இப்போது நம்முடைய அரசாங்கம், 'ஒரு நாடு, ஒரு தேர்தல், ஒரு வாக்கு, ஒரு மொழி, ஒரு மதம்' ஆகியவற்றிற்கு அதிக அழுத்தம் கொடுகிறது. அவர்களுடைய முறைப்படி 'ஒன்றை’ உருவாக்குவதற்கு, இந்து இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் மற்றவருடன் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும். சங்பரிவார் சாதிய முறையின் அடித்தளத்தை நன்கு புரிந்துகொண்டு, அதை பயன்படுத்துவதோடு, அது நிலைத்திருக்கச் செய்ய முயற்சிக்கிறது. திறந்தவெளியில் தீப்பிடிக்க ஒரு தீப்பொறி போதும் என மாவோ கூறினார். ஆனால், நமது சமூகம் திறந்தவெளியல்ல, இது திக்குத் தெரியாத காடு. அதற்குள் தீப்பொறி கூட காணாமல் போகும். சாதிய அமைப்பு முறைதான் அந்த திக்குத் தெரியாத காடு.