இலங்கையில் நடந்துள்ள அரசியல் மாற்றத்தை  வரவேற்போம்!

இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்பு  மக்களின் பிரதிநிதியாக  இந்த அரசாங்கம் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்!

     இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை இகக(மாலெ) வரவேற்கிறதுபொருளாதார நெருக்கடிமாபெரும் மக்கள் போராட்டங்கள்இலங்கையின் இரத்தம் தோய்ந்த கடந்த கால வரலாறு ஆகியவற்றின் பின்னணியில் மாற்றத்துக்கான வெகு மக்களின் தாகத்தை பிரதிபலிக்கிற வகையில் தேசிய மக்கள் சக்தி ( NPP) இயக்கத்தின் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றுள்ளதை  இகக (மாலெவரவேற்கிறது. இந்த மாற்றமானது  ஒரு நிலையானமக்கள் சார்பு பொருளாதாரம்கூச்சலும் குழப்பமுமற்ற அமைதியான சூழல்  நிலவக்கூடிய தீவாக இருக்க வேண்டும் என்ற இலங்கை மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளையும் இலங்கை மக்களின் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டிய பெரும் பொறுப்பை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் கையில்  மக்கள் ஒப்படைத்துள்ளார்கள்.

     ஜேவிபியும் அநுர குமார திசநாயகவும் மக்களிடத்தில்  நம்பிக்கைகளை உண்டாக்கினார்கள். தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்கள்ஜேவிபி, முக்கிய அங்கம் வகிக்கக்கூடிய தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் கொள்கைப் பிரகடனமானது நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படக்கூடிய மற்றும்  ஊழல்வாதிகளாக கண்டறியப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமையை நிறுவனமயப்படுத்துவது உள்ளிட்ட ஊழலை வேரோடு பிடுங்கி எறிந்திடும்  வலுவான நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்த அதானி உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும் ஜேவிபி வாக்குறுதி கொடுத்துள்ளதுமுக்கியமாக சர்வதேச நிதி நிறுவனம் (IMF), உலக வங்கி (WB)ஆகியவற்றுடனான தமக்கு சாதகமற்ற கடன் நிபந்தனைகள் மீது மறு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற உத்தரவாதங்களும் இருக்கின்றன.

     மேலும், பல பத்தாண்டுகளாக ஓரங்கட்டப்பட்டதுன்புறுத்தல்களுக்குள்ளான, அரசே தலைமை தாங்கி நடத்திய போர் குற்றங்களையும்விடுதலைப்புலிகள் கிளர்ந்தெழுந்தபோது  நடத்தப்பட்ட சட்டத்துக்கு புறம்பான சிங்கள பேரினவாத வன்முறைகளையும் எதிர்கொண்ட  தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் நலன்களும் அடையாளமும் பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டிருக்கிறது.

 ஜேவிபியின் கடந்த கால சிங்கள மேலாதிக்க அணுகுமுறை  நடவடிக்கைகளும் தேர்தலின் போதும் கூட அது நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளாததும்பன்மைத்துவத்தை உயர்த்திப் பிடிப்போம் சிறுபான்மையினர் நலன் காக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி இயக்கம்  வாக்குறுதி அளித்திருந்தாலும்கூட  இலங்கைத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஜேவிபியின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றனசிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது என்பது இப்போது புதிய அதிபர் மற்றும் அரசாங்கத்தின்  கையில்தான் உள்ளது.

     இலங்கையின் நிலத்தையும்  நீரையும் சர்வதேச சக்திகள் தங்களது போர்த்தந்திர தகிடுதித்தங்களுக்குப் பயன்படுத்திட இலங்கையின் புதிய அரசாங்கம் அனுமதிக்காது என எதிர்பார்க்கிறோம்.

     இந்தியஇலங்கை எல்லைப் பகுதியில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை இராணுவத்தால்  துன்புறுத்தப்படுகிறார்கள்கைது செய்யப்படுகிறார்கள்புதிய அதிபர் பதவியேற்ற பின்னரும்கூட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்வருங்காலத்தில் இந்தத் துன்புறுத்தல்களுக்கு அச்சுறுத்தல்களுக்கு  கைது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென புதிய  அதிபரை கேட்டுக் கொள்கிறோம்.

     மோடி அரசாங்கம்இலங்கை மக்களின் விருப்பத் தேர்வை மதிக்க வேண்டும் என்றும்இந்தியாவிற்கு தெற்கேயுள்ள பக்கத்து நாட்டுடன் பரஸ்பர நட்புபிராந்திய ஒத்துழைப்பு என்ற உணர்வின் அடிப்படையில் நெருங்கிய பிணைப்பை வளர்க்க வேண்டுமென்றும் நாம் எதிர்பார்க்கிறோம்.

 

                                               இகக (மாலெவிடுதலை

                                                 மாநிலக் குழு

                                                   தமிழ் நாடு.