எஸ்விஆர் பேட்டி தொடர்ச்சி

மார்க்ஸிய கலைச்சொற்கள் நூல் பற்றி..

தோழர் எஸ்வி ஆருடன் ஒரு நேர்காணல்

தீப்பொறி 16-30 ஏப்ரல் 2024 இதழில் வெளியான பேட்டியின் தொடர்ச்சி

அந்நியமாதல்

மார்க்ஸின்பொருளாதாரதத்துவக் கையெழுத்துப் பிரதிகள் 1844’ என்ற கட்டுரைத் தொகுப்புதான் உலகெங்கும் மார்க்ஸின்அந்நியமாதல்கோட்பாட்டை அறிமுகப்படுத்தியதுஆனால் மார்க்ஸின் முதிர்ச்சியடைந்த படைப்புகளில் இன்னும் பல பரிமாணங்களையும் தூலமான விளக்கங்களையும் பெற்று அக்கருத்தாக்கம்  தொடர்ந்து நிலவி வந்துள்ளதுஅது மார்க்ஸின் இளமைக்கால பக்குவப்படுத்தப்படாத கருத்து என்று நிராகரிப்பவர்கள்அக்கருத்தாக்கம் அவரது கடைசிகால எழுத்துகள் வரை பல வடிவங்களில் முதிர்ச்சிஅடைந்துள்ளதைப் பார்க்கத் தவறுகிறார்கள்வளர்ச்சிஅடைந்த மேற்கத்தியஅமெரிக்கநாடுகளில் ஒவ்வொரு வேலையும் எவ்வளவு சலிப்புத் தட்டுவதாகஉள்ளதுமார்க்ஸ்கூட சொல்வார்நவீனசாதனங்களும்இயந்திரங்களும்வருவதற்கு முன்பாக வேலைகளில்உழைப்பாளிக்கு உழைப்பதில் ஒருசுவாரசியம் இருந்ததுஅது  நவீன தொழிற்சாலையாகமாறுகிறதுதற்போதுஉள்ள நவீன தொழிற்சாலைகளில்தொழிலாளர்கள் விரக்தியுடன் உள்ளனர். நிறைவான மனநிலை இல்லை. ஆகஅந்நியமாதல் ‘ என்பது  இன்றையமுக்கியமான கருத்தாக்கமாக உள்ளது. அதை விளக்க வேண்டியுள்ளதுமுக்கியமான மார்க்ஸியக் கருத்தாக்கங்களைப் பற்றி அவ்வப்போதுகுறிப்புகள் எடுத்து  வைத்திருந்தேன்பெரியார்சொல்வார்யாருமே செய்யாதவேலைஅதனால் அதைதோளில் போட்டு சுமக்கிறேன்என்றுஅதுபோலத்தான், ‘மார்க்ஸியக் கலைச் சொற்கள்’ நூலை எழுதினேன்.பலருடைய ஒத்துழைப்பையும் கேட்டேன். யாருமே அக்கறை காட்டாததால்நானே அத்தகைய முயற்சியைமேற்கொண்டேன்.

