முற்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் நோக்கத்தோடு மோடி அரசாங்கம் கொண்டு வந்த 10% ஒதுக்கீட்டை சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வில் பொதிந்துள்ள குறிக்கோளையும் நோக்கத்தையும் தெள்ளத் தெளிவாக மீறியுள்ளது. இந்த தீர்ப்பானது உரிமை பறிக்கப்பட்ட பிரிவினருக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியை மேலும் இறுக்கிட மட்டுமே செய்துள்ளது. இதைதான் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவி னருக்கான தீர்ப்பில், தலைமை நீதிபதி யு.யு. லலித்து டன் இணைந்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி எஸ்.ரவீந்திர பட் தன்னுடைய மாறுபட்ட தீர்ப்பில் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.- "எழுபது ஆண்டு கால குடியரசில் முதல்முறையாக வெளிப்படையாகவே ஒரு விலக்கப்பட்ட, பாரபட்டசமான கொள்கையை இந்த நீதிமன்றம் அனுமதித் துள்ளது. நமது அரசமைப்புச் சட்டம் விலக்கி வைக்கும் மொழியைப் பேசவில்லை. என்னுடைய கருத்துப்படி, விலக்கும் மொழி பேசும் இந்தத் திருத்தமானது சமூக நீதிக் கோட்பாட்டை சிறுமைப்படுத்தி அதன் மூலம் அடிக்கட்டுமானத்தையும் தகர்த்துவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டு உருவாக் கப்பட்டபோது, இன்று நாம் அறிந்துள்ளதுபோல், ஒரு சமத்துவ இந்தியாவைக் கட்டுவதற்காகவே இடஒதுக்கீடுக் கொள்கை உருவாக்கப்பட்டது. "சம அந்தஸ்து மற்றும் சமவாய்ப்பை'' உறுதி செய்யும் இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரையிலும் இது பிரதிபலிக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதி அடிப்படையிலான பாகுபாடு பிற்படுத்தப் பட்ட, தலித் மற்றும் ஆதிவாசி போன்ற உரிமை மறுக்கப்பட்ட பிரிவினரை, எல்லா உரிமைகளும் வாய்ப்புக்களும் பறிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்குள் தள்ளிவிட்டிருந்தது. உண்மையில், வரலாற்று அநீதி மற்றும் பாகுபாட்டால் வெளியேற்றப் பட்டவர்களுக்கு உரிய பிரதிதிநித்துவம் மற்றும் சம வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற உணர்வுடன் இடஒதுக்கீடு என்ற வார்த்தை, பிரதிநிதித்துவம் என்பதாக மொழிபெயர்க்கப்படுகிறது. இது மாறுப்பட்ட தீர்ப்பிலும் வலியுறுத்திச் சொல்லப்பட்டுள்ளது. அது பின்வருமாறு: "அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட குடிமக்களில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் மிகவும் குறிப்பாக பட்டியல் சாதி மற்றும் பட்டியலின பழங்குடி சமூகத்தி னரை முழுவதுமாக, ஒட்டுமொத்தமாக விலக்கி வைத்துள்ளதானது சமத்துவக் குறியீட்டையும் குறிப்பாக, பாரபட்சமின்மைக் கொள்கையையும் நாசப்படுத்தி, பாகுபாடானது மிகவும் தரம் தாழ்ந்த நிலைக்கு சென்றுள்ளது என்பதைத் தவிர வேறில்லை.'

உச்ச நீதிமன்றத்தின் ஒரு பக்கச் சாய்வு தீர்ப்பானது, உரிமை மறுக்கப்பட்ட சமூகங்களின் அன்றாட வாழ்வில் உள்ள, இந்திய சாதிய அமைப்பு முறை மற்றும் அதன் வெளிப்பாட்டி னுடைய, நடைமுறை யதார்த்தத்தை மிகத் தெளிவாக ஓதுக்கித் தள்ளிவிட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள உறுதியான நடவடிக்கை அல்லது 'பின்தங்கிய' சமூகங்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் அரச மைப்புச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 1948ல் நடத்தப்பட்ட மிக நீண்ட விவாதம் ஆகியவற்றின் நோக்கமானது வறுமை ஒழிப்புக் கான ஒரு வழி முறை அல்ல மாறாக, சமூக நீதியை அடைவதற்கானது. அந்த வகையில், உச்சநீதிமன்றத்தின் இத் தீர்ப்பு இந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வை நேரடியாக மீறியுள்ளது.

