தொடரும் நச்சு சாராய சாவுகள்;

தமிழ்நாடு அரசே பொறுப்பு!

கள்ளச் சாராயத்தை நோக்கி விரட்டும், டாஸ்மாக் சாராயத்தையும் அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.

      கள்ளக்குறிச்சி நச்சு சாராயத்தால் இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்சாவு எண்ணிக்கை கூடுதலாகும் என்று அஞ்சப்படுகிறது. நூற்றுக்கு மேற்பட்டவர்கள் சேலம்,  புதுச்சேரி, விழுப்புரம் என பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருணாபுரம் முழுவதுமே போர்க் களத்து மரணக் காட்சிகளாக உள்ளன. கடந்த ஆண்டு இதுபோல கள்ளச்சாராயத்தால் மரக்காணம்விழுப்புரம்) செங்கல்பட்டு பகுதிகளில் 23 பேர் நச்சு சாராயத்தால் இறந்து போயுள்ளனர்அதற்குப் பிறகும் அரசு காட்டியுள்ள அலட்சியமே இப்போது அதைவிடவும் அதிக எண்ணிக்கையில் நிகழ்ந்துள்ள கருணாபுரம் மரணங்களுக்கு காரணமாகும். தமிழ்நாட்டின் மிகப்பெரிய துயரமாக மாறி உள்ளது. காவல்நிலையம்நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவை இருக்கும் இடத்திலிருந்து 150 அடி தூரத்தில் இதுபோன்ற நச்சுச் சாராயம் வெள்ளம் போல் பெருகி ஓடியிருக்கிறதென்றால் அரசுதான் இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்கைகட்டி வேடிக்கை பார்த்த ஆட்சியர்காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் அரசுதான் இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். கல்ராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது தொடங்கி விற்பது வரை பெரும் தொழில் சங்கிலி செயல்பட்டு வந்துள்ளதுகாவல்துறை, அரசு நிர்வாகம்அரசியல்வாதிகள் என ஒரு விரிவான கூட்டணி செயல்பட்டுள்ளது தெரிகிறதுஇந்தப் பெருங்குற்றத்துக்கு காரணமான எவரும் தப்பிக்க விடப்படக் கூடாதுகடுமையாகத்  தண்டிக்கப்பட வேண்டும்இறந்து போனவர்கள் அனைவரும்  ஏழைகள்பெரும்பாலும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.தாக்குப்பிடிக்க முடிந்தவர்களுக்கு   டாஸ்மாக் சாராயம்ஏழைகளுக்கு நச்சுசாராயம் என்பதாக தமிழ்நாடு மாறியுள்ளது ஆகப் பெரிய அவலம்.

அணுஅணுவாகக் கொல்லும் அரசு சாராயத்துக்கும் அதிரடியாகக் கொல்லும் நச்சு சாராயத்துக்கும் தமிழ்நாடு அரசு ஒருசேர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சாராயத்தால் தமிழ்நாடு சமூக அநீதி மாநிலமாக மாறுவதை அரசு இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. இறந்தவர்களுக்கு  இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு சட்டப்பேரவை இனிமேல் இது போல் இரங்கல் தெரிவிக்காமலிருக்க சாராயம்போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க சட்டமியற்றிட வேண்டும்.

     20-06-2024 அன்று, கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டிகலியமூர்த்தி, மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் ஆறுமுகம்ஜான் பாட்சாவல்லமநாதன்கணேசன்,அம்மாசி, ராஜேந்திரன்கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ராஜசங்கர் உள்ளிட்டோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர்.26-06-2024 அன்று கட்சி மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பிபுரட்சிகர இளைஞர் கழக தலைவர் சுந்தர்ராஜன்பொதுச் செயலாளர் ஜிதனவேல் உள்ளிட்டோர் மருத்துவமனைசென்று மேலும் இறப்பு நிகழாமல் இருக்க தீவிர மருத்துவத்தை வலியுறுத்தினர்பாதிப்புக்கு ஆளான கருணாபுரம் குடியிருப்புக்கு சென்று மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

        ------------------------

  • முழுமையான மது விலக்கு உடன் அமுல்படுத்தப்படவேண்டும்

  • இறந்தவர் ஒவ்வொருவரது குடும்பத்துக்கும் ரூ. 50 லட்சம் இழப்பீடுஅரசு வேலை வழங்க வேண்டும்பிள்ளைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்
  • பார்வை இழப்பு உள்ளிட்ட உறுப்பு இழந்தவர்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்வேலைவாய்ப்புத்  திட்டங்களை ஏற்படுத்தித் தர வேண்டும்.
  • துயரச் சம்பவத்தின் போது பொறுப்பிலிருந்த ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பிற அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவேண்டும்;
  • கலால் துறை அமைச்சரை பதவிப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்.
  • அரசு அறிவித்துள்ள ஒருநபர் ஆணையம் குற்றக் கும்பலுக்கு துணை நின்ற அரசியல்வாதிகளையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும்!

------------------------------------