தலையங்கம்

சமீபத்தில், இந்திய உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்களால், ஏற்கனவே கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு ஒரு கையில் தராசும் மற்றொரு கையில் வாளும் வைத்துக் கொண்டு இருக்கும் நீதி தேவதைக்குப் பதிலாக, கண்களை துணியால் கட்டாமல், ஒரு கையில் தராசும் மற்றொரு கையில் அரசியலமைப்புச் சட்டப் புத்தகமும் வைத்துக் கொண்டு இருக்கும் நீதி தேவதை சிலை திறந்து வைக்கப்பட்டது. இது பொதுச் சிவில் சட்டத்தைக் குறிக்கும் நீதி தேவதை என்றும் பாரத மாதாவின் வடிவில் உள்ள நீதி தேவதை என்றும் பலரும் மெச்சிக் கொண்டனர்.

யார் குற்றவாளி?

பள்ளிக்கூடத்தில் (பெண்) ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருக்க கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்கள், ஆடிப்பாடிக் கொண்டிருக் கிறார்கள்.” “பேருந்தில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த மாணவிகள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக அடித்துப் புரள்கிறார்கள்” “பள்ளி மாணவன் ஒருவன்