மழை வெள்ளத்தில் மக்கள் பணி
செங்கற்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு வரை செல்லும் சாலையில் பெருமாட்டு நல்லூர் சந்திப்பில் ஒவ்வொரு மழைக்காலத்திலும் பெரு வெள்ளம் ஏற்பட்டு சாலை போக்குவரத்து துண்டிக்கப்படும். 27.11.2021 அன்று பெருவெள்ளத்தில் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. சிபிஐஎம்எல் மாவட்டக்குழு உறுப்பினர் சி.இராஜேஸ்குமார் பெருமாட்டுநல்லூர் கிளைச் செயலாளர் சுதாகர் பெருவெள்ளத்திலும் செங்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். அதிகாரிளுக்கு தகவல் போனதும் வண்டலூர் தாசில்தார் நேரடியாக வந்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றினார்.
திருநெல்வேலி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி என்று சொல்லி வேலை நடக்கிறது. ஆனால், மழையில் சாலைகள், தெருக்களில் வெள்ளம். வெள்ளம் வடிந்தால் சகதி. கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. திருநெல்வேலி குன்னத்தூர் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் கால்வாயை அதிகாரிகள் குடியிருப்பு பக்கம் வெட்டிவிட எத்தனித்தனர். உடனடியாக புரட்சிகர இளைஞர் கழக மாநிலத் துணைத் தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் தோழர்கள் தலையிட்டு அதிகாரிகளுடன் சண்டை போட்டு, கால்வாயில் உள்ள அடைப்பை அகற்றச் செய்து அதற்குரிய வழியில் தண்ணீர் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.