புதுச்சேரியில் தொடரும் எல் அண்ட் டி போராட்டம்

                புதுச்சேரி எல் அண்ட் டி ஆலைகளில் தொழிலாளர்கள் போராட்டம் 30 நாட்களாக நீடிக்கிறது. சட்ட பூர்வ வேலை நிறுத்தத்தின் போது நிர்வாகம் புதிய தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதை புதுச்சேரி அரசு தடை செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக் கிறது. நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி தொழிலாளர்கள் ஆலை வளாகத்தைச் சுற்றி 500 மீட்டர் வரை போராட்டங்கள் நடத்த தடைபெற முயற்சி செய்ததுதொழிலாளர் களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்த மாண்புமிகு நீதி அரசர் ஜெகதீஷ் சந்திரா, சங்கம் அமைதியான போராட்டத்திற்கு உறுதி அளித்த வகையில் நிர்வாகமும், சங்கமும் நீதியை நிலைநாட்டும் வகையில் பேசித் தீர்த்துக்கொள்ள நீதிமன்ற  கண்காணிப்பில்  சமரச தீர்வுக்கு உத்தரவிட்டார். உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தை ஆலைக்கு வெளியில் அமர்ந்து தொடரும் நிலையில் போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் வட மாநிலத் தொழிலாளர்களையும் புதிய தொழிலாளர்களையும் போலி ஒப்பந்தக்காரர்கள் மூலம் நிர்வாகம் பணியில் அமர்த்தி வருகிறது. அடியாட்கள் போல் செயல்படும் ஒப்பந்தக்காரர்ளை அப்புறப்படுத்த வேண்டி 11. -4-. 2022 அன்று புதுச்சேரி வடக்கு துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடந்தது.