நாங்குநேரி கொடூரம்: தொடரக் கூடாது குற்றச் செயலுக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்! குற்றம் செய்தது மாணவர்கள் மட்டுமே அல்ல!

பள்ளியில் சாதிய காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்ட மாணவர் சிலர், அதன் தொடர்ச்சி யாக தலித் மாணவன் சின்னத்துரை வீடு புகுந்து கொடூர தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். குற்றமிழைத்தவர்கள், சின்னத்துரையோடு படிக்கும் உயர் சாதி எண்ணத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்!

இது சொல்லொணா கடும் அதிர்ச்சி அளிக்கிறது. சின்னத்துரை தங்கை, சந்திரா செல்வியும் கொடூர காயங்கள் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம், அவர்களது தாத்தா உயிரையும் பறித்துள்ளது.

தமிழ்நாட்டிலும் தலைவிரித்தாடும் சாதியாதிக்க வெறித் தாக்குதல்கள், படுகொலைகள்

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதியாதிக்க வெறித் தாக்குதல்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு மாதத்திற்குள் சுமார் 10 கொலைகள் நடந்துள்ளன. தென்காசி மாவட்டத்தில் பஞ்சாயத்து ஊழியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே வைத்து படுகொலை செய்யப்பட்டார். புளியங்குடி தங்கசாமி கைது செய்யப்பட்டு சிறையில் மர்ம மரணமடைந்தார். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் முத்தையா என்கிற அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் கடந்த ஜூலை 23 அன்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இவர் நாடார் சமூகத்தைச் சேரந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

மோடிக்கு எதிரான கிராம மக்களின் கோபத்திற்கு வடிவம் கொடுப்போம்! மோடியின் முயற்சியை முறியடித்து வேலை உறுதித் திட்டத்தைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோருவோம்!

ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் நாடாளுமன்றத்தில் கிராமப்புற வளர்ச்சி அமைச்சர் கிரிராஜ் சிங் எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். 2022-23 நிதியாண்டு காலத்தில் இதுவரை 5 கோடி தொழிலாளர்களின் பெயர்களை வேலை உறுதித் திட்டத்திலிருந்து நீக்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். இது சென்ற ஆண்டான 2021-2022 காட்டிலும் 247 சதம் அதிகமானதாகும்.

மோடி - ஜோ பைடன் ஜோடி ரகசியம்

ஒரு 12 வயதுடைய சிறுமியை சிலர் நடுரோட்டில் அடித்து உதைத்து சித்தரவதை செய்து கடைசியில் அவர் கண்ணைக் கட்டி, பின்னால் இருந்து சுட்டுக் கொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத் தளத்தில் காணப்படுகிறது. அது காண்போரை குலைநடுங்கச் செய்கிறது.

மக்களின் சீற்றமே எதிரணி அரசியலுக்கு ஆற்றலாக விளங்கும்; மோடி ஆட்சியை வெளியேற்றும்

ஜூன் 23 பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தை, "என்னவாகும் எதிர்க்கட்சிகள் வியூகம்" என்று இந்து தமிழ் திசையும், "பயன் தருமா பாட்னா வியூகம்? என்று தினமணியும் ''பாட்னா கும்பல் கூட்டணியாகுமா?" என்று துக்ளக்கும். கேள்விகள் எழுப்பி செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தலைப்புகளிலிருந்தே இந்த செய்திக் கட்டுரைகளின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம், ஜூன் 23, பாட்னா எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை "ஆக்கபூர்வமான வரவேற்கத்தக்க" நிகழ்வாக, இந்தியாவின் இடதுசாரி, ஜனநாயக அரசியல் சக்திகள் மதிப்பீடு செய்துள்ள போதிலும் மேற்கூறியவாறு சில பத்திரிகைகள் கேள்விகள் எழுப்புகின்றன.

கல்லறையாக மாறிவரும் ரயில் வண்டிகள்? ரயில் போக்குவரத்தில் பாதுகாப்பினை புறக்கணிக்கும் மோடி அரசின் குற்றச் செயலால் விளைந்த நிகழ்வுதான் பாலசோர் ரயில் விபத்து.

ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்த சுகோ கிராமத்தின் முதியவர் ஒருவர், அங்கு பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான உடல்களுக்கு மத்தியில் நடந்து செல்கிறார். ஒன்றன் பின் ஒன்றாக இறந்த உடல்களின் மீது போர்த்தப்பட்டுள்ள துணியை தூக்கி அவர்களின் முகத்தைப் பார்க்கிறார். யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, "கோரமண்டல் விரைவுவண்டியில் பயணம் செய்த என் மகனைத் தேடுகிறேன். ஆனால் அவனை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று அழுதுகொண்டிருந்தவர் உடைந்த குரலில் பதிலளித்தார்.

வேர்களிடம் செல்வோம்! வேரூன்றுவோம்!

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை கூர்மைப் படுத்திட வேண்டுமானால், கட்சிக் கிளைகளை, ஊராட்சிக் (உள்ளூர்) கமிட்டிகளை பலப்படுத்திட வேண்டும் என கட்சி மத்திய கமிட்டி அறைகூவல் அறைகூவல் விடுத்து இருக்கிறது. மே 25, நக்சல்பாரி நினைவு நாள் முதல் ஜூலை 28 வரை அதை சடங்குத் தனமாக அல்ல. ஒரு பெரும் இயக்கமாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறது. ஜூலை 28, தியாகிகள் நினைவு நாளன்று அனைத்து கிளைகளும், கிளை உறுப்பினர்களும் கூடி, பாசிசத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்திட, கட்சிக் கிளைகளை வலுப்படுத்திட சபதம் ஏற்றிட வேண்டும் என திட்டமிட்டு வருகிறது.

பாஜகவிற்கு தென்னிந்திய நுழைவாயில் மூடப்பட்டது!

கர்நாடகா தேர்தலின் ஆரவாரம் இப்போது அடங்கிவிட்டது. சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்று உள்ளது. சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் அளித்துள்ள கர்நாடக மக்கள், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியையும், தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதையும் எதிர்நோக்கியுள்ளனர்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், மன்னர்கள் காலச் செங்கோல்! தமிழர் பெருமிதமா, மதப் பண்பாட்டின் மீட்டுருவாக்கமா ?

காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கர் பிறந்த நாளான மே 28ம் தேதியன்று, புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழா தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த போதும், அதேநாளில் புதிய நாடாளுமன்றம் ஆரவாரமாக திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் சைவ மடாதிபதிகள் / ஆதீனங்கள், சைவப் பண்டாரங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். 'பழங்குடியினரான குடியரசு தலைவர் விழாவிற்கு அழைக்கப்படவில்லை' என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு கட்சிகளும் விழாவைப் புறக்கணித்தன.

சாராயத்தில் ஏது கள்ளச் சாராயம் நல்ல சாராயம்!

'ஈடில்லா ஆட்சி, இரண்டு ஆண்டே சாட்சி" என்று ஆளும் திமுக சாதனைக் கூட்டங் களை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரிலும் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் மரணமுற் றுள்ளார்கள். பலர் சிகிச்சையில் உள்ளார்கள். திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி களில் முக்கியமான ஒன்று பூரண மது விலக்கு. பத்திரிகை நிருபர்கள் திரு. ஸ்டாலின் அவர்களிடம், சாராய ஆலைகள் பல தங்கள் கட்சிக்காரர்களால் நடத்தப்படுகின்றதே! நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆலைகள் மூடப்படுமா என்று கேட்டார்கள்.