காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகத்தில் சாதிப் பாகுபாடு! 

தியாகி இமானுவேல் சேகரன் பற்றிய ஆய்வுக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை அனுமதி மறுத்திருக்கிறது. வரலாற்றுத்துறை மாணவி வைஷ்ணவி, 2022 -2024 ஆம் கல்வி ஆண்டில்தனது ஆய்வுக் கட்டுரைக்காகசுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்கள்’ என்ற தலைப்பின் கீழ் தியாகி இமானுவேல்சேகரன் பற்றி ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தார்அதனை உதவிப் பேராசிரியர் பரந்தாமனிடம் அறிவித்தார். சாதித்தலைவரைப் பற்றி எழுத வேண்டாமென பரந்தாமன் கூறிவிட்டார். இமானுவேலை சாதித் தலைவரென்று முத்திரை குத்திய பரந்தாமனின் பேச்சு மாணவிக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்ததுஆனாலும் அதே தலைப்பில்தான்கட்டுரையை எழுதப்போகிறேன்” எனச் சொல்லி விட்டார்நான் வழிகாட்டியாக வந்தால் இத்தலைப்பை அனுமதிக்க மாட்டேன் என்று கூறி அவரது சாதி வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மாணவி வைஷ்ணவி தனது ஆய்வுக்கான தரவுகளைத் திரட்டி கட்டுரையை உருவாக்கிட உறுதியுடன் தயாராவதை அறிந்த பரந்தாமன் தனது சாதியைச்சேர்ந்த மாணவர் சத்தியமூர்த்தியை வைஷ்ணவிக்கு எதிராக திருப்பினார். அந்த திட்டத்தின்படிபிப்ரவரி மாதம்அறிவியல் தினத்தன்றுசத்தியமூர்த்தி  கடுமையான வார்த்தைகளைக் கூறி வைஷ்ணவியை அடித்தார். அந்நேரத்தில் உதவிப் பேராசிரியர் பரந்தாமன் வகுப்பறைக்குள்தான் இருந்திருக்கிறார்வகுப்பறைக்குள் சென்று பரந்தாமனைச் சந்தித்த மாணவர் சத்தியமூர்த்தி மீண்டும் வைஷ்ணவியை தாக்க முற்பட்டிருக்கிறார். பெண் துணைப் பேராசிரியர்கள் சாந்திராதா மூலம் வைஷ்ணவியை தனிமைப்படுத்தும் முயற்சியையும் மேற்கொண்டிருக்கிறார்.

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத வைஷ்ணவி பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் பிரச்சனையைக் கொண்டு சென்றார்பிரச்சனைகளை கேட்டறிந்த துணைவேந்தர்ஜி. ரவி, 44 துறைகள் உள்ள பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பது எப்படி சாத்தியம் என்று கேட்டு தனது இயலாமையை தெரிவித்தார். ’சாதி இரத்தத்திலேயே ஊறிக் கிடக்கிறதுஎன்ற தனது வருத்தத்தையும் தெரிவித்திருக்கிறார்அப்படியானால் அந்த ரத்தத்தைச் சுத்தப்படுத்த வேண்டாமாஎன மாணவி பகுத்தறிவு கோபத்தோடு கேட்டிருக்கிறார்நான் கண்டிக்கிறேன் என  துணைவேந்தர் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், எஸ்சி\எஸ்டி செல்லின் உள்விசாரணை அதிகாரி வேதராஜ் மாணவி வைஷ்ணவியை விசாரணைக்கு அழைத்துள்ளார்வேதராஜிடம் நடந்த விபரங்களை மாணவி கூறியுள்ளார். அதிகாரி வேதராஜ் இதில் எந்தப் பிரச்சினையுமே இல்லைபரந்தாமன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் என்றால் சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்மாணவியோசாதிப்பாகுபாடு குறித்த தனது புகார் பற்றி மட்டும் விசாரியுங்கள்புகாரளிக்காத பாலியல் துன்புறுத்தல் பற்றி விசாரிப்பது பாதிக்கப்பட்டவர் பெண்ணாக இருப்பதாலா? எனத் துணிச்சலுடன் எதிர்க் கேள்வி எழுப்பியிருக்கிறார். 5 மாத காலமாக பலவித மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட வைஷ்ணவி மனம் தளராது ஆய்வறிக்கையின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளார்.

05.07.2024 விசாரணை முடிவு பற்றி பதிவாளர் கையொப்பமிட்ட அறிக்கை மாணவிக்கு கிடைத்தது. அறிக்கை வரலாற்றுத்துறையில் எந்தவொரு சாதிப்பாகுபாடும் இல்லையென்று கூறியது. வைஷ்ணவி ஆய்வுக்கு எடுத்ததியாகி இமானுவேல்சேகரன் பற்றி மாணவர்களுக்குத்  தெரியும் என்பதால் அந்தத் தலைப்பு வேண்டாம் என பரந்தாமன் கூறினாரே தவிரசாதியரீதியான எண்ணத்தில் சொல்லவில்லை என்று அறிவுக்குப் புறம்பான அந்த அறிக்கை கூறியதுவரலாற்றுத்துறை சிறப்பாக செயல்படுவதாக விசாரணையில் மாணவர்கள் கருத்து தெரிவித்து உள்ளதாகவும் அறிக்கை கூறியதுமாணவி தனது ஆய்வுத் தலைப்புஇறுதி நிலையில் உள்ளதுஇதுவே, பல்கலைக்கழகத்தில் எந்தச் சாதிப்பாகுபாடும் இல்லை என்பதைக் காட்டுவதாகவும் அறிக்கை முடிவுக்கு வந்திருந்தது கண்டுவிசாரணை முடிவு உண்மைக்குப் புறம்பானது என தெளிந்த மாணவி மாவட்ட ஆட்சியாளர்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மனித உரிமை ஆணையர் ஆகியோருக்கு 14.07.2024 அன்று புகார் மனுக்களை அனுப்பி வைத்தார். 24.7.2024 அன்று தேசிய எஸ்சி ஆணையத்திற்கு மீண்டும் மேல் முறையீடு செய்துள்ளார்.

