ஆகஸ்ட் 31,2022 புதுக்கோட்டை மாவட்டத்தில் சங்கம் விடுதி கிராமத்தில் மயானம் கேட்டு போராட்டம் நடத்தியதற்கு CPIML கட்சியின் வெற்றி!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம்,

சங்கம் விடுதி கிராமத்தில் அனைத்து சமூக மக்களும் பயன்படுத்துகிற இடுகாடு, சுடுகாடு இரண்டுமே ஒரு ஏரிக்குள்ளே நடுவில் அமைந்திருந்தது. மழைக்காலத்தில் குளத்தில் நீர் பெருகிவிட்டால் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்கிற நிலையை மாற்ற வேண்டும் என்று பல முயற்சிகளும் போராட்டங்களுக்கு சிபிஐ (எம்-எல்), சார்பாகவும் தோழர் ரேவதி CPIML, 8-வது வார்டு உறுப்பினர் அவர்களின் பங்கெடுப்புடன் முன்னெடுக்கப்பட்டது. அதன் விளைவாக சங்கம் விடுதி

ஆதி திராவிடர்களுக்கான மயான கொட்டகை அமைக்கும் திட்டத்தில் ரூ.6,25,000/- நிதி பெற்று புதிதாக மயானத்திற்கு தார்சாலை, மயான கொட்டகை, சுற்று சுவர், தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.