சாதியாதிக்கஆணவப் படுகொலைகளைத்  தடுக்கசாதிமறுப்புகாதல் திருமணத்தம்பதிகளைப் பாதுகாக்க தனிச் சட்டம்  கட்டாயம் வேண்டும் !

ஜி.ரமேஷ்

திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த மதன் குமார் என்ற அருந்ததியர் சமூக இளைஞரும் பெருமாள்புரத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டவெள்ளாளர்  சமுதாயப் பெண் உதய தாட்சாயினியும்ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்அவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டில் எதிர்ப்பு இருந்த நிலையில்தீண்டாமை ஒழிப்பு முன்னணியை நாடிசுயமரியாதைத்  திருமணம் செய்து கொண்டனர்திருமணத்தைப் பதிவு செய்யப் போகிறார்கள் என்பதை அறிந்த பெண் வீட்டார் நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்தான்  அவர்கள் ஒளித்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று  சொல்லி 14.6.2024 அன்று பெண்ணின் பெற்றோர்உறவினர்களை அழைத்துக் கொண்டு சாதி வெறி ரவுடிக் கும்பல்கள், அடியாட்கள் சுமார் 30 பேர் வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டத் தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி புகுந்து அங்கிருந்த கண்ணாடிக் கதவுகள்நாற்காலிகள்மேசைகளையும் சமையலறைக்குள் இருந்த பிரிட்ஜ் உள்ளிட்ட பொருள்களையும் அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர்அங்கிருந்தவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர்  பழனி மீது அவரைப் பெண் என்றும் பார்க்காமல் மிக மோசமாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்அதைத் தடுக்க வந்த சிபிஐ(எம்எல்) கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜை கையைப் பிடித்து முறுக்கியுள்ளனர். திராவிடத்  தமிழர் கட்சித் தலைவர்களை பார்த்து …. உங்க பயல்களுக்கு எங்க பொண்ணுதான் கேட்குதோ என்று  இழிவாகப் பேசியுள்ளார்கள்அதோடு நிற்காமல் தாக்குதலால் நிலை குலைந்து அமர்ந்திருக்கும் தோழர்  பழனி காலில் விழுந்து கதறுவதுபோல் திட்டமிட்டு ஒரு போலி வீடியோவை எடுத்து அதைச் சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு அவரது நற்பெயருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தினார்கள்.   அந்தப் பெண் வீட்டாரின் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றிபல்வேறு இடை நிலை ஆதிக்க சாதியைச் சேர்ந்த ரவுடிகளும் கூலிப் படையினரும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்அசம்பாவிதம் ஏதும் நடக்கலாம் என்று காவல் ஆணையரிடம் முறையிட்டுஇரண்டு காவலர்கள் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு காவல் போடப்பட்டிருந்த நிலையில்தான் அந்தக் காவலர்களின் முன்னிலையில்தான்  ரவுடிக் கும்பல்கள் இத்தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள்.

நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஆதிக்க சாதி ரவுடிகள் மட்டுமின்றி இந்துத்துவா சக்திகளும் இருந்துள்ளார்கள்இத் தாக்குதலைத் தொடர்ந்து அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளும் வீடியோக்களும் அதை உறுதிப்படுத்துகின்றனதென் மாவட்டங்களில் குறிப்பாகநெல்லை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதுகடந்த ஓராண்டில் மட்டும் 248 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். தென் மாவட்ட காவல்துறை ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த திசையன்விளை முத்தையாநாடார் சமூகப் பெண்ணைக் காதலித்தார் என்பதற்காகக் கொல்லப்பட்டார்அதில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களையே குற்றவாளிகளாக்கியது காவல் துறை. நான்குநேரி சின்னதுரையும் அவரது சகோதரியும் அவரோடு படித்த இடைநிலைச் சாதியைச் சேர்ந்த சக மாணவர்களால் கொடூரமாக வெட்டப்பட்டார்கள்மணிமூர்த்தீஸ்வரத்தில் மனோஜ் மற்றும் மாரியப்பன் இருவர் மீதும் சிறுநீர் கழித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள் ஆதிக்க சாதி வெறியர்கள்புளியங்குடி தங்கசாமி பாளையங்கோட்டைச் சிறைக்குள் மர்மமான முறையில் மரணமடைந்தார்இந்தக் கொடூரங்களுக்கு எதிராக முதல் குரல் கொடுத்தது, எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியது கம்யூனிஸ்ட் கட்சிகள். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பல்வேறு முற்போக்குஜனநாயக அமைப்புகள் களமிறங்கினார்கள் என்றாலும் முன்னணி பாத்திரம் வகித்தது கம்யூனிஸ்ட் கட்சிகள். இது சனாதன சங்கிகளுக்கும் சாதியாதிக்கக் கும்பல்களுக்கும் ஏன் காவல்துறைக்கும் கூட கடும் ஆத்திரத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியதுதிருநெல்வேலி டவுனில் ஒரு பட்டியலினப் பெண்ணை குத்திக் கொலை செய்த வழக்கில் போராட்டம் நடத்திய மக்களிடம் குறிப்பாக அப்பெண்ணின்  பெற்றோர்களிடம் காவல்துறை கம்யூனிஸ்ட் கட்சியினரை போராட்டத்திற்குள் விட்டுவிடாதீர்கள் என்றே கூறியது. இந்தப் பின்னணியில்தான் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதைப் பார்க்க வேண்டும்.

