குசராத் கலவரத்தில் மோடி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்கள் கைது
நரேந்திர மோடி பிரதமரான போதும் அச்சப்படாமல், கடந்த 2002 ம் ஆண்டு குசராத் கலவரத்தில் முதலமைச்சராக மோடிக்கு இருந்த பங்கை / பாத்திரத்தை அம்பலப்படுத்த, கொல்லப்பட்ட ஆயிரம் இசுலாமியர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதில் சளைக்காத ஜாகியா ஜாஃப்ரி (அப்போது கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்பி இசான் ஜாப்ரியின் மனைவி) சமூக செயற்பாட்டாளர்கள் டீஸ்டா செடல்வாட், ஆர்.பி.ஸ்ரீகுமார் போன்றவர்களின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறோம்.
டீஸ்டா செடல்வாட் , ஆர்.பி.ஸ்ரீகுமார்
அவர்கள் குசராத் காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டிருப்பது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ஷாவின் திட்டமிட்ட பழிவாங்கும் சதிச் செயலாகும்; இது இந்திய நீதித்துறையை, அரசமைப்புச் சட்டத்தை கேலி செய்வதாகும்.
சமூக செயற்பாட்டாளர்கள், அறிவாளிகள் மீதான அடக்குமுறையை கண்டணம் செய்வோம்!
கைது செய்தவர்களை விடுதலை செய்!
குஜராத் கலவரம் 2002