எமக்கு தேவை வாழ்வாதாரம், சமத்துவம்
நமக்கு தேவை போரல்ல, அமைதி!
ருஷ்யாவே உக்ரைனை தாக்குவதை நிறுத்து:
அமெரிக்கா-நேட்டோவே விரிவாக்க சதியை நிறுத்து!
என்ற முழக்கங்களுடன் மார்ச் 8, அகில உலக மகளிர் நாள் நிகழ்வுகளை அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் இந்தியா முழுவதும் நடத்தியது.
பீகார்:
சமஸ்திபூரில் ஏராளமான பெண்கள் கொடிகள், பதாகைகள், தட்டிகளுடன் ஊர்வ லத்தில் கலந்துகொண்டனர். யுத்த எதிர்ப்பு முழக்கங்களுடன் பைரோபட்டி வன்புணர்வு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை உடன டியாக கைதுசெய்ய வேண்டுமென்றும் வலியுறுத் தப்பட்டது. இந்த நிகழ்வில் பெண்கள் கழக மாநிலச்செயலாளர் சசியாதவ், இந்தியாவில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்ப டுகின்றனர். இதை மாற்றியமைத்திட போராடி யாக வேண்டும் என்று கூறினார். மாவட்டத் தலைவர் வந்தனாசிங் பேசியபோது, இன்று ஆட்சி நடத்துபவர்கள், பாதிக்கப்பட்ட பெண் களை பாதுகாப்பதற்கு மாறாக குற்றவாளிகளை பாதுகாப்பதாக சாடினார். இதற்கெதிராக நீதிகிடைக்கும் வரை பெண்கள் கழகம் இடைவிடாது போராடும் என்று உறுதி கூறினார்.
பூர்னியா மாவட்டம் ருபவுலியில், கருத் தரங்கம் நடைபெற்றது. பாகல்பூரில் பெண்கள் பேரணி நடைபெற்றது. பேரணி முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாவட்டச் செயலளர் ரேணுதேவி பேசினார். பாஜக அரசாங்கம் இன்று ஹிஜாப் சச்சரவை எழுப்பி பெண்களுக்கு கல்வியை மறுக்கிறது என்று கூறியவர் சாவித்திரிபாய் கனவை பாஜக கேலிக்கூத்தாக்குகிறது என்று சாடினார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மோடி-நிதிஷ் ஆட்சியை மக்கள் விரோத, பெண்கள் விரோத ஆட்சி என்று முழக்கமிட்டனர்.
ஆர்வாலில் நடைபெற்ற பேரணியை தோழர்கள் கிரண் தேவி, புல்வாதி தேவி, குந்தி தேவி ஆகியோர் தலைமைதாங்கி நடத்தினர். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் அவர்கள் மீது அத்துமீறல் நடத்தியவர்களை உடனடியாக தண்டிக்கவேண்டும் என்று இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த மிகப் பெரிய பெண்கள் பேரணி நடத்தப்பட்டது. போர் எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் பேரணியில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத் தலைவர்கள் பலரும் உரையாற்றினர்.
பஞ்சாப்:
மான்சாவில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் கழகத் தலைவர் ஜஸ்பீர் கவுர் நாத் பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மோடி அரசாங்கத்தின் மதவெறி- கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள் பெரும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது, சமூக ஒற்று மையை சீரழிக்கிறது என்று குற்றஞ்சாட்டினர். நிகழ்ச்சியில் முற்போக்கு பாடகர், சுக்பிர் கரா, புரட்சிகர பாடல்களைப் பாடினார்.
தில்லி:
தில்லி பெண்கள் கழகம், இகக(மாலெ), ஏஅய்சிசிடியு இணைந்து அகில உலக மகளிர் நாளை, வாசிர்பூர் தொழிற்பேட்டைப்பகுதியில் நடத்தின. லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களை கட்டமைத்தி ருந்தனர்.
ராஜஸ்தான்:
ராஜஸ்தானில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமும் பல்வேறு முற்போக்கு மகளிர் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ராஜஸ்தான் தலைநகர் உதய்பூரில் பேரணி, கருத்தரங்கத்தை நடத்தின. உதய்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்க கருத்தரங்க கூடத்தில் நடை பெற்ற கருத்தரங்கில், 'மகளிர் சுதந்திரமும் இன்றைய சவால்களும்' என்ற தலைப்பில் பலரும் உரையாற்றினர்.
தமிழ்நாடு:
கந்தர்வக்கோட்டையில் இகக(மாலெ), பெண்கள் கழகம் நடத்திய பேரணி, ஆர்ப்பாட் டத்தில் ஏராளமான கிராமப்புர பெண்கள் கலந்து கொண்டனர். 500 பேர் வரை கலந்துகொண்ட இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “தேசிய ஊரக வேலைத்திட்ட வேலையும் அரசு வேலையே”, என்ற முழக்கத்துடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள் கழக மாநில அமைப்பாளர் ரேவதி, வனிதா உள்ளிட்ட பெண்தலைவர்களும் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆசைத்தம்பி, அவிகிதொச மாநிலதுணைப் பொதுச்செயலாளர் வீ.மூ. வளத்தான், அவிகிதொச மாவட்டத் தலைவர் ஜோதிவேல், செயலாளர் சி.ரங்கசாமி, வீரடிப்பட்டி ஊராட்சித் தலைவர் ராசாங்கம் ஏஅய்சிசிடியூ சிவராஜ், அய்சா உயிரோவியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் ஆசைத்தம்பி, அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாநிலத்தலைவர் அ.சிம்சன், அவிகிதொச மாநிலத்தலைவர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்கள். இந்தியாவையும் பாதிக்கும் உக்ரைன் மீதான ருஷ்யப்போரை நிறுத்த வேண்டும்: ருஷ்யாவின் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வேண்டுமென்ற பெண்கள் கழக கோரிக்கைகளை வலியுறுத்தி பாலசுந்தரம் பேசினார்.பெண்களின் ஆவேச முழக்கங்களைக் கண்டு கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக வட்டார வளர்ச்சி அதிகாரி அறிவிக்க வேண்டியதாற்று.
மதுரையில், பெண்கள் கழக மத்திய அமைப்பு வெளியிட்டிருந்த துண்டறிக்கையை அச்சடித்து பாத்திமா பெண்கள் கல்லூரியில் வழங்கினர். சுமார் 1000 மாணவிகள் மத்தியில் துண்டறிக்கை வழங்கப்பட்டது. மதுரை மாவட்ட அமைப்பாளர் மல்லிகாராணி, ஈஸ்வரி, முத்துராக்கு, மங்கையர்க்கரசி உள்ளிட்ட 10 க்கு மேற்பட்ட பெண் தோழர்கள் கலந்து கொண்டனர். குமரி மாவட்ட தலைநகர் நாகர் கோவிலில் பெண்கள் கழக முன்னணி ஊழியர்கள் கார்மல், சுசீலா உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு உறுதி ஏற்பு கூட்டத்தை நடத்தினர். தேனிமாவட்டம் உத்தம பாளையத்தில் பஞ்சமி நிலம், வீட்டுமனை கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அவிகிதொச பொதுச்செயலாளர் குணசேகரன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோபால், இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் இளையராஜா உள்ளிட் டோர் உரைநிகழ்த்தினர். கரூரில், பெண்கள் கழகத்தின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பிலோமினாள் தலைமையில் உறுதியேற்பு கூட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)