ஆசிய உற்பத்தி முறை பற்றி

ஆசிய உற்பத்திமுறை பற்றிய முறைப்படியானவிரிவானஅறிவார்ந்த விவாதங்களை இந்தியாவிலுள்ள ஒரு சில கல்விபுலம்சார் மார்க்ஸிய அறிஞர்கள் மட்டுமே மேற்கொண்டுள்ளனர். ’ஜெர்மன் கருத்துநிலை’ (German Idoelogy)  என்ற நூலில்தான் மார்க்ஸ் (மற்றும் எங்கெல்ஸ்வரலாற்றில் சமுதாயம் அடைந்துள்ள பல்வேறு கட்டங்களைப் பற்றி முதன் முதலாக எழுதுகின்றனர். ’அரசியல்பொருளாதார விமர்சனத்திற்கு ஒருபங்களிப்பு’  என்ற நூலில்தான் ஆசிய உற்பத்தி முறைபற்றி  மார்க்ஸ் முதன் முதலில் எழுதுகிறார்அந்த உற்பத்தி முறை,தென் அமெரிக்கஅய்ரோப்பிய சமுதாயங்கள் சிலவற்றிலும் இருந்தது என்று வேறு சில நூல்களில் கூறுகிறார்.ஆசிய உற்பத்தி முறையின் முக்கிய அம்சங்கள் என்று அவர் தொடக்கத்தில் எழுதியவை பின்வருமாறுமற்ற நாடுகளில்ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின்பிரதிநிதியாக அரசர்கள் இருந்தார்கள். ஆசிய உற்பத்தி முறையில்  அப்படிஇல்லைஅரசு தான்  நிலம்நீர், வணிகம் முதலிய அனைத்துக்கும் ஒரே ஒரு உடைமையாளர்நீர்ப்பாசனம், சாலைப் போக்குவரத்து செய்வதில்அரசுதான்பொறுப்பாக இருந்ததுஆசிய உற்பத்தி முறை என்ற கருத்தாக்கத்தை  வளமான விவாதத்திற்கு உட்படுத்தியிருந்தால் சாதியைப் பற்றிகூடுதல்  புரிதலை இந்தியக் கம்யூனிஸ்டுகள் பெற்றிருக்க முடியும் என்பது என் தாழ்மையான கருத்து. மூன்றாவது அகிலத்தில் லெனினுக்குப் பிறகு  தலைமை வகித்த ஸ்டாலின், ‘ஆசிய உற்பத்தி முறை’ பற்றிய விவாதத்தை தடை செய்தார். புராதன அடிமை முறை சமுதாயம்நிலப்பிரபுத்துவ சமுதாயம்முதலாளித்துவ சமுதாயம்சோசலிச சமுதாயம் என்ற கட்டங்களினூடாகவே சமுதாய வளர்ச்சி ஏற்படும் என்ற  நேர்கோட்டுப் பார்வையை வலுப்படுத்தினார்இது மார்க்ஸ் கொண்டிருந்த கருத்துக்கு நேர் எதிரானது. சங்ககால தமிழகத்தில் ஆசியபாணி உற்பத்தி முறைபற்றி சிலர் தற்போதுவிவாதிக்கத் துவங்கியுள்ளனர்