தேவகோட்டை வட்டம், பூதவயல் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் வைஷ்ணவி குடும்பத்திற்கும் எதிரிகள் தொல்லைகள்அச்சுறுத்தல் அளித்து வருகின்றனர். மாணவியின் தந்தை நடத்திவரும் மீன்குட்டைகளில் விஷம் வைத்து மீன்களை சாகடித்துள்ளனர்.

மாணவிக்கு ஆதரவாக, நீதிக்கான மக்கள் இயக்கம்அகில இந்திய மாணவர் கழகம்கல்வியாளர்கள், சிவில் உரிமை களப்பணியாளர்கள் குரலெழுப்பி வருகின்றனர். வரும் செப்டம்பர்அன்றுகாரைக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளன. 1.12 லட்சம் மாணவர்களுடன் உலக நாடுகளோடு ஒத்துழைப்பு கொண்டுள்ள 39 ஆண்டு வயது கொண்ட அழகப்பா பல்கலைக்கழகம்இயற்கையான சுற்றுச்சுழலும் மாணவர் நட்பு கல்விச் சூழலும் கொண்ட பல்கலைக்கழகம் என அறிவித்துக்கொள்கிறதுவைஷ்ணவி எதிர்கொண்ட துன்புறுத்தல் இந்த இரண்டின் மீதும் கேள்வி எழுப்புகிறது. புகழ்பெற்ற கல்வியாளர்களைக் கண்ட பல்கலைக்கழகம் கல்விச் சுதந்திரம் இல்லாமலிருக்கிறது. பல்கிப்பெருகும் சாதிச்சூழலால் உறைந்து போயிருக்கிறதுஇது கல்விக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல்பல்கலைக்கழகம் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

மாணவியின் புகாரின் அடிப்படையில் அரசுக்குத் தெரிவிக்கும் கோரிக்கைகள்

1.         சாதியப் பாகுபாட்டோடு தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் ஆய்வுக் கட்டுரையை எழுத அனுமதி மறுத்த பேராசிரியர் பரந்தாமன் மீது காவல்துறை எஸ்சி\எஸ்டி வழக்கின் கீழ் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்பரந்தாமன், மாணவன் சத்தியமூர்த்தி மீது மாணவியை தாக்கிய குற்றத்திற்காக கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2.         விசாரணை என்ற பெயரில் பாதிக்கப்பட்ட மாணவியை நிற்க வைத்தும்அறைக் கதவை அடைத்தும் விசாரணை செய்த வேதராஜ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.         துறைத்தலைவர், பாதிக்கப்பட்ட மாணவியின் விசாரணைக்கு விதிப்படி ஒரு பெண் உதவிப் பேராசிரியரை அனுமதிக்காமலும்விசாரணையின் போது அக்கறையுமின்றி இருந்துள்ளார். விதி மீறல் குற்றத்துக்காக துறைத்தலைவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.         உதவிப் பேராசிரியர் பரந்தாமனுக்கு ஆதரவாகவும் மாணவி வைஷ்ணவிக்கு எதிராகவும் செயல்பட்டுள்ள பெண் உதவிப் பேராசிரியர்கள் சாந்திராதா இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5.         அழகப்பா பல்கலைக் கழகத்தினுள்ளே ஆசிரியர்களும் மாணவர்களும் பல்வேறு சாதியப் பிரிவுகளாகவே தனித் தனியாக இயங்கி வருவதைக் களைந்து ஒற்றுமையை ஏற்படுத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6.         அரசு அதிகாரிகள்பல்கலைக் கழக ஆசிரியர்கள் சாதியப் பாகுபாட்டோடு நடந்து கொண்டால் துறை சார்ந்த நிர்வாக விசாரணைக்குப் பின் தான் எஸ்சி \எஸ்டி வழக்கு பதிய முடியும் என்ற நடைமுறை மாற்றப்பட்டு நேரடியாக எஸ்சி\எஸ்டி வழக்கைப் பதிவு செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7.         பல்வேறு அரசு நிறுவனங்களிலும் எஸ்சி\எஸ்டி செல் என்பது துறைரீதியான விசாரணை என்ற பெயரில் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நிலைமை நீடிப்பதை கண்காணித்து அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்சாதிய பாகுபாடுதீண்டாமை, சாதிவிலக்கம்வன்முறை தொடர்ந்து நடக்கும் கல்வி நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8.         மாணவி வைஷ்ணவியின் பிரச்சினைக்குப் பின்தான், பெண்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் செல் அழகப்பா பல்கலைக் கழகத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தின் இதுபோன்ற நிர்வாகக் குறைகளைக் கண்டறிய அரசு அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கண்காணிப்புக்குழு ஒன்று அமைத்திட வேண்டும்.

-.சிம்சன்;