தலையங்கம்:

வேங்கைவயல் கொடுங்குற்றம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மூன்று தலித்துகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு, பாதிக்கப்பட்டவர்களையே, புகார் கொடுத்தவர்களையே குற்றம் சுமத்தியிருக்கிறது. முத்துராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் இம் மூவரும் சேர்ந்து ஊராட்சித் தலைவரின் கணவரைப் பழி வாங்கும் நோக்குடன் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் குடிக்கும் தண்ணீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்தார்கள் என்று சிபிஐசிஐடி போலீஸார், மர்மமாகச் சென்று கொண்டிருந்த வழக்கிற்கு முடிவு எழுதியுள்ளார்கள்.

தலையங்கம்

பாசிசம் தன்னுடைய திட்டங்களைச் செயல்படுத்த அடிப்படையையே மாற்றும். அதற்காக அவை கல்வித் திட்டத்தை, நிலையங்களை, நூலகங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதை முதன்மையான நடவடிக்கையாக மாற்றும். ஒருபுறம் கலாச்சாரம், பண்பாடு என்று பேசிக் கொண்டு இந்தியாவின் சரித்திரத்தை இந்துத்துவாவின் சரித்திரமாக மாற்றும் வேலையை ஏற்கனவே தொடங்கிவிட்ட ஆர்எஸ்எஸ் – பாஜக, கல்வியை காவிமயமாக்கவும் கார்ப்பரேட்மயமாக்கவும் புதிய தேசிய கல்விக் கொள்கையைக்  கொண்டுவந்து எல்லா மாநிலங்களிலும் அதை நேரடியாகவும் மறைமுகமாகவும் திணித்துக் கொண்டிருக்கிறது.

தலையங்கம்

 தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் புயல், மழை, வெள்ளம் என்பது விதியாகவே மாறிக் கொண்டிருக்கிறது. நவம்பரில் எந்த மழையையும் தாக்குப்பிடிக்கத் தயார் நிலையில் இருக்கிறது தமிழ்நாடு அரசு என்று முதலமைச்சர் முதல் அதிகாரிகள் வரை பெருமையாகப் பேசிக் கொண்டிருந்த நிலையில், பெஞ்சல் புயல் வந்து புரட்டிப் போட்டது. 23ம் தேதி உருவான புயல் மெல்ல நகர்ந்து நவம்பர் 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதன் காரணமாக தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன.

தலையங்கம்

தமிழ்நாடு, ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் மின்சார விநியோக நிறுவனங்கள், மத்திய அரசின் சூரிய ஆற்றல் கழகத்துடன் (SECI - Solar Energy Corporation of India) பி.எஸ்.ஏ ஒப்பந்தத்தில் (POWER SALE AGREEMENT - FOR SALE OF SOLAR POWER) கையெழுத்திட்டு இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துப் பெற்ற ஒப்பந்தங்களை வைத்து, அமெரிக்க முதலீட்டார்களை அதானி நிறுவனம் ஏமாற்றியிருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டு  மோடியின் ஆருயிர் நண்பர் அதானியைக் கைது செய்ய பிடி ஆணை பிறப்பித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.