உள்நாட்டில் புலம்பெயர்ந்தோருக்கான தொலை தூர வாக்களிப்பை அறிமுகப்படுத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவுக்கு, பிப்ரவரி 27, 2023 தேதியிட்ட கடிதத்தின் மூலம் இகக (மாலெ) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்த முன்மொழிவு நடைமுறை சாத்தியமற்றது, முற்றிலும் தெளிவற்றது என்று கூறியுள்ள இகக(மாலெ), வாக்களிக்கும் குறிக்கோள் மற்றும் நோக்கத்திற்காக உள்நாட்டில் புலம்பெயர்ந்தோர் பற்றிய எந்தவொரு உறுதியான வரையறையையும் வழங்காமல், இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு முன்மாதிரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை உருவாக்குவதை நோக்கி அவசரமாக செயல்படு வது குறித்து தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம் சுற்றுக்கு விட்டுள்ள குறிப்பில், உள்நாட்டில் புலம் பெயர்ந்தோர் என்பவர் அவரது முந்தைய வசிப் பிடத்திலிருந்து வெளியேறி வேறிடத்தில் இப்போது குடியேறியுள்ளவர் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் திருமணம், குடும்பம், வேலை, கல்வி போன்ற காரணங்களுக்காக இடம் பெயர்ந்த பரந்த வகை மக்களை உள்ளடக்கியும் உள்ளது. அதே நேரத்தில், புலம்பெயர்ந்த தொழி லாளர்களை வகைப்படுத்தி முறையான தரவு எதுவும் இல்லை என்பதை இந்தியத் தேர்தல் ஆணையமே ஒப்புக்கொள்கிறது. அதுபற்றிய நம்பத் தகுந்த சரியான பதிவேடோ அல்லது தரவுவோ எதுவும் இல்லை.
இந்தியத் தேர்தல் ஆணையக் கடிதத்தின்படி, 2019 பொதுத் தேர்தலில் 67.4% என்ற குறைந்த வாக்குப்பதிவே இந்த முன்மொழிவுக்கான உந்துதலாகும். ஒரு வாக்காளர் தன்னுடைய வாக்குரிமையைப் பயன்படுத்தாமல் இருப்ப தற்குப் பலதரப்பட்ட காரணங்கள் உள்ளன. நகர்ப்புரத்தினரின் அக்கறையின்மை, இளைஞர் களின் அக்கறையின்மை போன்ற பல காரணங் களோடு, உட்புற புலம்பெயர்வால் (உள்நாட்டில் புலம் பெயர்ந்தவர்கள்) வாக்களிக்க இயலாமை யும் குறைந்த வாக்குப்பதிவுக்கு பங்களிக்கும் ஒரு முக்கிய காரணமாகும்" என பாரா 4இல் கூறப் பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் எந்தவொரு ஆழமான ஆய்வுகளோ, பகுப்பாய்வோ இன்றி, இத்தகைய மேலோட்டமான அறிக்கைகள் வெளியிடப்படுவது நம்மைத் திகைப்பில் ஆழ்த்துகிறது. உள்நாட்டு தொழிலா ளர்கள் சம்பந்தமாக எந்த ஒரு தீர்க்கமான ஆலோசனை மேற்கொள்ளாமலும், கணக்கிட்டு வகைப்படுத்தா மலும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியின் ஒட்டு மொத்த செயல்முறையும் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்.
"உள்நாட்டு புலம்பெயர்ந்தோர்" என்ற வரையறையில் தெளிவு இல்லாததோடு கூடுதலாக, "தொலைதூரம்" என்பதை நிர்ணயிப் பதிலும் தெளிவில்லை. முன்வைப்பின் சட்ட பூர்வ தன்மைக்கு, இந்த இரண்டு வரையறைப் பிரச்சனைகளும் சட்டரீதியாக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். கூடுதலாக, தொலைதூர வாக்களிக்கும் இடங்களில் "மாதிரி நடத்தை விதிகள்" செயல்படுத்தப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லாததும் அதை அமல் படுத்தும்போது நியாயமற்ற தேர்தல் நடைமுறைகள் ஊக்குவிக்கப்படவும் இந்த முன்மொழிவு வழிவகுக்கும்.
