சந்திராயன்-3 வெற்றிகரமாக நிலவில் இறங்கியிருப்பது நிச்சயமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் வரலாற்று சாதனையாகும். நிலவுப் பயணம் ஒன்று, நிலவின் தெற்கு முனையில் கால்பதித்திருப்பது முதல் முறையாகும். நிலவின் உண்மை நிலை குறித்து மேலதிக படிப்புக்கும் கண்டு பிடிப்புகளுக்குமான வாய்ப்புகளைத் இது திறந்து விடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அறிவியல் வல்லமையில் இது போன்றதொரு மைல்கல் பொதுவாக அறிவியல் தொழில் நுட்பத்திலும் குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சியிலும் இந்தியாவின் ஒட்டுமொத்த முன்னோக்கிய பயணத்தை உந்திச் செலுத்தும் ஆற்றல் கொண்டதாகும். மேலும் தற்போதைய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையின்படி பார்த்தால் துவாரகா விரைவுச் சாலை கட்டுமானத்தில் மூன்று கிலோ மீட்டர்களுக்கு ஆகியுள்ள செலவை விட குறைவான செலவில் சந்திராயன் வெற்றி செயல்படுத்தப் பட்டிருப்பது நெஞ்சைக் குளிர்விக்கும் செய்தியாகும். சந்திராயன்-3 திட்டத்தின் உறுப்பினர்களும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் ஒட்டு மொத்த ஊழியர்களும் இந்த வெற்றிக்கு பங்களித்ததொடர்புடைய மற்ற அமைப்புகளின் ஊழியர்களும் நிச்சயமாக நமது இதயம் நிறைந்த பாராட்டுக்களுக்கு உரியவர்களாவர்.

சந்திராயன்-3 வெற்றிக்கு சொந்தம் கொண்டாடுவதில் மோடி அரசாங்கம் மிகத் தீவிரமாக உள்ளது. ஆனால், நெருங்கிச் சென்று பார்த்தால் இந்த திட்டம், உண்மையில் அரசாங்கத்தினுடைய புறக் கணிப்பைத் தாண்டியும் வெற்றி பெற்றுள்ளதைச் சொல்கிறது. ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். சந்திராயன்-3க்கான நகரும் ஏவு தளத்தை தயாரித்து குறித்த காலத்துக்கு முன்பே வழங்கிய ராஞ்சியை சேர்ந்த கனரக பொறியியல் கழகத்தைச் சேர்ந்த ஊழியர்களும் பொறியியலாளர்களும் கடந்த 18 மாதங்களாக ஊதியம் பெறவில்லை! இந்தியாவின் ஸ்டீல் ஆலைகளுக்கு இந்த கனரக பொறியியல் கழகமே தாய் நிறுவனமாகும். இன்று இந்த நிறுவனத்துக்கு செயல் மூலதனத்தை வழங்காமலும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமலும் மோடி அரசாங்கம் இந்த நிறுவனத்தை நலிவுற்ற நிறுவனமாக்கி விட்டது. ஆயினும் இந்த திட்டம் வெற்றியடைந்த போது, லட்சோப லட்ச இந்தியர்கள், இந்தியா நிலவில் கால்பதித்த இந்த வரலாற்று தருணத்தை தங்கள் அலைபேசிகளில் கண்கொட்டாமலும் கம்யூட்டரிலும் (கணிப் பொறியிலும்) தொலைக் காட்சி திரைகளிலும் கண்டுகளித்துக் கொண்டிருக்கும் போது, மோடியோ தொலைக்காட்சித் திரைகளை குத்தகைக்கு எடுத்து லோலோவென உரையாற்றிக் கொண்டிருந்தார்.

