நாடு முழுவதும் குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக பாஜகவிற்குப் படையெடுக்கிறார்கள் என்பது ஒரு புறமிருக்க, ஏற்கனவே பாஜகவில் இருப்பவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அதுவும் பாலியல் குற்ற வழக்குகளில் முதலிடத்தில் பாஜக உள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது. மகள்களைப் பாதுகாப்போம் என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என்றும் பேசிக் கொண்டிருக்கும் மோடியின் ஆட்சியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கே பாதுகாப்பு இல்லை.
அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகத்தின் மாநில ஊழியர் கூட்டம் 16.04.2023 அன்று திருச்சி அருண் ஓட்டலில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் ரேவதி, இக்க(மாலெ) கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர் கிருஷ்ணவேணி, தேன்மொழி, பிலோமினா, ஈஸ்வரி, மனோன்மணி கொண்ட தலைமைக்குழு கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தியது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் சாதனைகளை மதிக்கவும் பெண்களின் உரிமைகளை மேம்படுத்தவும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சர்வதேச பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும், பெண்கள் தினம் என குறிக்கப்பட்டுள்ள எட்டு மணிநேர வேலையின் வெற்றி, புதிய தொழிலாளர் சட்டங்களின் மூலம் தலைகீழாக மாற்றப்பட்டு வருகிறது என்பது நமது காலத்தின் நகைமுரணாகும். பணியிடங்களில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தக்கூடிய சம வேலைக்கு சம ஊதியத்திற்கான உத்தரவாதம் இன்னும் அளிக்கப்படவில்லை.
ஈரானில் ஆடை நெறிமுறையை மீறினார் என்று 'கலாச்சாரக் காவல்துறையினர்' எடுத்த நடவடிக்கையின் காரணமாக 22 வயது மாஷா அம்னி மரணமடைந்தார். இதை அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவர் டெக்ரானிற்குச் சென்று கொண்டிருந்தபோது அவரைக் கைது செய்து, கடந்த செப் 13, 2022 முதல் சிறைப்படுத்தி வைத்திருந்தனர் ஈரானின் ஒழுக்க நெறி காவல்துறையினர். அவரைக் கொடூரமாக அடித்து, ஹிஜாப் பற்றிய நீதியையும் கல்வியையும் கற்றுக் கொடுப்பதற்காக, அவப்புகழ் பெற்ற 'ஒஷாரா' சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர். செப் 16, 2022 அன்று அவர் மரணமடைந்துவிட்டார்.
பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டும் என்றும் அவருக்கு அநீதி இழைத்த, ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் விடுதலை செய்யப் பட்டதைக் கண்டித்தும் அவர்களை மீண்டும் சிறையில் அடைக்கக் கோரியும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்றன.
கனியாமூர் மாணவி மர்ம மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் அந்த மாணவியின் மரணத்துக்கு இணையான பேரதிர்ச்சியை தருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ள்ளவர்களின் பிணை மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துகள் நீதிமன்ற நடைமுறை மரபுகளையே சிதைப்பதாக உள்ளது. கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அய்வரும் பொய்யான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்! இந்த மரணத்தில் கொலையோ, பாலியல் வன்முறையோ நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
சேலம் தூய்மைப் பணியாளர்கள் கூட்டம்
காவிரிப் படுகை விவசாயத்தைப் பாதுகாப்பதில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிலைப்பாடு என்னவாகஇருக்க வேண்டும்?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)