் சுற்றி உருவாக்கப் படும் பரப்புரையில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் துளை விழுந்து கொண்டிருக் கிறது. 

அரசியல் எதிர்ப்பாளர்கள், தனித்தியங்கும் ஊடகங்கள், முற்போக்கு அறிவாளிகள் ஆகியோ ருக்கு எதிராக மோடி அரசாங்கத்தின் தீவிர பழிவாங்கலுக்கு ஒப்புதல் வழங்குகிற பகவத், உள்நாட்டு எதிர்கருத்துக் குரல்களை அந்நிய சதி எனக் கூறப்படுவதுடன் இணைக்கிறார். ஊடகவியலை தீவிரவாதத்துடன் இணைத்து, சீனாவிடம் நிதி பெற்றார்கள் என்ற பெயரில் நியூஸ்கிளிக் ஊடகவியலாளர்கள் மீதும், அரசுக்கு எதிரான சதி எனக் குற்றஞ்சாட்டி விவசாயிகள் இயக்கம் போன்ற ஆற்றல்மிக்க மக்கள் போராட்ட இயக்கங்கள் மீதும் மோடி அரசாங்கத்தின் தாக்குதலை நாம் ஏற்கனவே கண்டோம். மோடி அரசாங்கத்தின் நீண்டு கொண்டே போகும் உள்நாட்டு எதிரிகளின் பட்டியலில் கலாச்சார மார்க்சிஸ்ட்டுகள், விழிப்புற்றவர் குழுக்கள் என பகவத் மேலும் இரண்டு புதிய வகையினங்களை சேர்த்துள் ளார். அவர்கள் அறிவுசார் குழப்பத்தையும் சமூகத்தில் அராஜகத்தையும் பரப்புகிறார்கள் எனக் குற்றம் சாட்டுகிறார். கல்வித் துறையில் சுதந்தி ரத்தை முடக்க ஒவ்வொரு இந்திய நிறுவனத்தையும் கல்வி வளாகத் தையும் கட்டுப்படுத்தும் பதவிகளில் ஆர்எஸ்எஸ் தனது ஆட்களை அமர்த்துகிறது. மேலும் மக்களை பயங் கரத்தில் ஆழ்த்தவும் அவர்களது அந்தரங்க விருப்பத்தின் ஒவ்வொரு அம்சத்திலுமான வாழ்முறையை கட்டுப் படுத்தவும் தனது குண்டர் படையினரை கட்டவிழ்த்து விடுகிறது. இப்படியாக இந்திய நிறுவனங்களிலும் சமூகத்திலும் நிலவுகிற யதார்த்தத்தை மூடி மறைக்கவே இந்தப் பொய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

பொருளாதார, அரசியல், கலாச்சார மார்க்சிஸ்ட் டுகள் என மார்க்சிஸ்ட்டுகள் தங்களை நிச்சயமாக இந்த பிரித்து வைத்துக் கொள்வதில்லை. மார்க்சிஸ்ட்டு களை இலக்காக்க சர்வதேச அளவில் 1920 லிருந்தே பாசிஸ்டு களும் இதர தீவிர வலதுசாரி சக்திகளும் 'கலாச்சார மார்க்சிஸ்ட்டுகள்' என்ற பதத்தை பயன்படுத்து கின்றனர். (இந்தக் காலகட்டத்தில் வலுவான யூத எதிர்ப்பு உணர்வுகளையும் இந்தப் பதம் உட்கொண்டுள்ளது). ஆக, முற்போக்கு கல்வியாளர்கள், எழுத்தாளர்களுக்கு எதிரான வேட்டையை தீவிரப்ப டுத்தவே பகவத் இந்தப் பதத்தை பயன்படுத்துகிறார். 1920 லிருந்தே மார்க்சை மறந்துவிட்டனர் என கலாச்சார மார்க்சிஸ்ட்டுகள் மீது பகவத் குற்றம் சாட்டுகிறார். அப்படியென்றால் அவர், 1848 இல் பதிப்பிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை, 1917 இன் வெற்றிகரமான ரஷ்யப் புரட்சி ஆகிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவற்றை உள்ளடக்கிய 1920 வரையிலான மார்க்சிய மரபை உயர்த்திப் பிடிப்பவரா?

