கட்சி ஆவணங்கள்

சுற்றுச்சூழல், காலநிலை நெருக்கடி  ( 2 )

(பிப்ரவரி 16-20ல் பாட்னாவில் நடைபெற்ற 11வது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்)     …………………………………………………….. (சென்ற இதழ் தொடர்ச்சி)

6. தற்போது, உலக அளவில் 3.3-3.6 பில்லியன் (330-360 கோடிமக்கள் அதிதீவிர காலநிலை பாதிப்பிற்கு ஆட்படும் நிலையில் வாழ்கின்றனர்அகதிகளுக்கான அய்க்கிய நாடுகளின் உயர்மட்ட ஆணையரது அறிக்கைபடி, 2008 லிருந்து ஒரு ஆண்டுக்கு சராசரியாக 21.5 மில்லியன் (2 கோடி 15 லட்சம்மக்கள் வெள்ளம்புயல்காட்டுத்தீ, அதிதீவிர வெப்பநிலை போன்ற வானிலை தொடர்பான நிகழ்வுகளால் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்து வருகிறார்கள்வரும் பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை, மேலும் எழுச்சியுறும்காலநிலை மாற்றத்தாலும்இயற்கைப் பேரிடர்களாலும் உலக அளவில் இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை சில நூறு கோடிகளை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதுஉலக காலநிலை ஆபத்துக் குறியீடு 2021 இன் படிகாலநிலை மாற்றத்தால் மிக அதிக பாதிப்படையும் முதல் 10 நாடுகளில் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளதுடிசம்பர் 2020 இல், 'காலநிலை மாற்றத்தில் செயலற்று இருப்பதற்கான விலை: இடம்பெயர்தலும் துயர்மிகு புலம்பெயர்தலும்என்று தலைப்பிடப்பட்ட அறிக்கை, 2050 வாக்கில் காலநிலை பேரிடர்களால் 4.5 கோடி இந்தியர்கள் தங்களது வீடுகளை விட்டு புலம்பெயரும் நெருக்கடிக்கு ஆளாவார்கள் என்றும்தற்போது இந்தியாவில் 1.4 கோடி மக்கள் சுற்றுச்சூழல் இடையூறுகளால் இடம்பெயர்கிறார்கள் என்றும் மதிப்பிட்டுள்ளது. சமத்துவமின்மைமோதல்மருத்துவம் போன்ற அடிப்படை சேவைகளைப் பெற இயலாத நிலை ஆகியவை தீங்குகளுக்கு ஆட்படுவதை அதிகரிக்க மட்டும் செய்வதில்லைகாலநிலை மாற்றத்திற்கு சமூகங்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் திறனையும் சுருக்குகிறது.

7. துயரம் என்னவெனில், முதலாளித்துவத்தால் தூண்டப்படுகிற இந்த காலநிலை மாற்றத்தை வெளிப்படையாக மறுக்கிற வலதுசாரிஅடிப்படைவாத சக்திகளை நாளும் பொழுதும் காண்கிறோம். இப்படி மறுத்தும்இதுகுறித்து சமூக ஊடகங்களில் சதி தத்துவங்களை பரப்பியும் வருகிற டொனால்ட் ட்ரம்ப்போல்சனொராநரேந்திர மோடிவாக்லேவ் க்லாஸ் இது போன்ற இன்னும் பல தேசத் தலைவர்களால் இத்துயரம் ஊதிப் பெரிதாக்கப்படுகிறதுபோலி அறிவியல், புனைவுகள்கெடுநோக்குடன் திரிக்கப்பட்ட தகவல்கள் ஆகியவை அறிவியலுக்கெதிரான மனோநிலையை பரப்பப் பயன்படுத்தப்படுகிறதுஅமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிரேசிலின் முன்னாள் அதிபர் போல்சனொரா போன்ற இன்னும் பல தலைவர்களும் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் மக்களின் வனவாழ்வாதார உரிமைகளுக்கு வெளிப்படையாக ஆதரவளித்து, கார்ப்பரேட் இலாபவெறிக்காக அமேசான் காடுகளை அழிக்கும் வெட்கக்கேடான முயற்சியை கண்டித்ததொழிலாளர் கட்சி தலைவர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா அவர்களை தேர்ந்தெடுத்துவன அழிப்புபெருநிறுவன ஆதரவு தலைவர் போல்சனொராவை நிராகரித்த பிரேசில் மக்களின் செயல் போற்றத்தக்கது. இந்தியாவில் ஒன்றியத்திலும்மாநிலங்களிலும் அதிகாரத்திலுள்ள பாஜக அரசாங்கம் காலநிலை மாற்றத்தை கையாளுவதற்கான கொள்கைகளில் அறிவியலற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் காலநிலைக்கும்  மேலும் மேலும் சீரழிவு ஏற்பட வழிவகுப்பதையும் அப்பட்டமாக பின்பற்றி வருகிறது.

