புதுச்சேரியில் மெல்லத் தமிழ் இனி சாகும்?

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

என்று பாடிச்சென்ற புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் பிறந்ததமிழ் வளர்த்த புதுச்சேரி மண்ணில் இன்று தமிழ் படிக்கதமிழ் வழியில் கல்வி கற்க வழியின்றிச் செய்துள்ளது என் ஆர் காங்கிரஸ்பாஜக கூட்டணி அரசுபுதுச்சேரி மாநிலத்தின் மக்கள் தொகை 17 லட்சம்இங்கு 2022 ஆண்டு கணக்குபடி அரசு பள்ளிகள் 422, தனியார் பள்ளிகள் 314 உள்ளனமாணவர்களைப் பொறுத்தவரை 97368 ஆண்கள். 1,58,178 பெண்கள். 555 முன் ஆரம்பப் பள்ளிகளும் உள்ளனபுதுச்சேரி விடுதலை பெற்றபின் ,புதுச்சேரிகாரைக்கால் பகுதிகள் தமிழ்நாடு பள்ளிக்கல்வி வாரியத்திலும் மாகி கேரள பள்ளிக் கல்வி வாரியத்திலும் ,ஏனம் ஆந்திர மாநில பள்ளிக்கல்வி வாரியத்திலும் இணைக்கப்பட்டிருந்தனஅரசு பள்ளிகள் அனைத்திலும் தமிழ்மலையாளம்தெலுங்கு பயிற்று மொழிகளாக இருந்தன. 2005 ஆம் ஆண்டில் புத்தொளிப் பள்ளிகள் (Smart schools) என்ற வகையில் சில அரசு பள்ளிகளில்  தனியார் பள்ளிகள் போல் ஆங்கில வழி கல்வி புகுத்தப்பட்டதுதொடர்ந்து 2008- 2009 கல்வி ஆண்டில் சுமார் 80 அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி புகுத்தப்பட்டது. 2010 ஆண்டு வரை அரசு பள்ளிகளில் தாய் மொழியே பயிற்று மொழியாக இருந்தது. 2010 - 2011 கல்வியாண்டு முதல் திடீரென்று அன்றைய முதல்வர் ரங்கசாமி ஆணையின்படி முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை  ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியத் திட்டப்படி ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதுஆனால் அது வெற்றியடையாததால் 2014 ஆண்டில் திரும்பப் பெறப்பட்டதுமீண்டும் 2019- 2020 கல்வி ஆண்டில் ஆறுஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின்படி ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டதுபின்பு 2022- 2023 ஆண்டு முதல் 9  மற்றும், 11 ஆம்  வகுப்புகளுக்கு  ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டதுதற்போது 2024 - 2025  கல்வி ஆண்டிலிருந்து அனைத்து அரசு பள்ளிகளும்  ஒட்டுமொத்தமாக நடுவண் இடைநிலைமேல்நிலைக் கல்வி வாரிய  பாடத்திட்டப்படி ( CBSE) ஆங்கில பயிற்று மொழி கல்வித் திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனஇதன்மூலம் புதுச்சேரி அரசு பள்ளிகளில் தாய்மொழி பயிற்று மொழிதமிழ்மலையாளம்தெலுங்கு வழியில் கற்றல்என்பது இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தமிழ்மலையாளம்தெலுங்கு ஒரு மொழிப் பாடமாக மட்டுமே உள்ளன. 10, 11, 12 வகுப்புகளில் தாய்மொழி ஒரு மொழிப் பாடமாக கூட இல்லைகட்டாய மொழிப்பாட திட்டத்தை நடுவண் இடைநிலைமேல்நிலை கல்வி வாரியம் முழுவதுமாக நீக்கிவிட்டது.

நடுவண் இடைநிலைமேல்நிலை கல்வி வாரியத் திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகள் மற்றும் கேந்திர வித்யாலயாநவோதயா என்று அழைக்கப்படும் ஒன்றிய அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தாய் மொழியை கட்டாயமாக படிக்காமலே கல்வி கற்க முடியும்இனி தாய்மொழி பயிற்று மொழியாகவும் இருக்காதுமொழிப்பாடத்தில் தாய்மொழி கட்டாயம்  இல்லை என்கிறபோதுதமிழ் மொழி வெறும் பேச்சு மொழியாக குறுகிவிடும்பாஜகவின் சதித்திட்டமான   “ஒரே நாடு ஒரே மொழி” புதுச் சேரியில் அமலுக்கு வந்துள்ளதுஅதாவது மோடி அரசின் பிஎம்ஸ்ரீ திட்டம் அமலுக்கு வந்துள்ளதுஇது தாய்மொழிக் கல்வியை முழுவதுமாக நிராகரிப்பதுஇந்தியையும்வடமொழியையும்  திணிப்பதுஇது  தாய்மொழியை மட்டுமே அறிந்த ஒடுக்கப்பட்டதாழ்த்தப்பட்டபழங்குடியின மக்களை கல்வி கற்பதிலிருந்து ஒதுக்கி வைக்கும்.

கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டில் புதுச்சேரியில் தமிழுக்கு இருள் சூழ்ந்து வருகிறதுஇதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாதுதாய் மொழிக்கெதிரானதமிழ் மொழிக்கெதிரான சங்கிகளின் சதியை முறியடிக்கஇங்குள்ள தமிழர் ஒன்றாதல்” வேண்டாமா?

-சோபா