முழு வேலை நிறுத்தம்; முடங்கியது சேதாரப்பட்டு தொழிற்பேட்டை

புதுச்சேரி யுனியன் பிரதேசத்திலுள்ள மிகப் பெரிய சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் சேதராப்பட்டு தொழிற்பேட்டைக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளன. 1986ல் துவக்கப்பட்ட தொழிற்பேட்டையான இதில் பத்தாயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இவர்களில் மிகப் பெரும்பான்மையானோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் நிரந்தரமற்றவர்களாகவும் உள்ளனர். பல ஆலைகளில் அடிப்படை சட்ட உரிமைகள்கூட இல்லாமல் தொழிலாளர்கள் பணி புரிய வேண்டியகட்டாயம் உள்ளது.

பணி நிரந்தரம் கோரி கர்நாடகா சுகாதாரப் பணியாளர்களின் வெற்றிகரமான வேலை நிறுத்தம்

கர்நாடகா முழுவதுமுள்ள சுகாதாரப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளோடு பணிகளை நிரந்தரமாக்க வேண்டுமென்ற கோரிக்கையையும், மாநிலத்தில் உள்ள பிஜேபி தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொண்டது என்பது அவர்களுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும்.

ஏஐசிசிடியூ தேசிய கவுன்சில் கூட்டம்

ஜூலை 10-11, 2022 இரண்டு நாட்கள் கோவை மாநகரில் சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவரங்கில் ஏஐசிசிடியூ வின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்ற அரங்கமும் வீதியும் கொடிகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீதியின் நுழைவாயிலில் சின்னியம்பாளையம் தியாகிகள் படங்கள் கொண்ட பதாகை வைக்கப்பட்டிருந்தது. அரங்க வாயிலில் அலங்கார வளைவுகள் மற்றும் அரங்கத்தில் ஏஐசிசிடியு முன்னோடி முன்னோடி தலைவர்களான தோழர்கள் டி.பி.

காவிப் பாசிசத்தை வீழ்த்திடுவோம்! புதியதோர் சமத்துவ சமுதாயத்தைப் படைத்திடுவோம்!

மோடி ஆட்சியின் அடக்குமுறைகளும், மோசடிகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக சங்கிகளின் ஆட்சி, மோடி என்கிற தனிநபரின் ஆட்சி என்பதாக இந்திய ஜனநாயகம் சர்வாதிகாரமாக, பாசிசமாக மாறி வருகிறது. சர்வாதிகாரம், யதேச்சாதிகாரம் என்பன அடிப்படையில் அரசு எந்திரத்தை பயன்படுத்தி ஏவப்படும் ஒடுக்குமுறை ஆகும். பாசிசம் என்பது அரசு எந்திரத்தோடு கூடவே, தனியார் படைகளை, அரசு சாராத படைகளை, அரசு சாராத கும்பல்களைப் பயன்படுத்தி ஏவப்படும் ஒடுக்குமுறை ஆகும். இதுவும் கூட பாசிசத்தின் ஒரு முக்கிய அம்சம் ஆகும்.

ஆகஸ்ட் 24, 2022 மறைமலை நகரில் போர்டு தொழிற்சாலை வாயிலில் போராட்டம்!

ஆகஸ்ட் 24, 2022 மறைமலை நகரில் போர்டு தொழிற்சாலை வாயிலில் நஷ்ட ஈடு வேண்டாம் வேலைதான் வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒன்று கூடிய தொழிலாளர்கள் மத்தியில் AICCTU மாநில சிறப்பு தலைவர் தோழர் சொ.இரணியப்பன், RYA மாவட்டதலைவர் தோழர் C.இராஜேஸ்குமார் அவர்கள் போர்டு தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துங்கள் AICCTU தொழிற்சங்கம் உங்களுக்கு உறுதுனையாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கினர்.

AICCTU மாநில கவுன்சில் கூட்டத்தின் 2வது நாளில் உறுதிமொழி உறுதியேற்பு!

த.நா. AICCTU மாநில கவுன்சில் கூட்டத்தின் 2வது நாள் கூட்டம் துவங்குவதற்கு முன்பு, மூத்த தொழிற்சங்க தலைவர் தோழர். சுகுந்தன் தேசியக் கொடி ஏற்றினார்.பின்னர், அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையை வாசித்து மாநில கவுன்சில் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

தோழர் மகேந்திரன் அகால மரணம் தோழருக்கு செவ்வஞ்சலி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) திருச்சி மாவட்ட கமிட்டி உறுப்பினர், AICCTU தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் மகேந்திரன் அகால மரணம் அடைந்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளாக கட்சியின் பல்வேறு மட்ட பொறுப்புகளில் பணியாற்றிய தோழர். மகேந்திரனுக்கு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) தமிழ்நாடு மாநில கமிட்டி அஞ்சலி செலுத்துகிறது. அவரது பிரிவால் துயர் உறும் அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறது.