என்ன செய்தார் மோடி?

 

 

      வாய்ச் சவடால் உத்தரவாதம்  

 

உண்மை

 

இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்படுகிறது மோடி அரசு.

  • பட்டம் படித்தும், வேலையில்லாமல் இருக்கும் 25 வயதிற்கும் கீழே உள்ள இளைஞர்கள் 42 சதவீதம் பேர். 
  • வேலையற்றோரில் 71 சதவீதம் பேர் 35 வயதிற்கும் கீழே உள்ள பட்டதாரிகள்.

 

மோடி ஆட்சியில் வாய்ப்புகளும் வருமானங்களும் உயர்கின்றன. வறுமை வீழ்ச்சி  அடைகிறது.

மோடி ஆட்சியில் குறைந்தபட்ச தேசிய ஊதியம் 42 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

 

  •  
  • உண்மை ஊதியம் குறைந்திருக்கிறது. 2011ல் 100 ரூபாய்க்கு வாங்கிய அதே பொருளை இப்போது வாங்க முடிவதில்லை.
  • தரை மட்ட ஊதியம் நாளொன்றுக்கு கிராமங்களில் ரூ 375 (மாதம் ரூ11,250) நகரங்களில் ரூ 430 (மாதம் ரூ 12900இருக்க வேண்டும் என அனூப் சத்பதி கமிட்டி 2019ல் பரிந்துரை செய்தது. அந்தக் கமிட்டி கலைக்கப்பட்டது.
  • இன்றைய தேதியில், 2024ல், தரைமட்ட ஊதியம் நாளொன்றுக்கு ரூ 178 (மாதம் ரூ 5340)
  • தரைமட்ட ஊதியத்தை விட குறைவாக வருமானம் உள்ளவர்கள், மாதச் சம்பளம் பெறுபவர்களில் பாதி பேர், கேசுவல் தொழிலாளர்கள் 90 சதவீதம் பேர், சுயவேலை செய்பவர்கள் 60 சதவீதம் பேர்.

 

ஏழைகள் அல்ல, பரம ஏழைகளின் வளர்ச்சி, பட்டியல் இனத்தோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், உரிமை மறுக்கப்பட்டோரின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்றார் மோடி.

 

  •  
  • கடந்த 10 ஆண்டுகளில் ஏழை- பணக்காரன் எனும் ஏற்றத்தாழ்வு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. 
  • நாட்டின் செல்வத்தில் 65 சதவீதம் மேல்தட்டு செல்வந்தர்கள் 10 சதவீதம் பேரிடம் இருக்கிறது.  
  • கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதம் மக்களிடம் வெறும் 5.6 சதவீதம் செல்வமே இருக்கிறது.  
  • நாட்டின் மொத்த வருமானத்தில் 82 சதவீதம் 11 சதவீதம் பேரிடம் செல்கிறது. வெறும் 12.7 சதவீதம்தான் 50 சதவீதம் மக்களுக்குக் கிடைக்கிறது.  
  • ஏற்றத்தாழ்வு அதிகரிப்பதால் ஏழைகள், பரம ஏழைகள் ஆகிறார்கள்.  
  • பாதுகாப்பு ஏதுமற்றவர்களான அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் மிகக் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். 

 

கடந்த 10 ஆண்டுகளில்  நாட்டின் வருமானத்தை  60 சதவீதம்  அதிகரித்து இருக்கிறார்  மோடி.         

  • ஆனால், 34 சதவீத குடும்பங்கள் நாளொன்றுக்கு ரூ 178க்கும் குறைவான  வருமானத்தில் வாழுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். 

 

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்றார் மோடி 2013ல்.

 

      நடந்ததோ

  • ஆண்டுக்கு 1 கோடி பேர் வேலை இழப்பு. 

ஸ்விஸ் பேங்கில் இருக்கும் கருப்புப் பணத்தைப் பறித்து இந்திய மக்கள் வங்கிக் கணக்குக்கு 15 லட்சம் போடுவேன் என்றார்.

ஸ்விஸ் பேங்க் வழங்கிய கருப்புப் பண விவரங்களைக் கூட வழங்கவில்லை. ஒரு பைசா கூட கருப்புப் பணம் பறிக்கப்படவில்லை. ஒரு பைசாவும் மக்களின் வங்கிக் கணக்குக்கு வரவில்லை.

400 ரூபாய் சிலிண்டர் 1000 ரூபாயாக உயர்ந்ததுதான் மிச்சம். ஒரு பைசாவும் மக்களுக்கு மானியம் இல்லை.

விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்றார்.

குறைந்தபட்ச ஆதார விலையும் இல்லை. இருக்கும் நிலத்தையும் விவசாயத்தையும் பறிக்கும் சட்டம் மட்டுமே வந்தது.

2018ல் மின்சாரம் இல்லாத கிராமங்களே இல்லை என்றார். 

3.1 கோடிக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன என்கிறது ஃபோர்ப்ஸ் நிறுவன ஆய்வு.

5 லட்சத்துக்கு அயுஸ்மான் பாரத் சுகாதார காப்பீட்டுத் திட்டம் வழங்கியதாக பீற்றிக் கொள்ளப்படுகிறது. 

அதில் பல கோடிகள் செத்துப் போன பிணங்கள் பெயரில் செலவு செய்யப்பட்டதாக சொன்ன தலைமை தணிக்கை அதிகாரி அந்த பதவியிலிருந்தே நீக்கப்பட்டார்.

மோடி நிறைவேற்றிய உத்தரவாதங்கள்

  • பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டி, மதவெறிக்குத் தூபம் போட்டது.
  • சட்டப்பிரிவு 370அய் நீக்கி, காஷ்மீர் மக்களுக்கான சிறப்புச் சலுகையை ரத்து செய்தது. காஷ்மீரைத் துண்டாடியது. அதன்மூலம், முஸ்லீம்கள் இரண்டாம்தரக் குடிமக்களே என நிறுவியது.
  • சிஏஏ அமுல்படுத்தி, மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தியது.
  • தேர்தல் பத்திரங்கள் மூலம் வெளிப்படைத்தன்மையை ஒழித்தது, மிரட்டிப் பணம் பறிப்பதை, ஊழலை சட்டபூர்வமாக்கியது, 
  • ”ஒளிரும் இந்தியா” போல மற்றுமொரு வாய்ச்சவடாலாக “வளர்ந்த இந்தியா” எனும் சொல்லாடலை உருவாக்கியது. 

 

இது மோடியின் “அமிர்த காலம்” அல்ல, ”ஆலகால விஷத்தின் காலம்”