இஸ்ரேலின் இன வெறியால் பாலஸ்தீனத்தில் குழந்தைகள், பெண்கள் என லட்சக்கணக்கானவர் கள் இனப்படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என குறிவைத்து, திட்டமிட்டுத் தாக்கிக் கொண்டிருக் கிறது இஸ்ரேல். இது இஸ்ரேலின் அகண்ட இஸ்ரேல் நோக்கம் மட்டுமல்ல, இன அழிப்புச் செயல் ஆகும். இந்த இனவெறி உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் மக்கள் எழுச்சிப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டி ருக்கும் நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் அங்குள்ள அரசுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக்கொண்டி ருக்கும் நிலையில், இஸ்ரேலின் இனவெறிக்கு எதிராகவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் லட்சக் கணக்கில் மக்கள் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இஸ்ரேலிலும் கூட பாலஸ் தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலின் போர் வெறிக்கு எதிராகவும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்கிற செய்திகள் வந்து கொண்டிருக் கின்றன. நவம்பர் 19 அன்று லண்டனில் 'ஆறு முதல் கடல் வரை பாலஸ்தீனம் விடுதலை பெறும் 'என்ற பதாகையுடன் மிகப் பெரிய மக்கள் எழுச்சிப் பேரணி நடைபெற்றது. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் அமெரிக்கா வின் சிகாகோ நகரத்தில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மிகப் பெரிய பேரணியை மக்கள் நடத்தியுள்ளார்கள். ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பாலஸ்தீனக் கொடியுடன் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டங்களை நடத்தி னார்கள். நடத்தி வருகிறார்கள். நவம்பர் 19 அன்று குஜராத்தின் அகமதாபாத்தில் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கான இறுதி கிரிக்கெட் போட்டி இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியா விற்குமிடையே நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஆஸ்ரேலியாவைச் சேர்ந்த ஜாண் என்பவர், பாலஸ்தீனக் கொடியை கையில் பிடித்துக் கொண்டு, 'பாலஸ்தீனத்தை விடுதலை செய்' என்கிற முழக்கத்துடனான 'டி'சர்ட் அணிந்து கொண்டு அச்சமின்றி மைதானத்திற்குள் ஓடி வந்து வீராட் கோலியை கட்டியணைத்தார். இது பாலஸ்தீனத் திற்கு ஆதரவாக, இஸ்ரேலின் இனவெறிக்கு எதிராக உலகெங்கும் மக்கள் கிளர்ந்தெழுந்து வருகிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டாக மட்டுமல்ல, இந்திய மோடி அரசு, பாலஸ்தீன ஆதரவு இந்திய நிலைப்பாட்டில் இருந்து இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டிற்கு மாறிச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் இருந்தது. அதுவும் இரண்டை என்ஜின்கள் பிரதமர் நரேந்திரமோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மைதானத் திற்குள் இருக்கிறபோதே இது நடைபெற்றது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் அந்தக் கோப்பையைத் தூக்கிக் கொண்டு இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்து அரசியல் ஆதாயம் தேட நினைத்த பாஜக சங்கிகளுக்கு ஆஸ்ரேலிய அணியின் வெற்றி அதிர்ச்சியை அளித்தது. விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல் அரசியலாக்கினார்கள். எதிர் அணிகள் வந்த போது 'ஜெய் ஸ்ரீராம்' எனக் கோஷம் போட்டார்கள் சங்கிகள். இந்தியா வெற்றி பெற நாடெங்கும் யாகங்கள் நடத்தினர். இன்னும் சொல்லப் போனால், இந்தியா வெற்றி பெறச் செய்ய இந்து மத வெறியை மக்கள் மனதில் ஏற்றிக் கொண்டி ருந்தார்கள். சங்கிகளின் அந்த மதவெறிச் சிந்தனை தான் இந்திய அரசை பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட் டிலிருந்து இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டிற்கு மாற்றியது. பகுத்தறிவுக்கெதிராக, மத வெறியை, இன வெறியைத் தூண்டி விடுபவர்களுக்கு பாடம் புகட்டும் விதமாகவும் அந்த நிகழ்வு இருந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)