2019 ஜனவரியில், பொதுத் தேர்தலுக்கு முன்பாக மோடி அரசு, பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான நகர்வை மேற்கொண்டது. அதற்காக, நாடாளுமன்றத்தில் இந்திய அரசமைப்புச் சட்டம் 2019ல் (நூற்று மூன்றாவது திருத்தம்) சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. இதன் மூலம் அரசு உயர் கல்வியிலும் பொது வேலைவாய்ப்பு விசயங்களிலும் பொருளாதார ரீதியான அடிப்படையில் இட டெஒதுக்கீட்டை மேற்கொள்ள முடியும். முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசமைப்புச் சட்ட சரத்துக்கள் 15 மற்றும் 16 களில் 15(6) மற்றும் 16(6) ஆகியவை இடைச் செருகப்பட்டன.

இதை பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்பட்டோருக் கான இடஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்யும் நோக்கத்தோடு ஆர்எஸ்எஸ் நீண்ட காலமாகக் கோரி வந்து கொண்டிருக்கிறது. உண்மையில், நீதிபதி தினேஷ் மகேஷ்வரியுடன் சேர்ந்து பெரும்பான்மை கருத்தை உருவாக்கிய நீதிபதி பேலா திரிவேதி மற்றும் நீதிபதி பர்திவாலா இருவரும் ஒத்த கருத்துடன் இடஒதுக்கீடுகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும், இடஒதுக்கீடுகள் தொடர்வதற்கான கால அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள். இப்பவும் இடஒதுக்கீட்டு முறையில் அதிகரித்த அளவில் தாமதங்களும் ஓட்டைகளும் முறையாக அமல்படுத்தாமையுமே இருந்து கொண்டிருக் கின்றன. இப்போது கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அதிகரிக்கும் தனியார்மயமானது இடஒதுக்கீட்டை இல்லாமல் போகச் செய்து கொண்டிருக்கிறது.

அரசமைப்புச் சட்டம், சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையையே இடஒதுக் கீட்டிற்கான அளவுகோலாக அங்கீகரிக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இடஒதுக்கீடானது பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையைப் பற்றி பேசுவதற்கான ஒரு கருவி அல்ல என்கிறது அரசமைப்புச் சட்டம். திட்டமிட்ட ரீதியில் சமூகம் மற்றும் கல்வியில் பாரபட்சம் மற்றும் ஒதுக்கப்பட்ட நிலையைப் பற்றி பேசுகிறது. கல்வியில், வேலைவாய்ப்பில் உயர் சாதியில் உள்ள ஏழைகளும்கூட பாகு பாட்டை, ஒரங்கட்டப்படுதலை, குறைந்த பிரதிநிதித்துவத்தைச் சந்திக்கிறார்கள் என்று கூறுவது பொருத்தமற்றது. வேலையின்மையும் வறுமையும் தனிப்பிரச்சனையாகும். அதை வேலைகள் உருவாக்குவதன் மூலமும் சரியான கூலியின் மூலமும்தான் சரி செய்ய முடியும். அதில் மோடி அரசாங்கம் தோற்றுப் போய் விட்ட சமிக்ஞையைத்தான் காணமுடிகிறது.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு என்று சொல்வது தவறான பெயராகும். இது உரிமை பறிக்கப்பட்ட பிரிவினருக்கான உறுதியான நடவடிக்கை கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் நோக்கத்தோடு முன்னேறிய சாதியினருக்காகவே வழங்கப்படும் இடஒதுக்கீடாகும். உண்மையில், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் இருந்து வெளிப்படையாகவே வெளியேற்றப்படுகிறார்கள். அதன் தகுதிக்கான அளவுகோலும் கூட போலியானது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான இடஒதுக்கீடு அமலாக்க விதிகள் படி ஆண்டிற்கு 8 லட்ச ரூபாய் வருமானம் அதாவது மாதம் ரூபாய் 67,000 வருமானம் உள்ளவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். சாதி ரீதியாக வரலாற்றில் அநீதி இழைக்கப்பட்ட ஒடுக்கப் பட்ட சமூகத்தினரின் அளவற்ற வறுமையை இது கேலிக்குள்ளாக்குகிறது. வறுமையை வரைய றுக்கும் அளவுகோல் அர்த்தமற்றதாக உள்ளது. உயர் சாதியினரில் உள்ள ஏழைகள் மற்றும் வேலைவாய்ப்பில்லாதவர்களை இலக்காகக் கொள்வதலிலும் இது தோற்றுப் போய்விட்டது.