 

8. காலநிலை மாற்றத்தை மறுப்பவர்களுக்கு எதிராகப் போராடுவதற்கு கூட்டணிகளையும் அணிகளையும் கட்டமைத்து காலநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்தும்ஏழைகள் சார்பு கொள்கைகளை இயற்றுவதை உறுதிசெய்ய வேண்டிய தேவை நமக்கு உள்ளதுகாலநிலை சீரழிவுபூமியின் வளங்களை சுரண்டுவதில் உள்ள வர்க்க கோணத்தை புரிந்துகொள்ள வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்தொழில்வளமிக்க, வளர்ந்த நாடுகள் உலகின் மற்ற நாடுகளை விட அதிகரித்த அளவில் இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளன என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகும்இந்த வளர்ந்த நாடுகளிலும் கூடஅந்த நாடுகளின் வசதி படைத்தவர்களை விட ஏழை எளிய மக்கள்தான் அதிகளவு காலநிலை நெருக்கடியை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர் என அங்கீகரிப்பதும்கூட முக்கியமானதுகாலநிலை மாற்றத்தால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களோடு-காலநிலை நெருக்கடியின் கடுமைகளைமற்றவர்களைவிட கூடுதலாக எதிர்கொண்டு தாங்கிக்கொள்ளும் ஏழைகள்பல நிறத்தவர்கள்விளிம்பு நிலையிலுள்ளவர்கள்பூர்வகுடி மக்கள் ஆகியவர்களோடுஎல்லைகள் தாண்டிய சுற்றுப்புறச்சூழல் ஒருமைப்பாட்டைக் கட்டமைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.  

9. காலநிலை நெருக்கடி, சமத்துவமின்மையால் வேகம்பிடிக்கிறதுகார்பன் வெளியேற்றத்தி்ல் நாடுகளுக்கு இடையே உள்ள பெரும் வேறுபாட்டை மறந்துவிடக்கூடாது; 'உயிர் பிழைத்திருப்பதற்கானஉமிழ்தலுக்கும் 'ஆடம்பரத்துக்கான' உமிழ்தலுக்கும் இடையிலான வேறுபாட்டையும் பிரித்தறிய வேண்டும். இந்தியாவின் ஒரு தனி நபருக்கான பசுமை வாயு உமிழ்வு (நில பயன்பாடுநிலப் பயன்பாடு மாற்றம்வனவியல் -- எல்யுஎல்யுஎஃப் -- உள்ளிட்ட) 2.4 டிசிஓ2 (டன் அளவீடுகளில் கரியமிலவாயுவின் நிறை) என்பது உலக சராசரியான 6.3 டிசிஓ2ஈ விட மிகக் குறைவானதாகும்இதுஅய்க்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (சிஓபி27) எகிப்தில் நடப்பதற்கு சற்று முன்பு வெளியிடப்பட்ட "எமிசன்ஸ் கேப் ரிப்போர்ட் 2022: த குளோசிங் விண்டோவில் (மூடிக்கொள்ளும் திறப்புவெளிப்படுத்தப்பட்டதுஇந்த அளவுகளில் 14 டிசிஓ2ஈ எனஅமெரிக்கா தொடர்ந்து மிக அதிகமாக வெளியிட்டு கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ரஷ்ய கூட்டமைப்பு  13 டிசிஓ2ஈ அளவையும், 9.7 டிசிஓ2ஈ அளவை சீனாவும், 7.5 டிசிஓ2ஈ அளவை பிரேசிலும் இந்தோனேசியாவும்,  7.2 டிசிஓ2ஈ அளவை அய்ரோப்பிய ஒன்றியமும் கொண்டுள்ளனஜி20 உறுப்பினர்களிடையே தனி நபர் உமிழ்வு அளவுகளில் வேறுபாடு: இந்தியாவின் உமிழ்வுஜி20 சராசரியில் கிட்டத்தட்ட பாதியளவு தான்; அதேநேரத்தில்சவுதி அரேபியா ஜி20 சராசரியில் இரு மடங்குக்கும் அதிகமான அளவைத் தொட்டுவிட்டது என அந்த அறிக்கை கூறுகிறது. வரலாற்று ரீதியாக ஒட்டுமொத்த கரியமிலவாயு உமிழ்வில் (எல்யுஎல்யுஎஃப் தவிர்த்துஇந்தியாவின் பங்கு 3% ஆகும். அதேநேரத்தில், 1850 திலிருந்து 2019 வரை மொத்த புதைபடிவ கரியமிலவாயு உமிழ்வில் அமெரிக்காஅய்ரோப்பிய ஒன்றியத்தின் பங்கு முறையே 25% மும் 17% மும் ஆகும்சீனாவின் பங்கு 13%, ரஷ்ய கூட்டமைப்பு 7%, இந்தோனேசியா, பிரேசில் ஒவ்வொன்றும் 1%. 1850 திலிருந்து 2019 வரை புதைபடிவ எரிபொருள்தொழிற்சாலை உமிழ்வில் மிகக் குறைவான வளர்ச்சி பெற்ற நாடுகளின் பங்கு வெறும் 0.5% மட்டுமே.

10. கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதில் முதன்மை பொறுப்பு முதல் உலகிற்கு இருக்கிறது என்று அவர்களைப் பொறுப்பாக்கும் அதேசமயம்சுற்றுச்சூழலுக்கு பொறுப்புடைய உள்நாட்டு கொள்கைகளை வடிவமைக்குமாறு இந்திய அரசாங்கத்தை பொறுப்பாக்கிடவும் வேண்டும். ஒருபுறம், 2021 கிளாஸ்கோ மாநாட்டில், 2030 வாக்கில் நாட்டின் 50% ஆற்றல் தேவைகளை புதுப்பிக்கத்தக்க வளங்களில் இருந்து பெறுவோம் எனவும், 2070 வாக்கில் நிகர சுழிய வெளியேற்ற இலக்கை எட்டுவோம் எனவும் இந்தியா உறுதி கொடுத்ததுஆனால், அதற்கு எதிரான அசைவுகள் செயல்பாட்டில் வெளிப்படுவதைக் காணலாம். உதாரணமாகடிசம்பர் 2019 இல், கிழக்கத்திய மாநிலமான ஒடிசாவின் தலபிராவில் அமைக்கப்படும் திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கத் திட்டங்களுக்கு வன நிலங்களை மாற்றிக் கொடுக்க மோடி அரசாங்கம் அனுமதி வழங்கிய பிறகுதோராயமாக 40,000 மரங்கள் வெட்டப்பட்டதுடன்நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் இடம்பெயரக் காரணமானது. மேற்கு வங்கத்தின் தியோச்சா பச்சமியில்  புதிய திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கம் ஒன்று அமைக்கப்பட உள்ளதுஆசியாவிலேயே மிகப்பெரியதும் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரியதுமான இந்த நிலக்கரிச் சுரங்கம்சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களை அவர்களது நிலத்திலிருந்தும் வாழ்வாதாரத்திலிருந்தும் கலாச்சாரத்திலிருந்தும் வெளியேற்றிவிடும்கட்டுப்பாடுகளை எளிதாக்கியபிறகுஎல்லா உள்ளூர்உலக நிறுவனங்களுக்கு சுரங்கம் தோண்டுவதற்கு நிலக்கரித் துறையை திறந்துவிடும், நிலக்கரிச் சுரங்கங்கள் (சிறப்பு விதிமுறைகள்சட்டம் 2015 அய் திருத்த ஒரு அவசரச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதுஇந்த புதிய விதிமுறைகளினடிப்படையில் 41 நிலக்கரித் தொகுதிகளுக்கான ஏலத்தை சமீபத்தில் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்இதில் பலவும் மத்திய இந்தியாவின் அடர்ந்த வனங்களில் அமைந்துள்ளன.

-தொடரும்