நிலவுப்பயணத்தை ஒரு அரசியல் பரப்புரை யாகவும் தேர்தல் ஆதாயமாக கறக்கும் மூர்க்கத் தனமான முயற்சியாக, மோடி அரசாங்கம் இதை பிரதமருக்கான ஒரு விளம்பர மேடையாக ஆக்கிக் கொண்டது. மட்டுமின்றி, மத மூடநம்பிக் கையும் நவீன அறிவியலும் கொண்ட வேடிக்கை யானதொரு கலவையை உருவாக்கியிருக்கிறது. அறிவியல் உளப்பாங்கு முன்னேற்றுவதற்கான ஒரு உந்துதலாக நிலவுப் பயணத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு பதிலாக, மத மூடநம்பிக்கையுடன் இணைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்ரம் தரையிறங்கி (இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியின் அடித்தள உணர்வாக விளங்கிய விக்ரம் சாராபாயின் பெயர் சூட்டப்பட்ட) கால்பதித்த முனைக்கு அவசர அவசரமாக சிவசக்தி என்று பெயரிட்டதன் மூலம் திட்டவட்டமாக ஒரு இந்துமதக் குரலை மோடி வெளிப்படுத்திருக்கிறார். மோடியோ கடவுள் சிவன் பெயரை சூட்டியதோடு நிறுத்திக் கொள்ள, அதிலிருந்து (தக்க) குறிப்பை எடுத்துக் கொண்ட இந்து மகாசபா தலைவரொருவரோ சிவசக்தி முனையை தலைநகராகக் கொண்டு நிலவை இந்து ராஜ்யமாக அறிவிக்குமாறு கோரிக்கையும் விடுத்திருக்கிறார்! இது அதீத தீவிரமாக ஒலிப்பதாகத் தோன்றினால், நிலவுப் பயணத்தோடு தொடர்புடைய பெண் விஞ்ஞானிகளை கொண்டாடும் முயற்சியின் மூலம் அவர்களின் மத நம்பிக்கையை தூக்கிக் காட்டுவதோடு, மதத்தில் வேர் கொண்டிராத அறிவியலை மதத்தோடு இணைக்கப்பட்ட தான 'லட்சியமான இந்தியப் பெண்ணாக' சித்தரித்துக் காட்டுகிறது.

இந்திய விண்வெளிக் கழகம் செய்த சாதனை பல பத்தாண்டு கால ஆராய்ச்சி, இடைவிடாத உழைப்பின் விளைவாகும். எல்லா திட்டங்களும் வெற்றியடைந்து விடுவதில்லை. ஆனால் அறிவியலாளர்கள் தோல்வியிலிருந்து படிப்பினை பெறுகிறார்கள். தோல்வியுற்ற சந்திராயன்-2, சந்திராயன்-3 வெற்றிக்கு வழிவகுத்தது. இந்திய விண் வெளிக் கழகத்தின் அறிவியல் சமுதாயத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள், சுதந்திரத்துக் குப்பின் முதல் சில பத்தாண்டு களில் நவீன இந்தியா உருவாக்கிய பொது நிதியில் கட்டப்பட்ட கல்வி, ஆராய்ச்சி நிறுவனங் களால் உருவாக்கப்பட்டவர்களே. பொதுத் துறை நிறுவனங்கள் போலவே, கல்வியும் ஆராய்ச்சியும் தனியார் மயத்தை நோக்கித் தள்ளப்படுவதன் மூலம் பொது நிதியில் உருவாக்கப்படும் கல்வியும் ஆராய்ச்சியும் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது, வலு விழக்கச் செய்யப்படுகிறது. உயர்கல்விக் கூடங்களில் மூடநம்பிக்கை கலாச்சாரம், ஜால்ரா போடுதல், அச்சம், அமைதி இவற்றை முன்னேற்ற, கேள்வி உணர்வும் கல்விச் சுதந்திரமும் வளாக ஜனநாயகமும் நெரிக்கப் பட்டு வருகிறது. மதவெறுப்பு, வெறுப்பு இவற்றின் பலிபீடத்தில் அறிவியல் மனப் பான்மை பலியிடப்படுவதில் வியப்பேது மில்லை. இதன் அச்சமூட்டும் விளைவுகள் நம்மை நேருக்கு நேர் (முகத்தில்) அச்சுறுத்து வதாகவே உள்ளன.

