மனோஜ் மன்சில் சிறையிலிருந்துவிடுதலை!

எம் எல்ஏ பதவி பறித்த ஆணைக்கு

இடைக்கால தடைவிதிக்கப்பட வேண்டும்!

ஏகியோன் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிபிஐஎம்எல் தோழர் மனோஜ் மன்சிலுக்கு பாட்னா உயர்நீதி மன்றம் திங்களன்று பிணை வழங்கியது.

பட்காவ் வழக்கில் மாவட்ட நீதிமன்றம் மனோஜ் மன்சில் மற்றும் 22 பேருக்கு பிப்ரவரி 13 அன்று ஆயுள் தண்டனை வழங்கியதுஅதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மனோஜ் மன்சில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்இந்தத் தீர்ப்புக்கு எதிராக பட்னா உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

"பாசிச மோடி ஆட்சியை அரியணையிலிருந்து அகற்றிட நடக்கும் போருக்குஷாஹாபாத்மகத் தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா வேட்பாளர்களின் தீர்மானகரமான வெற்றியை உறுதி செய்கிற போராட்டத்திற்கு தோழர் மனோஜ் மன்சிலின் விடுதலை பெரும் உத்வேகத்தை அளிக்கும்போராடுவோம், வெற்றி பெறுவோம்!" என சிபிஐஎம்எல் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் கூறினார்.

பட்னா உயர்நீதி மன்றத் தீர்ப்பை வரவேற்றுப் பேசிய சிபிஐஎம்எல் பீகார் மாநிலச் செயலாளர் தோழர் குணால் மிக விரைவிலேயே மற்ற 22 தோழர்களுக்கும் பிணை வழங்கப்படும்நீதி நிலை நாட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.தோழர் மனோஜ் மன்சிலுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கீழ் நீதிமன்றத்தின் ஆணையானபதவி பறித்த ஆணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென்ற வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தில் அதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஏகியோன் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்து கொண்டிருப்பதால், பதவி பறித்தலுக்கு எதிரான தடைமனு மீதுஇனிமேலும் எவ்வித தாமதமும் செய்யாமல்உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும், நீதி நிலை நாட்டப்படும் என தோழர் குணால் நம்பிக்கை தெரிவித்தார்.

                                     மத்தியக் கமிட்டி

                                               சிபிஐஎம்எல்