#கொங்கு_மண்டலத்தில்_கொத்தடிமை_சுரண்டலுக்கு_முடிவுகட்டுவோம்!
நாமக்கல் கோழிப் பண்ணைகளில், சம்பளம் வழங்கப்படாமல் கடந்த நான்கு மாதங்களாக கொத்தடிமைகளாக சுரண்டப்பட்ட சத்தீஸ்கர், ஒடிசாவைச் சார்ந்த பழங்குடியினர், தலித் தொழிலாளர்கள் (சிறார்கள் பெண்கள் உட்பட) 38 பேர் மீட்கப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநில செயற்பாட்டாளர்கள் மற்றும் AICCTU தொழிற்சங்கம் கொடுத்தப் புகார்களின் மீது, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. 38 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் நேற்றிரவு பஸ்ஸில் சொந்த ஊருக்கு பயணத்தை துவக்கினர். AICCTU நாமக்கல் மாவட்ட செயலாளர் சுப்ரமணி மற்றும் தோழர்.சேகர் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.தொழில் வளர்ச்சியில் முன்னேறிய கொங்குமண்டலம் என்றழைக்கப்படும்
மேற்கு மாவட்டங்கள் இதுநாள் வரையில் தமிழ்நாட்டு தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டி வந்தார்கள். இதற்கு எதிராக எமது AICCTU தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடி வந்திருக்கிறது ; முதலாளிகளின் கொலைவெறித் தாக்குதல்களை எதிர்கொண்டு, தொடர்ந்து உறுதியாகப் போராடி வருகிறது.
தமிழ்நாடு தொழிலாளர்களை 'சோம்பேறிகள், பொறுப்பற்றவர்கள்' என அவதூறு செய்துகொண்டு, கொங்கு முதலாளிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரத்தத்தை உறிஞ்சும் சுரண்டல்களை நடத்தி வருகின்றனர்.
தமிழ் மொழி தெரியாததாலும், கேள்வி கேட்பதற்கு சங்கம் இல்லாததாலும், அரசு நிர்வாகம் கடமை உணர்வு இல்லாமல் செயல்படுவதாலும் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற வகையில் கொத்தடிமைகளாக படுமோசமாகச் சுரண்டப்படுகிறார்கள். கோழிப் பண்ணைகளில் மட்டுமல்ல, விசைத்தறி, சாயப் பட்டறைகள், நூற்பாலைகள், கார்மண்ட்ஸ்- பனியன் கம்பெனிகள் என எங்கெங்கு காணினும் உழைப்புச் சுரண்டல் அரங்கேறி வருகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் கணிசமானவர்கள் பழங்குடியினர், தலித்துகள், இளம் சிறார்கள், பெண்கள் ஆவர். கோவை KPR ஸ் பின்னிங் மில் ஜார்கண்ட் பழங்குடிப் பெண் தொழிலாளர்கள் பிரச்சினை ஆக இருந்தாலும், ஈரோடு SKM ஆயில் மில் கலவரத்தில் கைதான பீகார் தொழிலாளர்கள் பிரச்சினை ஆக இருந்தாலும் சரி, எப்போதுமே AICCTU Tamilnadu மற்றும் Cpi-Ml Tamilnadu புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறது; உறுதியாக தொடர்ந்துப் போராடும்.
¶கொத்தடிமை சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம்!
¶தொழிலாளர் உரிமைகள் காத்திடுவோம்!