அகழாய்வுகள் வழியாக, சிந்துவெளி பகுதியில் நகரங்கள் - நாகரிகம் கண்டறியப்பட்டதை அறிவித்த நூறாண்டு நிறைவடைந்தது. அதாவது, ஹரப்பா, மொஹஞ்சதரோ ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் முடிவுகள், தி இல்லஸ்ட்ரேட்டட் இலண்டன் நியூஸ் - The Illustrated London News பத்திரிக்கையில், கடந்த 1924 ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி வெளியிடப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.