சமூக நீதி காக்க வேண்டிய தமிழக அரசின் காவல் துறை சாதியாதிக்க ரவுடிக் கும்பல்களுக்கு ஆதரவாக நடந்துள்ளதுகாதல் திருமணத்தைசாதி மறுப்புத் திருமணத்தை ஆதரித்த பெரியார்சுயமரியாதைத்  திருமணத்தை சட்டப்படியானதாக்கிய அண்ணா, கலைஞர் ஆகியோரின் பெயரில்  ஆட்சி நடக்கும் போது சாதி கடந்த காதல்  திருமணத்திற்கு எதிராக சாதியாதிக்க வெறியர்கள் தைரியமாக வெளிப்படையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுவரை இல்லாத வகையில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள்ளேயே  வந்து காவல்துறையினரின் முன்பே  தாக்குதல் நடத்தியிருப்பதைப் பார்க்கும் போது சட்டம் ஒழுங்கு காவல்துறையின் கையில் இருக்கிறதாஅல்லது சமூக விரோதிகளின் கையில் இருக்கிறதாஎன்கிற கேள்வி எழுகிறதுஇந்தத் தாக்குதலைக் கண்டித்து நெல்லையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பாக முதல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுமார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள் வந்து தோழர்களைத் தாக்கிஅலுவலகத்தைச்  சூறையாடிய கயவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்அவர்கள் அனைவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும்சாதி வெறியர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் காவல்துறை அதிகாரிகள்காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்தமிழ்நாட்டில் சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்கள் மீதான கொலை வெறித் தாக்குதல்கள்படுகொலைகளைத் தடுக்ககடுமையான தண்டனைகள் வழங்கும்ஆணவப் படுகொலைகள் தடுப்பு  தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டுமென்ற இடது, முற்போக்குஜனநாயக சக்திகளின் நீண்ட கால கோரிக்கையை,நடப்புச் சட்டப் பேரவைத் தொடரிலேயே சட்டமாக இயற்ற வேண்டுமென திமுக அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் ஆரம்பத்திலேயே வன்கொடுமை தடுப்புச் சட்டம் போடப்படாததால்தாக்குதலில் ஈடுபட்ட பெண்களை ரிமாண்ட் செய்யாமல் பிணையில் விட்டுவிட்டது நீதிமன்றம். நாடு முழுவதும் எதிர்ப்புக்குரல்கள் வந்த பின்னர்சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கவிருக்கும் பின்னணியில்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டது.

     இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களால் சட்டமன்ற உறுப்பினர்களால் தமிழக சட்டமன்றத்தில், கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதுஆனால், அதிர்ச்சியளிக்கும் விதத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், சாதியாதிக்கஆணவப்படுகொலைகளைத் தடுப்பதற்காக தனிச் சட்டம் தேவையில்லை, ஏற்கனவே இருக்கக் கூடிய வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் இந்திய தண்டனைச் சட்டமுமே போதுமானதுஅவற்றைக் கறாராக அமல்படுத்தினால் போதும் என்று கூறினார். அதோடு கோகுல்ராஜ் வழக்கிலும் இன்னும் சில வழக்குகளிலும் அரசு எவ்வாறு விரைவாகச் செயல்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்  தந்தது என்றும் கூறினார்அவர் அவ்வாறு கூறிய மறுநாளே விருதுநகர் மாவட்டம் கோவிலான்குளத்தில், அருந்ததியர் இளைஞர் அழகேசன்பட்டியலின பள்ளர் சமூகப் பெண்ணை காதல் திருமணம் செய்ய முயன்றார் என்பதற்காக மிகக் கொடூரமாக கழுத்தை தனியாக அறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். பட்டியலின சமூகத்திற்குள்ளே இப்படியொரு கொடூரம் நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. சனாதனத்தின்பார்ப்பனியத்தின் சாதி வெறி மேலிருந்து கீழ் வரை எந்தளவிற்கு ஆழமாக ஊறிப் போய் இருக்கிறது என்பதை இச் சம்பவம் வெளிக் காட்டுகிறது.

காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் சாதி வெறியர்களால் உடனடியாகவோ அல்லது சில காலம் கழித்தோ கொலை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறபோதுஅதைத் தடுப்பதற்கான நடவடிக்கையாகத்தான் தனிச் சட்டம் கோரப்படுகிறதுஇருக்கிற சட்டத்தினால் எந்தப் பாதுகாப்பும் இல்லை என்பதுதான் எதார்த்தம்முதல்வர் அவர்கள் சொன்னது போல், வேகமான நடவடிக்கை விரைந்து தண்டனை என்பது மிகவும் தேவையானது என்றாலும், வாழ வேண்டியவர்கள் இளம் வயதிலேயே தங்கள் உயிரை இழக்கும் கொடூரத்தை எப்படித் தடுக்கப் போகிறது இந்த அரசுகாதல் திருமணம் செய்பவர்களுக்கு, அவர்களை ஆதரிப்பவர்களுக்கு உயிர்ப் பயத்தை ஏற்படுத்திசாதியை வைத்துப் பிழைப்பு நடத்தும் சாதிவெறிக் கயவர்களையும் இந்துத்துவ சக்திகளையும் எப்படிக் கட்டுப் படுத்தப் போகிறது இந்த அரசுசாதிமறுப்புத் திருமணத்தைக் காலங்காலமாக ஆதரித்து வருவது திமுக அரசு என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் முதல்வர்அந்தத் திருமணத்தைச் செய்தவர்கள் உயிருடன் இருந்து வாழ்க்கையை வாழ வழி செய்ய வேண்டாமா? இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் வளர்ந்து வந்து கொண்டிருக்கும்  தற்போதைய நிலையில்இவற்றை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தவில்லை என்றால்சமூக நீதி அரசு என்று சொல்வது  பொருளற்றுப் போகும்.

 ஜி.ரமேஷ்