தலையங்கம்

நாற்பதாண்டு கால போராட்டங்களுக்குப் பின்னர் வாச்சாத்தி வன்கொடுமையாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்திருக்கிறது. காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்த குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு கூட செல்லலாம். உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அவர்கள் வாச்சாத்தியில் குற்றம் நடந்தபோது இருந்த காவல்துறைக் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித்தலைவர், வனத்துறை அதிகாரி மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியுள்ளார்கள்.

தலையங்கம்

சாதியாதிக்கம், சாதியப்படிநிலை, குலக் கல்வி, குலத் தொழில் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதை வைத்துக் கொண்டு, சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துக்களுக்கு எதிரி, அந்த வகையில் 'இந்தியா' கூட்டணி இந்துக்களுக்கு எதிரி என்று பிரச்சாரத்தைத் திட்டமிட்டு நாடு முழுவதும் பாஜக -சங்கிகள் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டில், சமூகநீதி நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், வனத் துறை அதிகாரிகள் ஆகியவர்களுக்கான கூட்டத்தை துவக்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.

தலையங்கம்

பெருமாள்முருகன்-அர்த்தநாரி, வைரமுத்து-ஆழ்வார், கருப்பர் கூட்டம் - கந்தசஷ்டிகவசம் வரிசையில் இப்போது உதயநிதி ஸ்டாலின்-சனாதனம். ஆர்எஸ்எஸ்-பாஜக சங்கிகளுக்கு அரசியல் செய்ய எப்போதும் தேவை ஏதாவது ஒரு சர்ச்சை. இருப்பதை எடுத்துச் சொன்னால் எகிறிக் குதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். பெருமாள்முருகன், வைரமுத்து, கருப்பர் கூட்டம் எல்லாரும் இருப்பதை எடுத்துக் கூறினார்கள். உதயநிதி ஸ்டாலின் இருப்பதை எடுத்துச் சொன்னதோடு, இருக்கும் அந்த இழிவுகள் நிரந்தரமாக ஒழிக்கப்பட வேண்டும் என்றார். அதுவும் சிவப்பு, கருப்பு, நீலம் புடைசூழ.

தலையங்கம்

எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடந்து முடிந்துள்ளது. பாஜகவை எதிர்கொள்ள 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 28 எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு ஏற்பாடுகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு ஒத்துழைப்போடு கூடிய விரைவில் முடிக்கவும் மக்கள் நலன் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பாக கூட்டணியின் சார்பாக பொதுக் கூட்டங்களை நடத்தவும் தீர்மானித்துள்ளது.

தலையங்கம்

அன்று அனிதா தொடங்கி, இன்று ஜெகதீஸ்வரன் வரை மாணவர்கள் நீட் தேர்வினால் மரணமடைந்துள்ளார்கள் என்றால், ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரனும் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். நீட் தேர்வில் 400 மார்க் எடுத்தும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. பணம் இல்லாததால் தனியார் கல்லூரியில் சேரமுடியவில்லை. மருத்துவர் ஆக வேண்டும் என்கிற தன்னுடைய லட்சியம் நிறைவேறாததால் மாணவர் ஜெகதீஸ்வரன் இறந்து போனார் என்றால், அந்த சோகம் தாளாமல் அவருடைய தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.

தலையங்கம்

குஜராத்தில் நடந்த இஸ்லாமிய இன அழிப்பு தொடர்பாக. பல்வேறு தடயங்களைச் சேகரித்து, அந்த இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உள்ளிட்டோருக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்ற, சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வத்தை, தற்போது சிறைக்குச் செல்ல உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். பில்கிஸ் பானுவை வன்புணர்வு செய்து, அவரின் 3 வயதுக் குழந்தையைக் கொன்று. ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 75வது சுதந்திர தினத்தின்போது குஜராத் அரசால் விடுவிக்கப்பட்டார்கள்.

தலையங்கம்

'தமிழுக்கும் தமிழின் தொன்மைக்கும் உரிய அங்கீகாரத்தை பிரதமர் மோடி வழங்கிவிட்டார். இதுவே தமிழர்களுக்குப் போதுமானது. இனியாவது நிதிப் பங்கீடு, கல்வி உரிமை என எதற்கும் உதவாத விசயங்களுக்காகப் போராடுவதை தமிழர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்'. டெல்லி சென்று மோடியிடம் செங்கோலைக் கொடுத்துவிட்டு வந்த பின்னர் மதுரை ஆதினம் பேசியது இது. மோடி-அமித்ஷா எதிர்பார்த்தது இதைத்தான். இந்த மட அதிபதிகளுக்கு நிதிப் பங்கீடு, கல்வி உரிமையெல்லாம் எதற்கும் உதவாத ஒன்றாம். ஊரை அடித்து உலையில் போட்டு என்பார்களே, அப்படி உட்கார்ந்து தின்னும் இவர்களுக்கு மக்கள் படும்பாடு எப்படி கண்ணுக்குத் தெரியும்.

தலையங்கம்

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மெகா மேளாக்களைத் தான் நடத்திக் கொண்டிருக்கிறார். கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பிரதமருக்கு இருக்கக் கூடிய வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு 'சாலைக் காட்சிகளை' (Road Shows) நடத்தினார். கர்நாடகத்தில் இருந்த பூக்களையெல்லாம் தன் மீது அள்ளி வீசச் சொல்லி ஷோ காட்டினார். ஆனால், அந்த ஷோவுக்கெல்லாம் கர்நாடக மக்கள் தக்க பதிலடி கொடுத்துவிட்டுள்ளார்கள். மோடி ஆட்சிக்கு வந்ததும் எல்லாருக்கும் வங்கிக் கணக்கு, ஏழைகளுக்கும் வங்கிக் கணக்கு என்று சொல்லி காசில்லாமல் வங்கிக் கணக்கை துவக்கச் சொன்னார். அதில் நான் பணம் போடுவேன் என்றார்.