 'கலாச்சார தேசியவாதம்' என்ற பெயரில் சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கிற, கட்டுப் படுத்து கிற சங்கிகளின் முயற்சிகளுக்கு எதிராக எழுச்சி யுற்று, அதன் அந்த மாதிரிகளை தகர்க்கும் பன்முகத் தன்மை, நீதி, ஜனநாயக சக்திகள் மூலம் கலாச்சாரத் தளத்தில் அது எதிர்கொள்ளும் அதிகரித்த எதிர்ப்பை கண்டு ஒருவேளை ஆர்எஸ்எஸ் கவலை கொண்டிருக்கலாம். கலாச்சார மார்க்சிஸ்ட்டுகள் என்பதோடு சேர்த்து பகவத் பயன்படுத்திய மற்றொரு பதமான 'விழிப் புற்றவர்' அல்லது விழிப்புணர்வு பெற்றவர்கள் என்பது சமூக நீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடுகிற இடது, முற்போக்கு சக்திகளுக்கு எதிராக மிகச் சமீபத்தில் அமெரிக்க வலதுசாரிகள் பயன்படுத்துகிற பதமாகும். அமெரிக்காவில் இனவாதத் திற்கு எதிரான நீடித்த போராட்டத்தின் போது, விழிப்புணர்வு பெற்றவர்களாக இருப்பது அல்லது விழிப்புற்றவர் என்பது நேர்மறை பதமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவில் 'மதச்சார் பின்மை' என்ற பதத்தை சிதைத்த சங்பாஜக போன்று, டிரம்ப்பின் வெள்ளை மேலாதிக்க வாத ஆதரவாளர் கள் இதனை இழிவான பதமாக பயன்படுத்த தொடங்கினர். இந்தியாவில் சமூக நீதிக்கான வேட்கை வலுவாகிக் கொண்டிருக்கும் போது, பாலின நீதிக்காக அதிகரித்து வரும் அறுதியிடலும், மாற்று பாலின மக்கள் உள்ளிட்ட எல்ஜிபிட்டிகியு சமூகத்தினருக்கான சம உரிமை களும் சலுகை பெற்ற, பழமைவாத பிரிவினர் மத்தியில் எச்சரிக்கை மணியை ஒலிக்கின்றன. இருநூறு ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட உதாரணத்தைப் போல, இந்தப் பிரிவினர் மத்தியில் சில நேரங்களில் பகவத் அரசியல் காரிய சாத்தியவாதத்தை நுழைக்க முயற்சிக்கும் போது,உரையில் கலாச்சார மார்க்சிஸ்ட்டுகள், விழிப்புற்ற வர் குழுக்களை இலக்காக்குவதன் மூலம் சமூகப் பிற்போக்கு சக்திகளை தூண்டிவிட முயற்சிக்கிறார். 

அம்பேத்கர் குறித்த ஒரு புதிரான குறிப்பி னையும் தனது உரையில் பகவத் மேற்கொண்டிருந்தார். அரசியல் சாசன அவையில் அம்பேத்கர் ஆற்றிய உரைகளை வாசிக்குமாறு அவருடைய பார்வையாளர் களை அவர் கேட்டுக் கொண்டார். அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொள்வதற்கு சற்று முன்னதாக நிகழ்ந்த அம்பேத்கரின் இறுதி உரை, இந்திய அரசியல் சாசனத்தின் முன்னால் உள்ள சவால்கள் குறித்த மிகுந்த மதிநுட்பமான எச்சரிக்கை யாக இன்றும் உள்ளது. இங்குதான் அவர் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்து வத்தை ஒருங்கிணைந்த முழுமையாக எடுத்துக் கொள்ளவேண்டும் எனவும், பெருகிவரும் சமுக, பொருளாதார சமத்துவ மின்மையின் முன்பாக வாக்குச் சீட்டில் சமத்துவம் அதன் அனைத்து அர்த்தத்தையும் இழந்து விடுவதைக் குறித்தும் எச்சரிக்கிறார். இந்த உரையில்தான் அரசியலில் பக்தி, அதாவது, தலைவர் களை வழிபடுவதும் ஆளுமை வழிபாட்டு முறையும், ஜனநாய கத்தின் சீரழிவுக்கும் இறுதியில் சர்வாதி காரத்தின் எழுச்சிக்கும் நிச்சயமான வழியாகும் என அடையாளம் காண்கிறார். 

அரசியல் சாசன அவையில் அம்பேத்கரின் கடைசி உரையை பகவத் துணைக்கு அழைத்த தற்கான காரணங்கள் பற்றி நமக்கு இது வரையிலும் தெரியாது. அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, மனுஸ்மிரிதியின் பாரம்பரியத்திலிருந்து எடுத்துக் கொள்ளாமல் விட்டதற்காக ஆர்எஸ்எஸ் அதனை விமர்சிப்பதிலும் நிராகரிப்பதிலும் சுறுசுறுப் பாக இருந்ததை நாம் மறந்துவிடவில்லை. உண்மையில், நவீன இந்திய அரசியல் சாசனத்தின் வரை படத்தை வளர்த்தெடுப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, மனுஸ்மிரிதி அடிமைத்தனத்தின் சட்டம் எனவும் இந்திய ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அநீதி எனவும் அவர் பொதுவெளியில் வெளிப்படையாக அதனைத் தீயிட்டுக் கொளுத்தினார். அவருடைய அகால மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பாக அவருடைய ஐந்து லட்சம் தோழர்களுடன் புதிய வகை புத்த மதத்தை வெளிப்படையாகத் தழுவியதன் மூலம் ஒருவரின் மதத்தை தேர்ந்தெடுக்கும் அரசியல் சாசன உரிமையை அம்பேத்கர் பயன்படுத்தினார் என்பதையும் நாம் நினைவில் கொள்வோம். அந்த நிகழ்வு 1956 விஜய தசமியில் ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூரில் நடை பெற்றது. பகத்சிங் மற்றும் அம்பேத்கர் கனவு கண்ட இந்திய ஜனநாயகத்தை சங்கிகளின் பாசிசக் கனவுத் திட்டம் ஒருபோதும் நசுக்க முடியாது.