தோழர் தட்சிணாமூர்த்திக்கு செவ்வஞ்சலி !

 

புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை இகக(மாலெ) கிளை நீண்ட கால உறுப்பினர் தோழர் தட்சிணாமூர்த்தி கடந்த 02.08.2022 அன்று மரணமடைந்தார். கட்சியின் போராட்டங்களில் குடும்பத்துடன் பங்கெடுக்கும் தோழர் அவர். 2007ல் இதகவில் இருந்து இகக(மாலெ) யில் இணைந்தவர்களில் பலர் திரும்பிச் சென்றுவிட இறுதி மூச்சுவரை கட்சியுடன் நின்றவர். தோழருக்கு செவ்வணக்கம்.

தோழர் மகேந்திரனுக்கு செவ்வஞ்சலி !

இகக (மாலெ) திருச்சி மாவட்டக்குழு உறுப்பினரும் ஏஐசிசிடியு மாநிலப் செயற்குழு உறுப்பினருமான தோழர் மகேந்திரன் சாலை விபத்தில் சிகிச்சை பலன் இன்றி 11.8.2022 அன்று மரணமடைந்தார். அவரது இறப்பு கட்சி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோழர் மகேந்திரன் இகக(மாலெ) கட்சியில் ஆரம்ப காலத்தில் முழுநேர கட்சிப் பணியாற்றினார். அதற்குப் பின்னர் குடிநீர் வடிகால் வாரியத்தில் மீண்டும் பணியில் சேர்ந்து அங்குள்ள தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கப் பணியாற்றி வந்தார். தோழர் மகேந்திரன் பெரம்பலூர் மாவட்ட ஏஐகேஎம் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 12.8.2022 திருச்சியில் நடைபெற்றது.

ஏஐசிசிடியு மாநிலக் குழுக் கூட்டம் அழைப்பு

2022 ஆகஸ்டு 14, 15 இரு நாட்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஏஐசிசிடியு மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தோழர்கள் சங்கரபாண்டியன், இரணியப்பன், அந்தோணிமுத்து, பாலசுப்பி ரமணியன், சுசீலா, சுகுந்தன் ஆகியோர் கொண்ட குழு தலைமை ஏற்று நடத்தியது. சமீபத்தில் காலமான ஏஐசிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மகேந்திரன், ஏஐசிசிடியு விசைத்தறி தொழிலாளர் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் தோழர் மாணிக்கம் மற்றும் மத்திய சுகாதாரத் துறை ஊழியர்களின் தொழிற்சங்கத் தலைவர் தோழர் ராம்கிஷன் (ஆகஸ்ட் 17 முதலாம் ஆண்டு நினைவு தினம்) ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

செப்டம்பர் 15, 2022 சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் AICCTU ஆர்ப்பாட்டம்!

செப்டம்பர் 15, 2022 ஆம்பூர் வாணியம்பாடி புளோரின் யுனிஸ்கோ தொழிலார்களின் வாழ்வாதரத்திற்கு நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தோழர் சுகுந்தன் தலைமையில், தோல் மற்றும் தோல் பொருள் ஜனநாயக தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சதிஸ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

AICCTU மாநில சிறப்பு தலைவர் சொ.இரணியப்பன், மாநில செயலாளர்கள் திருநாவுக்கரசு, U.அதியமான், AIPWA மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேனி மற்றும் CPIML மாநில செயலாளர் NK நடராஜன் உள்ளிட்ட தோழர்கள் சிறப்புரையாற்றினர்.

ஆகஸ்ட் 28, 2022 சேலம் அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தூய்மை பணியாளர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம்

28.08.22 ஞாயிறு சேலம் அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தூய்மை பணியாளர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம் குப்பனூரில் நடைப்பெற்றது.

தோழர் மோகனசுந்தரம் மாவட்ட செயலாளர் இகக(மா-லெ) சிறப்புரை ஆற்றினார்.

தோழர் V.அய்யந்துரை மாவட்ட செயலாளர் AIKM தோழர் அ.வேல்முருகன் துணைச்செயலாளர. AICCTU .தோழர் V.சுரேஷ் தோழர் பி .ராவணன் தோழர் சண்முகசுந்தரம் தோழர் அறிவழகன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

குப்பனூர் தைலனுர் கூட்டாத்துப்பட்டி அயோத்தியாபட்டணம் ஆச்சகுட்டப்பட்டி ஊராட்சிகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்

கோரிக்கை முடிவுகள்:-

தோழர் மாணிக்கத்திற்கு செவ்வஞ்சலி

நாமக்கல் மாவட்ட ஏஐசிசிடியு ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் ப.மாணிக்கம் உடல் நலக் குறைவால் 31.7.2022 அன்று காலமானார். அவரது வீட்டிற்குச் சென்று இகக(மாலெ) மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் அ.சந்திர மோகன், நாமக்கல் மாவட்டச் செயலாளர் தோழர் பொன்.கதிரவன், ஒன்றிய செயலாளர் தோழர் வெங்கடேசன், நகர செயலாளர் தோழர் சுப்ரமணி மற்றும் தோழர்கள் முருகன், பேபி, இக்க(மாலெ) மற்றும் ஏஐசிசிடியு முன்னணி நிர்வாகிகள், தோழர் மாணிக்கம் உடலுக்கு செங்கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.