இதற்கிடையில், (உபி) முசாபர்நகர் பள்ளியொன்றில் கணக்கு வீட்டுப்பாடம் எழுதாத ஏழு வயதே ஆன இஸ்லாமிய மாணவனை ஆரம்பப் பள்ளி முதல்வர் ஒருவர் சக மாணவர்களைக் கொண்டு அடிக்கச் சொல்வதும் முதல்வர் பொதுவில் இஸ்லாமியர்களை வசைபாடுவதுமான வகுப்பறை ஒளிப்படக் காட்சி, இட்லரது நாஜி ஜெர்மனி யின் வகுப்பறைகளில் எவ்வாறு யூதக்குழந்தைகள் அவமானப்படுத்தப்பட்டு துன்புறுத்தப் பட்டனரோ அதை நினைவுபடுத்துவதாகவே உள்ளன. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ரயில்களிலிருந்து தெருக்கள், தொலைக் காட்சி நிலையங்கள் வரை டிஜிட்டல் மேடை களிலிருந்து வகுப்பறைகள், வளாகங்கள் வரையிலும் மொத்த இந்தியாவையுமே வெறுப்பு கையகப்படுத்திக் கொள்ளுமென அச்சுறுத்துகிறது. 'லவ் ஜிகாத்' (காதல் விடுதலை)தை எதிர்த்துப் போராடுவது என்ற பேரால் சங்கிகளால் 2013ல் ஊதிப் பெரிதாக்கப்பட்ட மய்யப் பகுதிதான் முசாபர்பூர் நகரம். விவசாயிகள் இயக்கம், அந்த வெறுப்பையும் பிளவுகளையும் வென்று புதுப்பிக்கப்பட்ட ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் ஏற்படுத்துவதில் வெற்றி கண்டது. இன்று, மீண்டும் வெறுப்பு, வன்முறை சக்திகள், மேற்கு உபியிலும் அரியானாவிலும் அந்த ஒற்றுமைக்கு சவால் விடுகின்றன; இந்த சதிச்செயலை முறியடிக்க விவசாயிகள் இயக்கமும் அமைதி, நீதியை நேசிக்கும் சக்திகள், தீர்மானகரமான எதிர்ப்பு போராட்டத்தைத் கட்டமைக்க வேண்டும்.

வெறுப்பு, சித்தரவதை அரங்கமாக மாறிவிட்ட அந்தப் பள்ளியின் குற்றம்புரிந்த முதல்வர் திருப்தி தியாகியை வெளிப்ப டையாகவே பாஜக தலைவர்கள் ஆதரிக்கின்றனர். அந்தப் பள்ளி தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்க்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆதிக்க சமூக, அரசியல் சக்திகளும், கெடுவாய்ப்பாக சில போலியான விவசாய இயக்கத் தலைவர்களும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட அந்த மாணவனது குடும்பத்தினர் வழக்குப் போடுவதை தவிர்க்க வேண்டுமென்றும் சமரச உடன்பாட்டுக்கு வர வேண்டுமென்றும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதுபோன்ற விஷயங்களில், நல்லிணக்கம் நிச்சயமாக உண்மை, நீதி அடிப்படையில் எட்டப்பட வேண்டும். நிச்சயமாக, உண்மையையும் நீதியையும் விலையாகக் கொடுத்து அடையப்படமுடியாது. வெறுப்பை விளைவிப்பவர்களும் வன்முறையை நடத்துபவர்களும் பாதுகாக்கப் படுகின்றனர்; ஆனால் இந்தக் கோர சம்பவத்தின் மீது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததற்காக உண்மைக் கண்டறியும் முகமது சுபைர் மீண்டுமொருமுறை குறிவைக்கப்படுகிறார்.

இந்த வன்முறை சித்திரவதைக்கு ஆளாக்கப் பட்ட குழந்தையுடன் இந்தச் செயலை செய்யுமாறு ஊக்குவிக்கப்பட்டவர்களும் அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்களும் இந்த பாசிச கொடூரத்தால் பாதிக்கப்பட்டவர்களே என்பதை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். பாசிச பரப்புரையாளர்களால் நாள்தோறும் நடத்தப்படும் இந்த வெறுப்பு இயக்கம், அது அரசியல் அல்லது மத பதாகைகளாலும் தொலைக்காட்சி நெறியாளர்களால் அல்லது கருத்து உருவாக்குபவர்களால் அல்லது பல்வேறு சமூக ஊடகங்களால் செல்வாக்கு செலுத்துபவர்க ளாலும் இப்போது, எதுவும் எளிதில் பதிகிற இந்தியக் குழந்தைகளின் ஆரம்பப்பள்ளி வகுப்பறைகளில் நுழைந்துவிட்டார்கள்.

ஆபத்தான இந்த அறிகுறியை அலட்சியப்படுத்துவது, இன்னும் பெரிய ஆபத்துகளுக்கே வரவேற்பளிக்கும்.