இந்த முன்மொழிவில் உள்ள வெளிப் படையான வரையறை ஓட்டைகளையும் நியாயமற்ற தேர்தல் நடைமுறைகளின் மோசமான சாத்தியப்பாடுகளையும் கணக்கில் கொண்டால், இதனை அவசரமாகக் கொண்டுவருவது தேவை யற்றதும் செயற்கையானதுமாகும். இவற்றில் எதற்கும் தீர்வு காணாமல், இந்தியத் தேர்தல் ஆணையம் நேராக ஒரு தொழில்நுட்பத் தீர்வை நோக்கிச் சென்றுள்ளது. இது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. மேலும், இது புலம் பெயர்ந்தோருக்கு அதிக அளவிலான இணைய கல்வியறிவையும் தொழில்நுட்ப அறிவாற்றலையும் முன்வைக்கும் தொழில்நுட்பமாகும். பெரும்பாலான புலம் பெயர் தொழிலாளர்கள் குறைந்த அளவே, இணையக் கல்வி உட்பட, கல்வியறிவையே பெற்றுள்ளனர். இதை திட்டமிடப்படாத பொது முடக்கத்தின் போது புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப, ரயில்களுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்ய அவர்கள் பட்ட கஷ்டத்திலிருந்து ஒருவர் தெரிந்து கொள்ள முடியும். முதன்மையாக இது ஒரு சமூக, சட்டபூர்வ பிரச்சினையாகும். அதற்கு தொழில் நுட்ப ரீதியான தீர்வுகளைக் கண்டறிய முயற்சிக் கக் கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையத்தை இகக(மாலெ) வலியுறுத்துகிறது.
இந்த திடீர் முன்மொழிவு, மாற்றிய மைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங் களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியதாகும். அதேவேளை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங் களின் நம்பகத்தன்மை குறித்த பெரும் கவலை களும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு அவை பொருத்தப்பாடுடையதுதானா என்பதும் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. சமீபத்திய குஜராத் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின்போது கடைசி நேரத்தில் சந்தேகத்திற்கிடமான வாக்குப் பதிவு நடைமுறைகள் காணப்பட்ட நிலையில், இக் கேள்வி மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது. இந்த தீர்க்கப்படாத பிரச்சனைகள் தொலைதூர வாக்குப்பதிவு முறையிலும் இருக்கும் என்பது வெளிப்படையானது. இது மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களை அதிகப்படுத்தவே செய்யும்.
பிராந்தியக் கட்சிகளின் தேர்தல் வாய்ப்பு களை மழுங்கடிக்க ஒரே சமயத்தில் தேர்தல்கள் என்று சொல்வதைப் போலவே இதுவும் மற்றொரு நாடகம்தான் என்பது வெளிப்படை.குறிப்பாக, இது புலம்பெயர்ந்த வாக்காளர்க ளிடையே பரப்புரை செய்வதற்கான பிராந்தியக் கட்சிகளின் திறனைப் பாதிக்கிறது. அதேபோல, நாடு முழுவதும் உள்ள தொலைதூர வாக்குச் சாவடிகளில் தேவையான வாக்குச் சாவடி முகவர்கள், வாக்கு எண்ணும் இடங்களில் முகவர்களை ஏற்பாடு செய்வதில் பிராந்தியக் கட்சிகள் சிரமங்களை எதிர்கொள்வார்கள்.
மக்களிடையே வாக்காளர்களிடையே பரப்புரை செய்வதற்கும் தொடர்புகொள்வதற்கும் அரசியல் கட்சிகளின் உரிமைகளை இந்த முன்மொழிவு கடுமையாக மீறுகிறது என்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கத் தவறி விட்டது என்பது நினைத்துப் பார்க்க முடியாத தாகும். உண்மையில் இந்த முன்மொழிவு பிராந்தியக் கட்சிகளின் செல்வாக்கையும் பொருத்தப்பாட்டையும் கீழ்நிலைப்படுத்தும் திசையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றொரு நடவடிக்கையாகும். அனைவருக்கும் சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டியது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பாத்திரமாகும். ஆனால் இந்த முன்மொழிவின் படி, தொலைதூர வாக்களிப்புக்கான ஒட்டுமொத்த செயல்முறையும் அதற்கு எதிரானதாகவே உள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன் மொழிவானது அடிப்படை ஜனநாயகக் கோட்பா டுகளின்படி கடைப்பிடிக்கப்பட வேண்டிய எந்தவொரு வாக்களிப்பு செயல்முறைக்கும் முரணானதாகும். அவசரகதியில், வெளிப்படைத் தன்மையின்றி இந்தியத் தேர்தல் ஆணையம் இதனை செயல்படுத்தும் விதமானது ஒட்டு மொத்த முன்மொழிவையும் கேள்விக்குள் ளாக்குகிறது. வாக்காளர் பங்கேற்பை அதிகரிப்பது தான் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஒரே குறிக்கோள் என்றால், குறைவான வாக்குப்பதிவுக் கான முக்கிய காரணங்களான நகர்ப்புரத்தினரின் அக்கறையின்மை, இளைஞர்களின் அக்கறை யின்மை போன்றவற்றை தீர்ப்பதற்கான வேறு வழிகள் குறித்து ஆராய வேண்டும். விரக்தி மனப்பான்மையும் குறைவான வாக்குப்பதிவுக் குக் காரணம் என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் இந்த முன்மொழிவானது நியாயமற்ற தேர்தல் நடை முறைகளையும் ஊழலையும் ஊக்குவித்து, சுதந்திரமான, நேர்மையான தேர்தல்கள் என்ற கருத்தையும் கீழ்நிலைப்படுத்தும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)