ஜூன் 27, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாச்சியர் அலுவகம் எதிரில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் நாடு தழுவிய இயக்கம் (ஜூன் 20-27 வரை) தோழர் செல்வி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#CPIML மாவட்ட செயலாளர் தோழர் கலியமூர்த்தி கோரிக்கை விளக்கி பேசினார். 40க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
பெண்களை குறி வைக்கும் மதவெறி வெறுப்பு பேச்சு, வன்முறைக்கு எதிராக;
விலைவாசி உயர்வு வேலை இல்லா திண்டாட்டத்துக்கு எதிராக போராடுவோம்!
பாசிச மோடியை வெளியேற்றுவோம்!
பெண்கள் பாதுகாப்பு, கவுரவம், உரிமைகளுக்காக அணிதிரள்வோம்!
மோடி அரசே,
எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலையைக் குறை,
எரிவாயு உருளை வைப்புத்தொகையை ரத்துசெய்;
கிராமப்புர, நகர்ப்புர பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கு;
தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் படம் எடுக்கும் முறையைக் கைவிடு,
200 நாள் வேலை, ரூ 500 நாள் கூலியை செயல்படுத்து;
அங்கன்வாடி, ஆஷா உள்ளிட்ட திட்டத்தொழிலாளரை நிரந்தரப் படுத்து!
பெண்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன் வழங்கு, பொருட்களை கொள்முதல் செய்!
மாநில அரசே,
சாதி மறுப்பு திருமண ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் கொண்டு வா;
பெண்கள் பலியாவதை தடுக்க கிராமப்புர, நகர்ப்புரங்களில் 100% கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடு!
பொள்ளாச்சி உள்ளிட்ட பெண்கள், சிறுமிகள் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்கு;
ஒன்றியம் தோறும் பெண்கள் குறைதீர்ப்பு மய்யங்கள், பாதுகாப்பான தங்குமிடங்களை ஏற்படுத்து;
தேர்தல் வாக்குறுதிப்படி பெண்களுக்கு உரிமைத்தொகை மாதம் ரூ.1000 வழங்கு;
கெடுபிடி வசூல் செய்யும், பெண்களை இழிவுபடுத்தும் தனியார் நுண்நிறுவனங்கள் மீது கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!