இககமாலெ கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும் அகில இந்திய திட்டப் பணியாளர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான தோழர் சசி யாதவ், சிபிஐ எம்எல் அங்கம் வகிக்கும் பீகார் மகா கூட்டணியின் இதர வேட்பாளர்களுடன் பீகாரின் சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

பீகாரில் ஆஷா - சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் மதிய உணவு தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், சிறந்த ஊதியத்திற்காகவும், தொழிலாளர் கவுரவத்திற்காகவும் முன்னணியில் நின்று செயலாற்றிய போராட்டக்காரர். இம்மாநிலத்தின் ஆஷா சுகாதார பணியாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க 32 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர். அதன் மூலம், ஜூலை 2023 இல் ஆஷாக்களுக்கு மதிப்பூதியம் அதிகப்படுத்த வேண்டும் எனும் கோரிக்கைப் போராட்டத்தில் வெற்றி கண்டவர். 

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) - ன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர். ஏஐசிசிடியு மற்றும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தில் அகில இந்திய செயலாளராக பணியாற்றுகிறார்.