ஆகஸ்ட் 13, 2022 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அடகு வைத்த தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை கொடுத்து ஏமாற்ற முயற்சி…
சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகத்தின் மீது சட்டபடி நடவடிக்கை எடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடைய தங்க நகைகளை உடனடியாக மீட்டு வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் CPIML கட்சி சார்பில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் பழ.ஆசைதம்பி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார், மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை, மாவட்டக்குழு தோழர்கள் சுப்புராமன், முருகேசன், இரவிக்குமார்,இரவி, ஜெயமணி, வடமதுரை பகுதியை சேர்ந்த பிரசனேவ்,அரவிந்த் ஆகிய தோழர்கள் கலந்துகொண்டனர்.