மோடி உத்தரவாதம் - உலக மகா வாய்ச் சவடால்

என்ன செய்தார் மோடி?

 

 

      வாய்ச் சவடால் உத்தரவாதம்  

 

உண்மை

 

இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்படுகிறது மோடி அரசு.

சிறுபான்மையினருக்கு, ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்புச் சட்டம்?

மார்ச் 11 அன்று தேர்தல் பத்திரங்கள் சம்பந்தமாக தேவைப்படும் தகவல்களை வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற ஸ்டேட் பேங்கின் வேண்டுகோள் மீது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக இந்த நாடு காத்துக் கொண்டிருந்தது. ஆனால். அதே நாள், குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஐ அமல்படுத்துவதற்கான விதிகளை, மிக நீண்ட காலம் கழித்து, மோடி அரசாங்கம் அறிவித்தது. இச்சட்டம் 2019 டிசம்பர் 11 அன்று நிறைவேற்றப் பட்டிருந்தது. ஆனால் அதற்கான விதிகளை அறிவிப்பதற்கு மோடி அரசாங்கத்திற்கு 51 மாதங்கள் ஆகி இருக்கிறது. ஏன்? ஒரே காரணம்தான். 2024 தேர்தல்.

தலித்துகள் மீது முடிவின்றித் தொடரும் வன்கொடுமைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்!

தமிழ்நாட்டில், தலித்துகள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வன்கொடுமைகள் நடந்துள்ளன. இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. மாதிரிக்குச் சில....

புதுக்கோட்டை வேங்கைவயல்

2022ம் ஆண்டு டிசம்பரில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கயவர்கள் மலம் கலந்தார்கள். குற்றவாளிகள் சாதியாதிக்க சக்திகள்தான் எனத் தெரிந்த போதும், தலித்துகளையே குற்றவாளிகள் ஆக்க முயற்சிக்கப் பட்டது. சிறப்பு புலனாய்வு, உயர்நீதிமன்ற புலனாய்வு எல்லாம் நடந்தும் குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப் படவில்லை. 

மதுரை மாவட்டத்தில் நிலமீட்பு போராட்டங்கள்

நகர்மயமாதல் அதிகமாகிவருகிறது. அதன் தாக்கம் கிராமப்புற பகுதிகளுக்கும் பரவுகிறது. பெருநகரங்களுடன் சாலைகளால் இணைக்கப் பட்டுள்ள பேரூராட்சிகளின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. கிராமங்களில், தங்கள் தங்கள் சாதி வளைகளில் சிக்குண்ட மக்கள் குடியிருப்புகள் போதாமல் விழிபிதுங்குகின்றன. அவர்கள் தங்களுக்கான புதிய வீடுகளைக் கட்டிக்கொள்ளாதபடி, நிலத்தின் விலை அதிகரிப்பும், சாதிச் சுவர்களும் தடுக்கின்றனர். இதனால் கிராமப்புறங்களில் வீட்டுமனைக்கான தேவை அதிகரித்தும் வீடுகளை உருவாக்கிக் கொள்ள முடியாத நிலை இருக்கிறது.

தமிழ்நாட்டிலும் தலைவிரித்தாடும் சாதியாதிக்க வெறித் தாக்குதல்கள், படுகொலைகள்

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதியாதிக்க வெறித் தாக்குதல்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு மாதத்திற்குள் சுமார் 10 கொலைகள் நடந்துள்ளன. தென்காசி மாவட்டத்தில் பஞ்சாயத்து ஊழியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே வைத்து படுகொலை செய்யப்பட்டார். புளியங்குடி தங்கசாமி கைது செய்யப்பட்டு சிறையில் மர்ம மரணமடைந்தார். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் முத்தையா என்கிற அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் கடந்த ஜூலை 23 அன்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இவர் நாடார் சமூகத்தைச் சேரந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்தியாவைக் காக்க ஜனநாயகத்தை காப்பாற்றியாக வேண்டும்

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டின் தலைமைக் குழு தோழர்களுக்கும் மற்றுமுள்ள தலைவர் களுக்கும் மாநாட்டு பிரதிநிதிகளுக்கும் அனைத் திந்திய விவசாய, கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தின் வணக்கத்தையும் வாழ்த்து களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சாராயத்தில் ஏது கள்ளச் சாராயம் நல்ல சாராயம்!

'ஈடில்லா ஆட்சி, இரண்டு ஆண்டே சாட்சி" என்று ஆளும் திமுக சாதனைக் கூட்டங் களை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரிலும் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் மரணமுற் றுள்ளார்கள். பலர் சிகிச்சையில் உள்ளார்கள். திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி களில் முக்கியமான ஒன்று பூரண மது விலக்கு. பத்திரிகை நிருபர்கள் திரு. ஸ்டாலின் அவர்களிடம், சாராய ஆலைகள் பல தங்கள் கட்சிக்காரர்களால் நடத்தப்படுகின்றதே! நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆலைகள் மூடப்படுமா என்று கேட்டார்கள்.