தொழிலாளர்கள் மீது மோடி தொடுக்கும் பத்தாண்டு காலப் போர்!

மோடியின் பேரழிவுவாத நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் நலனிலிருந்து தான் என சொல்லப்படுகிறது. தேர்தலில் வெளிப்படைத்தன்மைக்காகத்தான் தேர்தல் பத்திரம், விவசாயிகளின் நலனில் இருந்து தான் வேளாண் சட்டங்கள், காஷ்மீர் மக்களின் நலன் காக்கத் தான் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து, வழக்கறிஞர்கள், வழக்காடிகள் நலனில் இருந்து தான் புதிய குற்றவியல் சட்டங்கள், பெண்கள் நலனிலிருந்து தான் பொது சிவில் சட்டம், தொழிலாளர்களை பாதுகாக்கத் தான் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் என்கிறார்கள். சுதந்திரப் போராட்டத்தின் ஊடாக பெற்ற, அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக பெற்ற மக்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்து வருகிறார்கள்.

மோடி அரசு வீழ, மக்கள் வாழ நாடு தழுவிய வேலை நிறுத்தம்! கிராமப்புற முழு அடைப்பு!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து!

தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறு!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்காதே!

நிரந்தர பணிகளில் ஒப்பந்த முறையை புகுத்தாதே!

அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 26,000 உத்தரவாதம் செய்!

விவசாய விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதம் செய்!

போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டத்தை உதாசீனப்படுத்திய திமுக அரசு!

போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அதிமுக, திமுக ஆட்சிகள் கண்டுகொள்ளாத நிலையில், கடந்த 2023 டிசம்பர் 19 அன்று ஆளுங்கட்சியின் தொமுச தவிர்த்து மற்ற அனைத்து சங்கங்களும் வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கின.

வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் இயக்கத்தின் 3வது ஆண்டு: தொழிலாளர்கள் விவசாயிகள் சென்னையில் பெருந்திரள் அமர்வு

கார்ப்பரேட் ஆதரவு, காவிப் பாசிச மோடி அரசை வீழ்த்த, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி, தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய தொழிலாளர் வர்க்கம் விவசாயிகள் சமூகம் நாடு முழுவதும் நவம்பர் 26,27, 28 மூன்று நாட்கள் மாநில தலைநகர்களில் உள்ள ஆளுநர் மாளிகைகளை முற்றுகை பெருந்திரள் அமர்வுப் போராட்டம் திட்டமிடப்பட்டது. 

தமிழக தொழிற்சங்க இயக்கத்தின் புரட்சிகர மரபை உயர்த்திப் பிடிக்கும் ஏஐசிசிடியுவின் 10 வது மாநில மாநாடு!

2017 டிசம்பரில் ஏஐசிசிடியுவின் ஒன்பதாவது மாநில மாநாடு சென்னை பாடியநல்லூரில் நடைபெற்றது. அதற்குப் பிறகு சவாலான சூழலில் வண்டலூரில் கூடிய பொதுக்குழு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தது. 2020 மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 10வது அகில இந்திய மாநாட்டில் தமிழகத்தின் உரிய பங்களிப்பை புதிய நிர்வாகக் குழு திறம்படச் செய்தது. இந்த இயக்கப் போக்கில் அமைப்பின் ஒற்றுமையையும் உறுதிப்பாட்டையும் நிலை நிறுத்திக் கொண்டது. 

ஏஐசிசிடியு டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பு

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் (ஏஐசிசிடியு) சார்பாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் போராட்ட ஆயத்தக் கூட்டம் 2.10.2023 அன்று நடைபெற்றது. டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம், கால முறை ஊதியம் மற்றும் 20 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணிபுரியும் விற்பனையாளர்களின் பிரச்சினையை தீர்க்கக் கோரி தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடத்திடவும் அலுவலக நாட்களில் போராட்டம் நடத்தினால் தான் நமது கோரிக்கையை வென்றெடுக்க முடியும் என்ற அடிப்படையில் டிசம்பர் 7 அன்று முற்றுகைப் போராட்டம் நடத்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

ஏஐசிசிடியு தென்காசி மாவட்ட முதல் மாநாடு

தென்காசி மாவட்ட ஏஐசிசிடியு முதல் மாநாடு தென்காசியில் 1.10.2023 அன்று காலை நடைபெற்றது. சிவில் சப்ளை குடோன் முன்பு உள்ள லோடுமேன் சங்க கொடிக்கம்பத்தில் சங்கத்தின் மூத்த தோழர் ஆர். முருகையா மாநாட்டுக் கொடியேற்றினார். ஏஐசிசிடியு மாவட்ட நிர்வாகிகள் அயுப்கான், புதியவன் என்ற சுப்பிரமணியன், பேச்சிமுத்து, பொட்டுச்செல்வம், அழகையா, சுப்பிரமணியன், பரமேஸ்வரி ஆகியோர் கொண்ட தலைமை குழு மாநாட்டை வழி நடத்தியது. மாவட்ட நிர்வாகி மாதவன் வரவேற்புரையாற்றினார். மாநாட்டைத் துவக்கி வைத்து ஏஐசிசிடியு மாநில பொதுச் செயலாளர் கே.ஞானதேசிகன் சிறப்புரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்ட பொது செயலாளர் எம்.

புதுச்சேரியில் அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் பரப்புரை இயக்கம்

கட்டுமானத் தொழிலாளர் நல வாரியங்களை ஒன்றிய பாஜக அரசு சீர்குலைப்பதை கண்டித்தும் அதற்கு துணை போகும் ரங்கசாமி நமச்சிவாயம் இரட்டை எஞ்சின் ரியல் எஸ்டேட் கூட்டணி ஆட்சியை அம்பலப்படுத்தியும் அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் புதுச்சேரி மாநில கமிட்டி சார்பில் பரப்புரை இயக்கம் செப்டம்பர் 6, 7 தேதிகளில் ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. பரப்புரை இயக்கத்தை அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளன தேசிய தலைவர் சோ.பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.