ஈரோடு எஸ்கேஎம் பூர்ணா எண்ணெய் ஆலையில் பீகார் தொழிலாளி மரணம்... காவல்துறை அத்துமீறல்... புலம் பெயர் தொழிலாளர்கள் கைது - உண்மை அறியும் குழுவின் பரிந்துரை
ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளியில் இயங்கி வரும் எஸ்கேஎம் பூர்ணா ஆயில் மில்லில் பீகார் தொழிலாளர் மரணத்தால் ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்கள், அதனைத் தொடர்ந்து 40 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக உண்மை அறிய ஏஐசிசிடியு மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலசுப்பிரமணியன், அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்க மாநிலக் குழு வழக்கறிஞர் பாரதிமோகன், புரட்சிகர இளைஞர் முன்னணி பாலு, ஏஐசிசிடியு நிர்வாகிகள் வெங்கடேஷ், முத்து, பால்ராஜ் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, நஞ்சை ஊத்துக்குளி எஸ்கேஎம் பூர்ணா ஆயில் மில் தொழிலாளர்கள் குடியிருப்பு, ஆலை வளாகம் ஆகியவற்றில் பணியாற்றும் பீகார் தொழிலாளர்கள், ஆலை நிர்வாக அதிகாரி, மொடக்குறிச்சி காவல்துறை அதிகாரிகள், ஈரோடு தொழிற்துறை அதிகாரிகள், பொதுமக்கள், கோவை சிறையில் கைதாகியுள்ள தொழி லாளர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து ஆய்வுகளை மேற்கொண்டது. உண்மை அறியும் குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலான அறிக்கை அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் மற்றும்- அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கம் சார்பாக 13.4.2022 அன்று ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி சந்தோசினி சந்திரா அவர்களிடம் வழங்கப் பட்டது. இதில் ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் சங்கரபாண்டியன் கலந்து கொண்டார்.
அறிக்கையில் முன்வைக்கப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கான பரிந்துரைகள்:-
U எஸ்கேம் நிறுவன ஆலைகளில் பணிக்கு தொழிலாளர்கள் வந்து போகும் நேரங்களில் அதாவது ஒரு ஷிப்ட் முடிந்து ஆட்கள் மாறும் நேரங்களில் கனரக வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது அல்லது மாற்றுப் பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
U பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளத்தை அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
U மாதாந்திர சம்பளத்தை நிர்வாகமே நேரடியாக சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டியதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
U புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1979-ஐ கறாராக அமல்படுத்தப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
U தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு அடிப்படை தேவைகளை செய்து கொடுத்து முறையாக பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
U தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ (ணிஷிமி) அடையாள அட்டைகள் அவர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
U புதிதாக தொழிலாளர்களை பணிக்கு நியமிக்கும்போது இடைத்தரகர்களை இல்லாமல் நிர்வாகமே நேரடியாக தேர்வுசெய்து நியமித்துக்கொள்ள வேண்டும்.
U தொழிலார் நலன் சார்ந்த சட்டங்களை அமல்படுத்தாத தொழிற்சாலைகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழக அரசுக்கு வேண்டுகோள்
டி தமிழ்நாடு தொழில் உற்பத்தியில், சேவை துறைகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் பங்களிப்பு கணிசமாக இருக்கிறது. சுமார் 15 இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களது உழைப்பு தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு அவசியமான தாகும் என தொழிலதிபர்களும் பல்வேறு சமயங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
டி எஸ்கேஎம் ஆலையில் நடைபெற்ற அசம்பா விதங்களுக்கு ஆலை நிர்வாகமும் நிலை மையை நெளிவு சுளிவாகக் கையாளாமல் பலப் பிரயோகம் செய்த மொடக்குறிச்சி காவல் துறையினரும் பொறுப்பாகும். ஆனால், தொழிலாளர்களை மட்டுமே குற்றவாளியாக்கி 40 தொழிலாளர்களை கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் புனைந்து சிறையில் அடைத்திருப்பது நியாயமானது அல்ல. எனவே, அவர்கள் மீதான வழக்குகளை திரும்பிப் பெற்று அவர்களை விடுதலை செய்ய உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். விபத்தில் பலியான பீகார் தொழிலாளி குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுகிறோம்.
டி தொழிற்சாலை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் நல அலுவலர்கள் சரியான முறையில் தொழிற்சாலை ஆய்வுகளை மேற்கொண்டு தொழிலாளர் சட்டங்களை அமலாக்க வேண்டும் என்றும் தவறு செய்கிற நிர்வாகம் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகிறோம்.
டி எஸ்கேஎம் ஆலை நிர்வாக அதிகாரிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். பணியிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
டி தம்மோடு பணியாற்றிய தொழிலாளி இறப்பால் உணர்ச்சிவசப்பட்டத் தொழிலாளர்களை சமாதானப் படுத்த முயற்சிக்காமல் நிர்வாகத் தூண்டுதலின் பேரில் போலீஸ் தடியடி நடத்தியது சட்டத்திற்குப் புறம்பானது.நடந்த சம்பவத்துக்கு காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையும் முதிர்ச்சியின்மையும்தான் காரண மாகும். சம்பவத்திற்கு காரணமான காவல் துறையினர் மீது துறைவாரி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் பணியிட மாற்றம் செய்யப் பட வேண்டும்.
டி எஸ்கேஎம் ஆலையில் நடைபெற்ற புலம் பெயர்ந்த தொழிலாளர் மரணம் குறித்தும் அதை ஒட்டி நடைபெற்ற சம்பவம் குறித்தும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கோருகிறோம்.
டி தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பையும் உத்தரவாதம் செய்திட வேண்டுகிறோம்.
டிகுறுகிய அரசியல் நோக்கம் கொண்ட சில அமைப்புகள், இதை தொழிலாளர்கள் பிரச்சினையாக பார்க்காமால், "இந்திக்கார தொழிலாளர்கள் வெளியேற்றப்பட வேண்டும்" என்ற இனவெறுப்பு அரசியலில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக இகக(மாலெ)விடுதலையின் பீகார் சட்டமன்றக்குழுத் தலைவர் மெகபூப் ஆலம், உடனடியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது மட்டுமின்றி, கடிதமும் கொடுத்துள்ளார். அதன் பின்னணியிலும், உண்மை அறியும் குழு எடுத்த முயற்சியினாலும் மரணமடைந்த தொழிலாளியின் குடும்பத்தினரை விமானத்தில் வரவழைத்து நிர்வாகம் ரூ.5 லட்சம் முதற்கட்டமாக வழங்கியுள்ளது. மேலும் இழப்பீட்டுத் தொகை ரூ.8.5 லட்சத்தையும் வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளது. நிர்வாகம் இப்போது எடுத்த நடவடிக்கையை தொழிலாளி இறந்தவுடன் எழுத்துபூர்வமாக மேற்கொண்டிருந்தால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)