விவசாயிகள் விரோதகார்ப்பரேட் ஆதரவுப் பாதையில் மோடி 3.0 அரசாங்மும் செல்கிறது!*

சந்திரமோகன்

*விவசாயிகளை கொன்றவருக்கு விவசாய அமைச்சர் பதவி*:-

புதிதாக மத்தியில் பதவியேற்றுள்ள தேசிய சனநாயக கூட்டணி அரசாங்கம்மண்ட்சோர் விவசாயிகளின் ரத்தக்கறை படிந்துள்ள சிவராஜ் சிங் சவுகானை மத்திய விவசாய அமைச்சர் ஆக்கியுள்ளதுஅவர்மத்திய பிரதேச முதல்வராக இருந்த போதுதான் 2017ம் ஆண்டு ஜூன்அன்று மத்திய பிரதேசத்தில்  மண்ட்சோர் போராட்டக் களத்தில்  காவல்துறையால்  விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

தற்போது செயல்பட்டு வரும் எஸ்கேம்ஐக்கிய விவசாயிகள் முன்னணி தோன்றுவதற்கு முன்பு, நாடு முழுவதுமுள்ள போராடும் விவசாய சங்கங்களின் மேடையாக திகழ்ந்த AIKSCC -அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு வேளாண் விளைபொருள்களுக்கு C2+50% என்ற அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலைவிரிவான கடன் தள்ளுபடி ஆகியவற்றிற்காகவும் மற்றும் அதிகரித்து வரும் விவசாயிகளின் தற்கொலை போக்கை தடுக்க திறன்மிக்க அரசாங்க நடவடிக்கைகளை வலியுறுத்தியும் தொடர் போராட்ட இயக்கம் கட்டமைத்து வந்ததுஅதன் ஒரு பகுதியாக மத்திய பிரதேசம், மாண்ட்சோரில் போராடிய விவசாயிகள் மீது தடியடிதுப்பாக்கி சூடு நடத்தப்பட்டு ஆறு விவசாயிகள்  படுகொலை செய்யப்பட்டனர்இது நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியது.

அந்த விவசாயிகளின் ரத்தக்கறை படிந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு மத்திய விவசாய அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. மோடி 3.0 அரசாங்கத்தின்  இந்த முடிவுஅறுதிப் பெரும்பான்மையுடன் இருந்த முந்தைய  பாஜக ஆட்சிகளின் அதே ஆணவத்தையும், கார்ப்பரேட் ஆதரவு பயணத்தையும் வெளிப்படுத்துகிறதுபாஜக மட்டும் தனியாக இழந்த 63 இடங்களில் 60 இடங்கள்  உள்ளிட்ட மொத்தம் 159 கிராமப்புற மக்களவைத் தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து

தேசிய ஜனநாயகக் கூட்டணியும்பாஜகவும் பாடம் கற்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

*மோடி 3.0 அரசாங்கத்தின் பம்மாத்து:-*

தேசிய சனநாயக கூட்டணி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பரபரப்புடன் அறிவிக்கப்பட்ட "விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி வழங்கப்படும்! " என்ற அறிவிப்புபிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியில் நிலுவையில் உள்ள 20,000 கோடி ரூபாய் என்பதே ஆகும். இது விவசாயிகளின் குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.500 என்ற போதுமானதற்ற தொகையுடன் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டமாகும்இது விவசாயிகளை ஏமாற்றும்  அறிவிப்பாகும்இது, விவசாயிகளுக்கு  குறைந்தபட்ச ஆதரவு விலையான C2+50% யை கொடுக்காமல் ஏமாற்றவும், விவசாயத் துறையை கார்ப்பரேட் கையகப்படுத்தும் கொள்கைகளை மறைப்பதற்குமான மோசடி நாடகமும் ஆகும்.

தேசிய சனநாயக முன்னணி  அரசாங்க முதல் அமைச்சரவைக் கூட்டம், கடுமையான விவசாய நெருக்கடி மற்றும் விவசாயிகளின் தற்கொலை (இந்தியா முழுவதும் தினசரி 31 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்), நீண்டகாலமாக நிலுவையில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையான  C2+50% அடிப்படையிலான குறைந்தபட்ச ஆதாரவிலை - MSP,  கடன் தள்ளுபடிமின்சாரத்தை தனியார்மயமாக்குவதை ரத்து செய்தல், உற்பத்திச் செலவைக் குறைத்தல் மற்றும் பயிர் காப்பீடு மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதியம் உறுதி செய்தல் போன்ற விரிவான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எந்த முடிவும் எடுக்கவில்லை.

*போராட்டங்களுக்கு விவசாயிகள் தயாராக வேண்டும்!* :-

இந்திய விவசாயத்தில், மோடி அரசாங்கம் அமல்படுத்தி வரும் கார்ப்பரேட் கொள்கைகளில் மாற்றம் ஏற்படும் என்ற மாயை விவசாயிகள் மத்தியில் இல்லை.

தேர்தலுக்குப் பிந்தைய சூழ்நிலையை மதிப்பிடுவதற்காகவும்கார்ப்பரேட் தாக்குதலில் இருந்து விவசாயத்தைக் காப்பாற்றவும்மோடி அரசின் கொள்கைகளில் மாற்றத்தை வற்புறுத்தும் போராட்டத்துக்குப் புத்துயிர் அளிக்கவும் செயல்திட்டத்தை ஆலோசிக்கவும், தனது பொதுக்குழுவை ஜூலை 10 ல்  புது தில்லியில் நடத்த எஸ்கேஎம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி திட்டமிட்டுள்ளது; அதேபோலநமது AIKM-  அகில இந்திய விவசாயிகள் மகாசபை தனது தேசிய கவுன்சில் கூட்டத்தை ஆகஸ்டு 3,4 தேதிகளில் பஞ்சாப் மாநிலம் மான்சாவில் கூட்டுகிறதுதொழிலாளர்கள்சிறு வணிகர்கள் ஆகியோருடன் இணைந்துநாடுமுழுவதும் விரிவடைந்ததுடிப்பான  போராட்டங்களை கட்டமைக்க இந்திய  விவசாயிகள் தயாராக வேண்டும்.