மேற்கு அய்ரோப்பிய சமுதாய வளர்ச்சி மாடலை அப்படியே பிற நாடுகளுக்குப் பிரயோகிக்க முடியாது என்பதை ரஷிய நரோத்னிக்குகளிடம் நடத்திய விவாதங்களின் போது மார்க்ஸ் தீர்மானகரமாக வலியுறுத்துகிறார்.மூலதன உருவாக்கத்தில்  கணிசமான பகுதி இங்கிலாந்தில் நிலங்களில்இருந்து வெளியேற்றப்பட்ட விவசாயிகளின்பங்கு ஆகும்அதுஇங்கிலாந்து மற்றும் சில மேற்கத்தியநாடுகளுக்கும் பொருந்தும்ஆனால், இதனை எல்லா நாடுகளுக்கும்பொதுச் சூத்திரமாக கொள்ளக்கூடாதுஎன மார்க்ஸ் எழுதினார். அதையே பொதுவான சூத்திரமாகஎடுத்து கொண்டு  நரோத்னிக்குகள் சிலர்  மார்க்சை விமர்சித்தனர். ரஷ்யாவில் முதலாளியம் வரவேண்டும்; பாட்டாளி வர்க்கம் அவதிக்குள்ளாகவேண்டும்அதன் பிறகுசோசலிசம் வரும் என மார்க்ஸ் கூறுவதாக அவர்கள் வாதிட்டனர்.  அதற்குகடுமையான பதிலை எழுதுகிறார்மார்க்ஸ், “என்னை வரலாற்றுக்குமேற்பட்டவனாய் நிறுத்துகிறார்கள்அப்படிச் செய்ததன் மூலம் எனக்கு இல்லாத பெருமையை வழங்குகிறார்கள்” என்று அவர்களைக் கிண்டல் செய்தார் மார்க்ஸ்ரோமாபுரியில்அடிமைச் சமுதாயம் ஒழிந்துபாட்டாளி வர்க்கம் பிறக்கிறது. புரோலட்டேரியன் (பாட்டாளி) என்ற சொல் வருகிறது. இழப்பதற்கு உழைப்பைத் தவிரவேறேதும் இல்லாத ஒருவர்க்கம் உதிக்கிறதுபாட்டாளிவர்க்கம் பிறந்தவுடன்  அங்கு ஏன் முதலாளியம்வளர்ச்சியடைவில்லைஏன் அது ஆரம்ப நிலையில் கூட இல்லை என்ற கேள்வியை எழுப்பினார் மார்க்ஸ்ஒவ்வொரு நாட்டிலும்ஒவ்வொருவிதமான வளர்ச்சி இருக்கும். மேற்கு நாடுகளுக்குப் பொருந்தக்கூடியஒன்றை பொதுச் சூத்திரமாகமாற்றக் கூடாது என்கிறார். எதிர்காலசோசலிசம்பற்றிமூலதனம்முதல் பாகத்தின் ஜெர்மன் பதிப்பின் முன்னுரையில் மார்க்ஸ் சொல்கிறார்: “எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடியசமையல்குறிப்பைநான் எழுதவில்லை”.ஸ்தூலமானநிலைமைகளைப்படித்துஸ்தூலமானஆய்வுகளைமேற்கொள்ளவேண்டும்என லெனின்சொல்கிறார். [1] [2]

புதிதாகவரும் விசயங்களை தெரிந்துகொள்ள வேண்டும்மார்க்சியத்திற்குசவால் விடுக்கும் புத்தகங்களுக்குமார்க்சியப் பார்வையிலிருந்து பதில்சொல்ல வேண்டும் என்றுஎன்னாலான அனைத்தையும் செய்திருக்கிறேன்.  ஆனால், எதையுமே ஒழுங்காகவும் நேர்மையாகவும் புறநிலைத் தன்மையுடனும் படிக்காத தமிழக மார்க்ஸிய இயக்கங்களிலுள்ள சிலர் எனக்குதிரிபுவாதி’, ’குழப்பவாதி’, ‘ஏகாதிபத்திய ஏஜண்ட்என்ற பட்டங்களைச் சுமத்தியுள்ளனர்அவர்களில் பலர் காணாமல் போய்விட்டனர். இன்னும் சிலர் தொடர்ந்து அய்ம்பதாண்டுகளுக்கு மேலாக குறுங்குழுவாதக் குட்டையில் குளிப்பதில் ஆனந்தம் பெற்று வருகிறார்கள்இவற்றையெல்லாம்  நான் பொருள்படுத்தியிருந்தால், வேறு எந்த  ஆதாயத்துக்காகவுமின்றி, அரசியல் கடமையாக பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியிருக்க முடியாது.

இன்று நிலைமை மாறிவிட்டது. முதன்மையான இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் என்னுடன் தோழமை பாராட்டி வருகின்றனர்தீர்க்க முடியாத கடும் நோயால் நான்காண்டுகளாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு இது பெரும் ஆறுதல்களப்பணியாளர்களுக்குப் படிப்பதற்கு நேரம் குறைவுஇருப்பினும் அதைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் மார்க்ஸிய அறிவை இடைவிடாது வளர்த்துக்  கொள்ள வேண்டும்ஏனெனில்மார்க்ஸியம்தான் நமக்கான ஒரே ஒளிவிளக்குஅது இல்லாவிட்டால் குருட்டுப் பூனை விட்டத்தில் தாவுவது போல அர்த்தமற்றநமது சக்தியை விரயமாக்குகிறவேலைகளில் மூழ்கிப்போவோம்

 பேட்டி முடிவுற்றது