எஸ்சி-எஸ்டி-ஓபிசி அல்லாத பொருளாதார ரீதியாக மறுக்கப்பட்டவர்களுக்கு வேலைகளில், கல்விக்கான இடங்களில் ஓதுக்கீடு என்ற கருத்தை முதலில் முன்வைத்தவர் மோடி அல்ல. இதுபோன்ற அளவீட்டை 1991ல் நரசிம்மராவ் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. "நடைமுறை யில் இருந்து கொண்டிருக்கிற எந்தவொரு இடஒதுக்கீடு திட்டங்களின் கீழும் வராத, பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிரிM னருக்கு'' அரசாங்கப் பணிகளில் 10% ஒதுக்கீடு என்றது. அந்த அளவீட்டை, உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு தடுத்து நிறுத்தியது. வறுமையை வைத்து மட்டுமே பின்தங்கிய நிலையை அளவிட முடியாது என்றும் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலை மட்டுமே அரசமைப்புச் சட்ட அடிப்படையில் இடஒதுக்கீட்டிற்கான அளவீ டாகும் என்று கூறியது.

சமூக நீதியும் இடஒதுக்கீடும் ஒன்றுக் கொன்று பின்னிப் பிணைந்ததாகும். இரண்டை யும் தனித்தனி விசயங்களாகப் பிரித்துப் பார்க்க முடியாது. உரிமை பறிக்கப்பட்ட சமூகத்தினரின் சமூக நீதி மற்றும் சமூக இயக்கம் பற்றிய டாக்டர் அம்பேத்கரின் பார்வைக்கான கருவாக பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின ருக்கான பிரதிநிதித்துவம் மற்றும் உறுதியான நடவடிக்கை என்ற கருத்து இருந்தது. மோடி அரசாங்கமும் ஆர்எஸ்எஸ்ஸூம் ஒரு புறம் அம்பேத்கரை ஆராதித்துக் கொண்டே மறுபுறம், அம்பேத்கரின் அடிப்படை சிந்தனையான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு தேவை என்பதை மறுக்கின்றனர்.

ஒரு சாதிய அமைப்பு முறையை அறிமுகப் படுத்தவும் வரலாற்று ரீதியாக சமூகத்தில் உரிமை பறிக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான பாரபட்டசத்தை இன்னும் இறுக்கிக் கட்டவுமே, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கானஇடஒதுக்கீடு என்பது இடஒதுக்கீடு அச்சுக்குள் ஒரு இணையான கட்டமைப்பை உருவாக்குகிறது. 

புதிய வேலைகளை உருவாக்குவதிலும் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதிலும் தோல்வி அடைந்துவிட்ட மோடி அரசு, ஒரு திசை திருப்பும் செயல் தந்திரமாக இந்த பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொண்டி ருக்கிறது. மோடியும் ஆர்எஸ்எஸ்ஸூம் மக்கள் நம்பவேண்டும் என்று நினைப்பதுபோல், இடஒதுக்கீட்டிற்கான உறுதியான நடவடிக்கை வேலைகளைத் தின்று விடவில்லை. மாறாக, மக்களின் வாழ்க்கையைப் போல, கார்ப்பரேட்டு களின் லாப வெறிக்காகவும் அவர்கள் நாட்டின் வளங்களைச் சூறையாடவும் வேலைகளும் காவு கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது இந்த அரசாங்கத்தால். இன்று, இந்தியாவின் வேலை வாய்ப்பின்மை 7.77% ஆக அதிகரித்துள்ளது. நாள்தோறும் நிறைய மக்கள் வேலையிழந்து வறுமையில் தள்ளப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தின் உயிர்ப்பை மீறுகிறது என்பதாலும் சமூகநீதிக் கொள்கையை கேலிக்கூத்தாக்குகிறது என்பதாலும் நாம் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான 10% இடஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்திட வேண்டும். வறுமைக்கு எதிரான போராட்டம் அதிக வேலைவாய்ப்புகளையும் பொருளா தாரத்தை புத்துயிர் பெறச் செய்யவும் கோருகிறது. மோடி அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு, தனியார்மயக் களியாட்டத்தைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் மட்டுமே அதைச் சாத்திய மாக்க முடியும்.